வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பதிப்புரிமையுள்ள உள்ளடக்கம்
வரிசை 23:
 
பழிக்குப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தில் பலி ஆடாக ஒருவன் நுழைந்து, அது அவனுக்கும் தெரிந்த பிறகு, அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறான் என்பதே ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. இது 2014 ஆம் ஆண்டு மே பத்தாம் திகதி திரையரங்குகளில் வெளியானது. <ref name="Release">{{cite web|title=Friday Fury – May 9|url=http://www.sify.com/movies/friday-fury-may-9-news-tamil-ofjk9Ihegig.html|date=May 9, 2013|publisher=Sify}}</ref>
 
==கதை சுருக்கம்==
அரவங்காடு கிராமத்தில் வசித்து வரும் இரண்டு குடும்பங்களுக்கிடையே நடக்கும் பங்காளிச் சண்டையில் [[சந்தானம் (நடிகர்)|சந்தானத்தின்]] அப்பா, சந்தானத்தின் மாமாவை வெட்டிச் சாய்த்துவிட்டு அவரும் உயிரை விடுகிறார். தன் குடும்பத்தில் ஒருவரை கொன்ற சந்தானத்தின் மொத்த குடும்பத்தையும் பலிவாங்கத் துடிக்கிறது எதிர்த்தரப்பு. தன் மகனின் உயிரைக் காப்பாற்ற அந்த ஊரைவிட்டு சென்னைக்கு வந்து குடியேறி மகனை வளர்க்கிறார் [[சந்தானம் (நடிகர்)|சந்தானத்தின்]] அம்மா.
 
சந்தானம் வளர்ந்து பெரிய ஆளாவதற்குள் அவரின் அம்மாவும் உயிரை விடுகிறார். [[சந்தானம் (நடிகர்)|சந்தானத்தை]] வளர்க்கும் அவரின் மாமா, அரவங்காட்டில் சந்தானத்தின் அப்பா பெயரில் இருக்கும் 5 ஏக்கர் நிலத்தைப் பற்றி ஒரு கட்டத்தில் சொல்கிறார். கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சந்தானம், அந்த இடத்தை விற்று தன் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளோடு அரவங்காடு நோக்கி பயணமாகிறார். தன்னைக் கொல்லத் துடித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தின் ஒரு வாரிசான நாயகி ஆஸ்னாவும் [[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]] பயணம் செய்யும் அதே ரயிலில் பயணிக்க, இருவருக்குள்ளும் நட்பு உருவாகிறது. ஆஸ்னாவின் நட்பால், தன் நிலத்தை விற்க அந்த குடும்பத்தின் உதவியை நாடி அவர்களின் வீட்டிற்குள்ளேயே காலடி எடுத்து வைக்கிறார் [[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]].
 
27 வருடங்களாக தாங்கள் பழிவாங்கத் தேடிக் கொண்டிருக்கும் குடும்ப வாரிசுதான் [[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]] என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆஸ்னாவின் அப்பாவும், அண்ணன்களும் கொலைவெறியோடு சந்தானத்தை நெருங்குகிறார்கள். ஆனால், அவர்களின் குடும்ப வழக்கப்படி வீட்டிற்குள் நுழைந்த ஒருவரை, வீட்டில் வைத்து கொலை செய்வதில்லை என்பதால், அவரை வீட்டிலிருந்து வெளியேற்றி கொல்லத் துடிக்கிறார்கள். இந்த விஷயம் [[சந்தானம் (நடிகர்)|சந்தானத்திற்கும்]] மெல்ல புரிய வர, அவர் அந்த ஆபத்திலிருந்து எப்படித் தப்பிக்கிறார் என்பதே காமெடியும், பரபரப்பும் கலந்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ திரைப்படத்தின் கதை.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வல்லவனுக்கு_புல்லும்_ஆயுதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது