பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

08:29, 17 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்

பெத்ரோ ஆல்வாரெசு காப்ரால் (Pedro Álvares Cabral,1467 அல்லது 1468 – ஏறத்தாழ 1520) போர்துகேய பெருமகன், படைத்துறை ஆணைத்தலைவர், கடலோடி மற்றும் தேடலாய்வாளர் ஆவார். இவரே பிரேசிலைக் கண்டுபிடித்ததாகக் கருதப்படுகிறார். தென் அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரையை முதன்முதலில் முழுமையாக தேடலாய்ந்த பெத்ரோ இதனை போர்த்துக்கல்லிற்கு உரிமை கோரினார். காப்ராலின் இளமையைப் பற்றி சரியானத் தரவுகள் கிடைக்காதபோதும் இவர் ஓர் சிறிய கோமகன் குடும்பத்திலிருந்து வந்தவர் என்றும் நல்ல கல்வியைப் பெற்றவர் என்றும் அறியப்படுகிறது. 1500இல் வாஸ்கோ ட காமாவின் கண்டுபிடிப்பை அடுத்து இந்தியாவிற்கு செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பயணத்தின் நோக்கமாக மதிப்புள்ள கறிமசால் பொருட்களுடன் திரும்புவதும் இந்தியாவுடன் வணிகத் தொடர்பை நிலைநிறுத்துவதுமாக இருந்தது. அராபியர், துருக்கியர்கள் மற்றும் இத்தாலியர்களின் ஏகபோக உரிமைக்கு மாற்றாக இந்த ஏற்பாட்டை போர்த்துக்கல் கருதியது. 1497இலேயே, வாஸ்கோ ட காமாவின் கடற்பயணத்தின்போதே, தென்அத்திலாந்திக்குப் பெருங்கடலின் மேற்கே நிலப்பரப்பின் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த போதும் காப்ரால் தான் முதன்முதலாக நான்கு கண்டங்களையும் தொட்ட முதல் கப்பற் தலைவராக கருதப்படுகிறார். இவரது தேடல் பயணம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்காக்கள், மற்றும் ஆசியாவை இணைத்தது.[2][3][4][5][6]

  1. Bueno 1998, ப. 35.
  2. [1] Foundations of the Portuguese Empire, 1415-1580, Bailey Wallys Diffie and George D. Winius - Page 187, University of Minnesota Press, 1977
  3. [2] The Coming of the Portuguese by Paul Lunde, London University’s School of Oriental and African Studies, in Saudi Aramco World - July/August 2005 Volume 56, Number 4,
  4. Susana Lima (2012). Grandes Exploradores Portugueses. Alfragide - Portugal: Publicações D. Quixote. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9722050540. http://books.google.com/?id=MK9nVsTPPVEC&pg=PT22&lpg=PT22&dq=Pedro+Alvares+Cabral+europa,+america,+africa+e+asia.#v=onepage&q=Pedro%20Alvares%20Cabral%20europa%2C%20america%2C%20africa%20e%20asia.&f=false. 
  5. [3]Pedro Álvares Cabral, Duarte Nuno G. J. Pinto da Rocha in Navegações Portuguesas, Instituto Camões, 2002-2004 (in portuguese)
  6. (in portuguese and italian) Revista da Faculdade de Letras, Edições 23-24. Edições 23-24. Lisbon: Faculdade. 1998. பக். 203. http://books.google.com/?id=0Mg7AQAAIAAJ&q=Pedro+Alvares+Cabral+europa+america+africa+asia&dq=Pedro+Alvares+Cabral+europa+america+africa+asia. 
பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால்
Half-length painted portrait of a bearded man wearing a hat with a large feather.
20ஆம் நூற்றாண்டு ஓவியமொன்றில் 32–33-அகவையில் பெத்ரோ ஆல்வாரெசு காப்ரால். அவர் காலத்திய முகப்படங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.[1]
பிறப்பு1467 அல்லது 1468
பெல்மோன்ட், போர்த்துகல்
இறப்பு1520 (அகவை 52–53)
சான்டரெம், போர்த்துக்கல்
மற்ற பெயர்கள்
  • பெரோ ஆல்வாரெசு காப்ரால்
  • பெத்ர்ஆல்வாரெசு காப்ரால்
  • பெத்ரால்வாரெசு காப்ரால்
  • பெத்ராலுரெசு காப்ரால்
பணிபோர்த்துகல் இராச்சியத்தின் கப்பற்படைத் தொகுதி ஆணையர்
சமயம்உரோமன் கத்திலிக்கம்
வாழ்க்கைத்
துணை
இசபெல் டி காஸ்த்ரோ
பிள்ளைகள்
  • பெர்னோ ஆல்வாரெசு காப்ரால்
  • அன்டோனியோ காப்ரால்
  • கதரீனா டி காஸ்த்ரோ
  • குயியோமார் டி காஸ்த்ரோ
  • இசபெல்
  • லியோனார்