அரவிந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 39 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Sri aurobindo.jpg|right|300px|ஸ்ரீ அரவிந்தர்]]
[[Image:Sri Aurobindo sign.jpg|rahmenlos|186 px|right]]
ஸ்ரீ அரவிந்தர்
'''ஸ்ரீ அரவிந்தர்''' (அரவிந்த அக்ராய்ட் கோஷ், ''(கல்கத்தா யாதவவர்கள் கோஷ் ஆவார்கள்)'' Sri Aurobindo) ([[ஆகஸ்டு 15]], [[1872]] – [[டிசம்பர் 5]], [[1950]]) விடுதலைப் போராட்ட வீரராய் இருந்து, பின் ஆன்மீக வாழ்க்கையை மேற்கொண்டவர் எனக் கருதப்படுகிறது.
அரவிந்தர் இந்திய மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர். பால கங்காதர திலகர் தலைமையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். புரட்சி இயக்கங்களின் முக்கியத் தலைவராக இருந்தார். பின்னாட்களில் ஞானியாக விளங்கினார்.
 
==இளமைக்காலம்==
==பிறப்பு==
அரவிந்த கோஷ் 1872- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் கல்கத்தாவில் பிறந்தார். அவரது தந்தை கிருஷ்ண தன் கோஷ். அவர் ஐரோப்பாவில் மருத்துவப் பட்டம் பெற்ற மருத்துவர். வங்காளத்தில் உள்ள ரங்காப்பூரில் மருத்துவராகப் பணியாற்றினார். அவர் பிரம்ம சமாஜத்திலும் உறுப்பினராக இருந்தார். அரவிந்தரின் தாய் ஸ்வர்ணலதா தேவி. அவர் சிறந்த இலக்கியவாதியான ராஜ் நாராயண் போஸ் என்பவரது மகள் ஆவார். அரவிந்தருக்கு இரண்டு மூத்த சகோதரர், ஒரு இளைய சகோதரி, ஒரு இளைய சகோதரர்.
ஸ்ரீ அரவிந்தர் வட இந்தியாவின் [[கொல்கத்தா]] நகரில் பிறந்தார். கிருஷ்ண தனகோஷ், ஸ்வர்ணலதா என்போரின் மகன். ஐந்து வயதான போது மூத்த சகோதரர்கள் விநய பூஷன், மன்மோகன் ஆகியோரோடு [[டார்ஜிலிங்|டார்ஜிலிங்கில்]] லோரெட்டோ கான்வென்ட்டில் சேர்ந்தார். [[1879]] இல் கல்வி கற்பதற்காக சகோதரர்களோடு [[இங்கிலாந்து]] சென்றார். கேம்ப்ரிட்ஜில் கல்வி கற்கும் போதே புரட்சிகரமான சிந்தனையுடையவராகக் காணப்பட்டார். ''தாமரையும் குத்து வாளும்'' என்ற ரகசிய சங்கத்தில் உறுப்பினரானார். [[பெப்ரவரி]] [[1893]] இல் [[இந்தியா]] மீண்டார். அரவிந்தர் தாயகம் திரும்பிய கப்பல் விபத்துக்குள்ளாகி அவர் மறைந்தார் என்ற தவறான தகவலால் அதிர்ந்து தந்தையார் இறந்தார். அதனால் தாயார் சுவர்ணலதா தேவி மனநோயாளி ஆனார். இந்தியா திரும்பிய அரவிந்தர், பரோடா சமஸ்தானத்திலும் அரசுப் பணிகளிலும் கடமையாற்றினார்.
அரவிந்தரின் தந்தை அவரது புதல்வர்கள் ஐரோப்பியக் கல்வி கற்க விரும்பி அவர்களை டார்ஜிலிங்கில் உள்ள லோரட்டா கான்வென்டில் சேர்த்தார். அப்பள்ளியின் பழைய தலைமை ஆசிரியர் "கடந்த 25-30 ஆண்டுகளில் அரவிந்தரைப் போன்று அறிவும் ஞானமும் நிரம்பிய சிறுவனைப் பார்த்ததில்லை", என்றார்.
 
அரவிந்தரின் தந்தை அவரது புதல்வர்கள் ICS தேர்வு எழுத வேண்டும் என்று விரும்பினார். அதற்கு இங்கிலாந்தில் கல்வி கற்பது அவசியம் என்பதால் 1879-ல் குடும்பத்துடன் இங்கிலாந்து சென்றார். அவர்கள் மான்செஸ்டரில் W.H.ட்ரவட் என்ற பாதிரியார் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டனர். அரவிந்தர் மிகவும் சிறியவராக இருந்ததால் பள்ளியில் சேர்க்கப்படாமல் பாதிரியாரிடமே பூகோளம், சரித்திரம், கணிதம், லத்தீன், ஃப்ரஞ்ச் போன்றவை கற்றார்.
பின்னர் பாதிரியார் ஆஸ்திரேலியா சென்றுவிட்டதால் பாதிரியாரின் தாயாரின் பாதுகாப்பில் லண்டனில் செயின்ட் பால் பள்ளியில் சேர்ந்து பயின்றார். அரவிந்தரின் சகோதரர்கள் இருவரும் ICS தேர்வு எழுத தேவையான தகுதி பெறவில்லை. அதனால் அரவிந்தர் அவரது தந்தையின் கனவைப் பூர்த்தி செய்யவேண்டியவரானார். அந்நிலையில் அவரது தந்தைக்குப் பணக்கஷ்டம் ஏற்பட்டதால் அரவிந்தர் உபகாரச்சம்பளம் பெற்றுப்படித்தார். 1890-ல் Indian Civil Service தேர்வு எழுதி சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார். பின்னர் ஐரோப்பாவில் கேம்பிரிட்ஜில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் இரண்டாண்டுகள் பயின்றார். ஆனால் ICS பதவியை விரும்பாததால் குதிரையேற்றப் போட்டிக்கு செல்வதைத் தவிர்த்துவிட்டார். இங்கிலாந்துக்கு எதிராக பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் நடந்த புரட்சிகள் அவரைக் கவர்ந்தன. அதனால் அவர் ஆகிலேயருக்குக் கீழே பணியாற்ற விரும்பவில்லை.
1893-ல் இந்தியா திரும்பினார். அவர் இந்தியா திரும்பிய கப்பல் விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டதாக கிடைத்த தவறான தகவல் கேட்டு அவரது தந்தை அதிர்ச்சியில் உயிர் இழந்தார். தாயார் மன நோயாளி ஆனார்.
==பரோடா சமஸ்தான பணி==
பரோடா மன்னர் சாயாஜி ராவ் கெய்க்வாட் சமஸ்தானத்தில் உயர்ந்த சம்பளத்தில் பல துறைகளில் 1897 வரை பணியாற்றினார். பரோடா கல்லூரியில் பகுதி நேர ஃப்ரஞ்ச் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் அக்கல்லூரியின் உதவி முதல்வராக உயர்ந்தார். அவர் சிறு வயதிலேயே வெளிநாடு சென்றுவிட்டதால் தற்போது சம்ஸ்கிருதம், வங்காளி போன்ற மொழிகளைக் கற்றார். பல கட்டுரைகள் எழுதினார். அரவிந்தர் ஆங்கிலம், ஜெர்மன், ஃப்ரஞ்ச், க்ரீக், இத்தாலி போன்ற அந்நிய நாட்டு மொழிகளில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார்.
1901-ல் மிருணாளினி என்ற 14 வயது சிறுமியுடன் 28 வயதான அரவிந்தரின் திருமணம் நடைபெற்றது. அவர் பூபால் சந்திர போஸ் என்ற அரசாங்க உயர் அதிகாரியின் மகள் ஆவார். 1918-ல் மிருணாளினி இறந்தார்.
==சுதந்திரப் போராட்டம் ==
அரவிந்தர் பரோடாவில் பணியாற்றும் போதே மறைமுகமாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். கல்கத்தா திரும்பி பெங்கால் நேஷனல் கல்லூரி முதல்வரானார். மேலும் வந்தேமாதரம் என்ற இதழை நடத்தினார். அதில் அவர் எழுதிய தலையங்கங்கள் இந்தியா அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெறுவதன் அவசியம் குறித்து விளக்கின."சுயராச்சியமே நமது குறிக்கோள். அந்நிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற வேண்டும்", என்று எழுதினார். வந்தேமாதரம் இதழ் குறைந்த காலமே வெளிவந்தாலும் இந்தியா முழுவதும் செல்வாக்கு பெற்றிருந்தது. வங்கப்பிரிவினையின் போது தீவிரமாகச் செயல்பட்டார். அந்நிய நாட்டுப் பொருட்கள் பகிஷ்கரிப்பில் முக்கியப் பங்காற்றினார். அவர் வெளிப்படையாக அமிதவாதியாக செயல்பட்டாலும் புரட்சியாளராகவும் இருந்தார்.
1906-ல் தாதாபாய் நௌரோஜி தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு சுயராச்சியம், சுதேசி, அந்நியப் பொருள் பகிஷ்கரிப்பு, தேசியக் கல்வி இவை குறித்துப் பேசினார். 1907-ல் சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் மிதவாதிகள், அமிதவாதிகள் என காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்தபோது அரவிந்தர் [[திலகர்]] தலைமையில் செயலாற்றினார். புனா, பம்பாய், பரோடா போன்ற இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து சொற்பொழிவாற்றினார்.
அலிப்பூர் குண்டு வீச்சு வழக்கில் கைதாகி ஓராண்டு தனிமைச் சிறையில் இருந்தார். [[சித்தரஞ்சன் தாஸ்]] அவருக்காக வாதாடி இந்த வழக்கிலிருந்து விடுதலை பெற்று தந்தார்.
==பரீந்திரநாத் கோஷ்==
பரீந்திரநாத் கோஷ் அரவிந்தரின் இளைய சகோதரர். அவர் ஒரு புரட்சியாளர் மற்றும் பத்திரிக்கையாளர். வங்காளத்தின் புரட்சி இயக்கமான யுகாந்தர் என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களுல் முதன்மையானவர். இவர் லண்டன் அருகில் க்ராய்டன் என்ற ஊரில் 1880- ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் நாள் பிறந்தார். அவர் தியோஹர் என்ற ஊரில் பள்ளிக்கல்வி முடித்து பாட்னா கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தார். பரோடா சமஸ்தானத்தில் இராணுவப் பயிற்சி பெற்றார். அரவிந்தரால் ஈர்க்கப்பட்டு புரட்சி இயக்கத்தில் சேர்ந்தார். 1902-ல் கல்கத்தா திரும்பி ஜதீந்திரநாத் முகர்ஜியுடன் சேர்ந்து பல புரட்சி இயக்கங்களைத் தோற்றுவித்தார். யுகாந்தர் என்ற வங்க மொழி வாரப் பத்திரிக்கையை 1906-ல் ஆரம்பித்தார். அனுசீலன் சமிதி என்ற இயக்கத்திலிருந்து யுகாந்தர் என்ற இயக்கம் தோன்றி புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பரீந்திரநாத்தும் பாகா ஜதீனும் புரட்சி இயக்கத்திற்கு உறுப்பினர்களைச் சேர்த்து மணிகடாலா என்ற இடத்தில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் சேகரித்தனர். 1908-ல் குதிராமும் பிரபில்ல சாஹியும் கிங்க்ஸ் போர்டு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டவுடன் பரீந்திரநாத்தும் அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு அலிப்பூர் குண்டு வீச்சு வழக்கு என குறிப்பிடப்படுகிறது. பரீந்திரநாத்துக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின் தண்டனை குறைக்கப்பட்டு அந்தமான் சிறையில் 1909லிருந்து 1920 வரை 11 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டார். 1923-ல் அரவிந்தருடன் ஆசிரமத்தில் இருந்தார். 1929-ல் கல்கத்தா திரும்பி பத்திரிக்கையாளர் ஆனார். 1933-ல் The Dawn of India என்ற ஆங்கில வாரப் பத்திரிக்கை தொடங்கினார். 1950-ல் தைனிக் பஸூமதி என்ற வங்காளிப் பத்திரிக்கையின் எடிட்டர் ஆனார். பல நூல்களும் எழுதியுள்ளார். 1959 ஏப்ரல் 18 அன்று மறைந்தார்.
==யோகியாக மாறிய ஸ்ரீ அரவிந்தர் ==
சிறையில் இருந்தபோது அரவிந்தருக்கு தெய்வீக அனுபவங்கள் கிடைத்தன. அவர் விவேகானந்தரின் குரல் அவர் காதில் ஒலித்ததாகக் கூறினார். அவர் 1904- ஆம் ஆண்டிலிருந்து யோகா கற்று வந்தார். 1908-ல் அவர் சிறையில் இருந்தபோது யோகா அவரது ஆன்ம முன்னேற்றத்திற்கு உதவியது. பகவத் கீதையின் உபதேசங்களைப் பயில சிறைத் தண்டனை உதவியது. சிறையிலிருந்து வெளிவந்தவுடன் கர்மயோகின் என்ற ஆங்கிலப் பத்திரிக்கையையும் தர்மா என்ற வங்காளிப் பத்திரிக்கையையும் துவங்கினார். உத்தர்பாரா என்ற இடத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவு அவரது மனமாற்றத்தை வெளிப்படுத்தியது.
==அரவிந்தர் ஆசிரமம்==
1910- ஆம் ஆண்டு அவர் பாண்டிச்சேரி வந்தார். முதலில் அவருடன் சில சீடர்களே இருந்தனர். பின்னர் சீடர்களின் எண்ணிக்கை அதிகமாக மிரா என்ற ஃப்ரஞ்ச் பெண்மணியுடன் சேர்ந்து 1920- ல் அரவிந்தர் ஆசிரமம் ஏற்படுத்தினார். மிரா அவர்கள் பின்னர் அன்னை என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். 124 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட அரவிந்தர் ஆசிரமத்தில் 2000 பேருக்கு மேல் உள்ளனர். அங்கே ஒரே மாதிரியான வழிபாட்டுமுறை ஏதுமில்லை. அவரவர் தங்களுக்குப் பொருத்தமான முறையைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். இறைவனைச் சரணடைவது மட்டுமே முக்கியம். ஆசிரமத்தில் எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். ஆசிரமத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு பணி கொடுக்கப்படுகிறது.அங்கே நூலகம், பள்ளி ஆகியவை உள்ளன.எல்லாவித நவீன வசதிகளும் உள்ளன.
அரவிந்தர் சனாதன தர்மத்தை ஆழமாக கற்றவர். வேதம், உபநிடதம், கீதை பற்றியும் இந்தியப் பண்பாடு பற்றியும் தனது கருத்துகளை முன்வைத்தவர். தனது சிந்தனைகளை ஆர்யா என்ற ஆன்மீக இதழில் (1914-1921) எழுதினார். மஹாபாரதத்தின் துணைக்காவியமான சாவித்ரி என்ற காவியம் படைத்தார். யோகா பற்றிய கடிதங்கள், தெய்வீக வாழ்க்கை,வேதங்களின் இரகசியம், கீதை பற்றிய கட்டுரைகள், மனித சமூகத்தின் ஒற்றுமை, மனித சமூகத்தின் முன்னேற்றம், இந்திய கலாச்சாரத்தின் அடிப்படை போன்ற அவரது நூல்களும் புகழ் பெற்றவை. மனம், கல்வி கற்பது, கல்வி கற்பிப்பது, கல்வி என்பதில் அடங்கிய விஷயங்கள் இவை குறித்து அவரது கருத்துக்கள் மிகவும் சிறப்பானவை, ஆழமானவை.
==அரவிந்தரின் சிந்தனைகள்உபதேசம்==
அரவிந்தரின் உபதேசம் எளிமையானது, தெளிவானது. தன்னை உணரவும் தனக்குள் இருக்கும் தெய்வீகத் தன்மையை உணரவும் அவர் கற்பித்தார். ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் தனது ஆன்மாவை உணர வேண்டும் என்றார். உலகில் நமது இருத்தலை -அதாவது நமது வாழ்க்கையை- மகிழ்ச்சியாக அனுபவிப்பது மிகவும் முக்கியமானது என்றார். அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க நமக்குள் இருக்கும் தெய்வீகத் தன்மையை உணர வேண்டும் என்றார். ஒரு மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வீகத் தன்மையை அறிந்து கொண்டால் அவனது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் தன்முனைப்பை (ego) வெல்ல முடியும். அதனால் அறியாமை நீங்கி அவனது வெற்றிக்கு வழிகாட்டும் அறிவு உண்டாகும். என்வே சுயநலத்தை மறுத்து விழிப்புணர்வுடன் இருந்தால் மனிதன் உயிருடன் இருக்கும் போதே தெய்வீக வாழ்க்கை வாழமுடியும் என்று கூறினார்.
==மறைவு==
1950-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் நாள் அவர் மறைந்தார். பாரதத் தாயின் பெருமைமிகு மைந்தர் மறைந்தார். அவர் கவிஞர், தத்துவ ஞானி, சுதந்திரப் போராட்ட வீரர். அவர் நமது ஆன்மீக வாழ்க்கைக்கு வழிகாட்டி. அவர் மறைந்தாலும் அவரது உபதேசங்கள் மக்களை வழிநடத்துகின்றன. உலகம் முழுவதும் இவருக்கு சீடர்கள் உள்ளனர். அவரது கருத்துகள் மக்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின.
1884-1887 ஆண்டுகளில் அரவிந்தர் வசித்த வீடு நினைவுச் சின்னமாக்கப்பட்டுள்ளது.
[[File:ஸ்ரீஅரவிந்தரின் சிலையுரு.JPG|thumb|ஸ்ரீஅரவிந்தரின் சிலையுரு]]
==சுதந்திரப் போராட்டத்தில் இணைதல்==
[[1906]] இல் பரோடாவை விட்டு நீங்கி கொல்கத்தா சென்றார். அங்கு வங்காள தேசியக் கல்லூரியில் முதல்வரானார். பரோடவில் பணிபுரியும் காலத்தில் ஏற்பட்ட இந்தியப் பண்பாட்டுணர்வும் பின்பு ஏற்பட்ட வங்கப் பிரிவினையும் அவரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் இணையச் செய்தன. [[1907]] இலும் [[1908]] இலும் இருமுறை அந்நிய ஆட்சியினரால் சிறை வைக்கப்பட்டார்.
 
==ஆன்மீகத்தில் ஈடுபாடு==
[[1904]] இலேயே [[பிரணாயாமம்]] பயிலத் தொடங்கிய போதும் சிறை வாழ்க்கை [[யோக நெறி]]யில் அதிகம் அக்கறை கொள்ள வைத்தது. ''ஸ்வராஜ்'' (விடுதலை) என்பதை அரசியற் கண்ணோட்டத்தில் மட்டுமன்றி ஆன்மீகக் கண்ணோட்டத்திலும் பொருள் கொண்டார். பரமனின் ஆட்சியைப் பூமியில் நிலை நாட்டுவதற்கு விடுதலை முதற்படி என்று கருதியவர்.
 
1909இலே சிறையிலிருந்து விடுதலை பெற்றதை அடு்த்து அரசியல் இயக்கங்களைத் தவிர்த்துக் கொண்டு யோக நெறியில் முழுக் கவனத்தையும் செலுத்தினார். 1910இல் ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. கைதாவதிலிருந்து தப்பிக்க அரவிந்தர் சந்திர நாகூருக்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்து ஏப்ரலில் மாறுவேடத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த [[புதுச்சேரி]]க்கு வந்தார். ஆங்கிலேய அரசிற்கு எதிரான கொந்தளிப்பில் இருந்து முற்றாக விலகிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றதை அடுத்து யோகநெறியிலே தன்னைப் பக்குவப்படுத்துவதில் முழுக்கவனத்தையும் செலுத்தினார். அங்கு ஆசிரமம் அமைத்து தியானத்திலும் யோகத்திலும் ஈடுபட்டார். [[பாரதியார்|பாரதியாரோடு]] நட்புக் கொண்டார். சாவித்திரி காவியத்தைப் படைத்தார்.
 
==அரவிந்தரின் சிந்தனைகள்==
ஸ்ரீ அரவிந்தர் தனது சிந்தனைகளை ''ஆர்யா'' என்ற தனது ஆன்மீக இதழில் (1914 - 1921) எழுதினார். யோகத்தின் குறிக்கோள் உள்ளார்ந்த தன்வளர்ச்சியாகும். தன் வளர்ச்சியின் பரிணாமப்படிகள் மனிதனின் பூவுலக வாழ்வினைத் தெய்வவடிவில் அமைக்கும் என்று நம்பினார். உயர்நிலை மனத்தை உருவாக்கும்போது மனித வாழ்வின் இயல்பே மாறிவிடும் என்றும் தெய்வீக நிலை தோன்றும் என்றும் வற்புறுத்தினார்.
 
அரவிந்தர் [[சனாதன தர்மம்|சனாதன தர்மத்தினை]] ஆழமாக நோக்கியவர். [[வேதம்]], [[உபநிடதம்]], [[பகவத் கீதை|கீதை]] பற்றியும் இந்தியப் பண்பாடு பற்றியும் தமது கருத்துக்களை முன்வைத்தார்.
 
[[பகுப்பு:ஆன்மிகவாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அரவிந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது