இழையவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 1:
[[File:Microscope with stained slide.jpg|right|thumb|300px|ஒரு ஒளி நுணுக்குக்காட்டியின் மேடையில் வைக்கப்பட்டுள்ள சாயமூட்டப்பட்ட ஒரு இழைய மாதிரி]]
[[File:Emphysema H and E.jpg|right|300px|thumb|Hematoxylin, eosin கொண்டு சாயமேற்றப்பட்ட [[மனித]] [[நுரையீரல்]] இழையத்தின் இழைய மாதிரியின் நுணுக்குக்காட்டியூடான தோற்றம்]]
'''இழையவியல்'''(அ) '''திசுவியல்''' (''histology'') என்பது [[உயிரினம்|உயிரினங்களில்]] இருக்கும் [[உயிரணு]]க்கள், [[இழையம்|இழையங்கள்]] ஆகியவற்றின் [[உடற்கூற்றியல்|உடற்கூற்றியலை]] ஆராய [[நுணுக்குக்காட்டி]]யைப் பயன்படுத்தும் அறிவியல் துறையாகும்<ref>{{cite web | url=http://www.merriam-webster.com/dictionary/histology | title=Histology | accessdate=21 சூன் 2014}}</ref>. இத்துறை [[உயிரியல்]], [[மருத்துவம்]] போன்ற [[அறிவியல்]] துறைகளுக்கு அத்தியாவசியமான ஒரு கருவி போன்றது. இழையவியல் அறிவைக் கொண்டு [[தாவரம்]], [[விலங்கு]] ஆகிய இரு வகை உயிரினங்களிலும் பல வகையான ஆய்வுகளை மேற்கொண்டு அவை பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும்.
 
இழையங்களின் மெல்லிய தட்டையான துண்டுகளை, [[ஒளி]] நுணுக்குக்காட்டி மூலமோ, [[இலத்திரன்]] நுணுக்குக்காட்டி மூலமோ ஆராய்ந்து அவை பற்றிய தகவல்கள் அறியப்படும். இழையங்களில் அல்லது உயிரணுக்களில் உள்ள வேறுபட்ட அமைப்புக்களை சரியானபடி வேறுபடுத்திப் பார்ப்பதன் மூலம், அவற்றைப் பற்றிய ஆய்வை மேலும் சிறப்பிக்கலாம். இவ்வகையான வேறுபாட்டைக் கொண்டு வருவதற்கு [[இழையச் சாயங்கள்]] (histological stains) பயன்படுத்தப்படும்<ref>{{cite web | url=http://www.ivy-rose.co.uk/HumanBody/Histology/Histology-Stains.php | title=Histology Stains | accessdate=21 சூன் 2014}}</ref>.
 
==திசுவியலும் திசுநோய்த்தோற்றவியலும்==
[[image:Thyoid-histology.jpg|thumb|right| 300 px| தைராய்டு சுரப்பியின் நுண்ணோக்கித் தோற்றம்]]
திசுவியல் என்பது ஆரோக்கிய நிலையில் உள்ள திசுக்களைப் பற்றிய படிப்பு. [[நோய்]]த் தாக்கத்துக்கு உட்பட்ட இழையங்களை இவ்வகை ஆய்வுக்குட்படுத்தி நோய்த்தன்மையை அறிந்து கொள்வதை [[இழையநோயியல்]] (Histopathology) என்று அழைப்பர். திசுவியல் என்பது அடிப்படை மருத்துவ அறிவியல் துறைகளுள் ஒன்றான [[உடற்கூற்றியல்|உடற்கூற்றியலின்]] உட்துறைகளுள் ஒன்றாகும். திசு நோய்த்தோற்றவியலோ [[நோய்த்தோற்றவியல்]] ''(Pathology)'' துறையின் உட்பிரிவு ஆகும். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கட்டி சாதாரண கட்டியா அல்லது புற்றுக்கட்டியா என்பதையும் அது புற்றுக்கட்டியாயின் அது [[புற்று நோய்]] எந்த நிலையில் உள்ளது என்பன போன்றவற்றை எல்லாம் திசு நோய்த்தோற்றவியலாளர் மட்டுமே உறுதிபடுத்த முடியும். இழையவியல் ஆய்வுக்காக சாயமூட்டப்பட்டு தயார் செய்யப்படும் மாதிரிகளை, [[நோயியலாளர்கள்]] (Pathologists) நுணுக்குக்காட்டியில் பார்வையிட்டு, தங்களது அவதானிப்பின் அடிப்படையில் நோய் ஆய்வுறுதியைச் செய்வார்கள். நோயியலாளர்களுக்காக இவ்வாறான மாதிரிகளை தயார் செய்து கொடுக்கும் அறிவியலாளர்களை, இழையவியல் தொழில் நுட்ப வல்லுநர்கள், அல்லது மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர்கள் என்பர்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
{{உயிரியல்-பின் இணைப்புகள்}}
"https://ta.wikipedia.org/wiki/இழையவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது