300: ரைஸ் ஒப் அன் எம்பையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
காப்புரிமையுள்ள உள்ளடக்கம் http://newtamilmob.blogspot.in/p/tamil-review.html
வரிசை 25:
 
'''300: ரிஸ் ஒப் அன் எம்பிரே''' இது 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டின் அதிரடித் திரைப்படம். இந்த திரைப்படத்தை '''நோம் முற்றோ''' இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் [[சல்லிவன் ஸ்டேபிள்டன்]], [[இவா கிரீன்]], லீனா ஹெஅடேய், ஹான்ஸ் மாதேசன், [[ரோட்ரிகோ சாண்டோரோ]], [[ஹான்ஸ் மாதேசன்]] மற்றும் [[ஜாக் ஓ 'கோன்னெல்]] நடித்துள்ளார்கள்.
 
==கதை சுருக்கம்==
பெர்சியாவின் அரசனான கிங் டாரியஸுக்கு எப்படியாவது கிரேக்கத்தை தன்வசம் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை. அதற்காக கிரேக்கத்தின் எல்லையில் ஒரு கப்பல் தளத்தை தனது மகன் ஜெர்க்சீஸ் உடன் இணைந்து நிறுவுகிறான். இதை அறியும், கிரேக்க வீரனான தெமிஸ்டோகல்ஸ் இரவோடு இரவாக சென்று தனது படையுடன் அந்த கப்பல் தளத்தை அடித்து நொறுக்கி விடுகிறான். இறுதியில், ஜெர்க்சீஸும், கிங் டாரியஸும் படகில் தப்பித்து செல்லும்போது தெமிஸ்டோகல்ஸின் அம்புக்கு டாரியஸ் பலியாகிறார். தன்னுடைய அப்பா மரணத்துக்கு காரணமான கிரேக்கத்தை பழிவாங்க ஜெர்க்சீஸ் முடிவெடுக்கிறான்.
 
பெர்சியாவின் கப்பல் படை தளபதியாக வரும் அர்தமெசியா கிரேக்க நாட்டை சேர்ந்தவள். கிரேக்கர்களால் சிறுவயதிலேயே வேசியாக்கப்பட்ட இவள் அவர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டு நடுரோட்டில் தூக்கியெறியப்படுகிறாள். பெர்சியா படைவீரன் ஒருவன் அவளை காப்பாற்றி பெர்சியாவுக்கு அழைத்துச் சென்று எல்லா கலைகளிலும் சிறந்த வீராங்கனையாக மாற்றி, பெர்சியாவின் படைப்பிரிவிலும் சேர்த்து விடுகிறான். பெர்சியாவுக்காக நிறைய அரசர்களின் தலைகளை கொன்றுக் குவித்த இவளுக்கு கிரேக்கர்கள் என்றாலே சுத்தமாக பிடிக்காது. இதனால், கிரேக்கத்துக்கு எதிராக கடல் வழியாகவும், தரை மார்க்கவும் போரை தொடுக்கும் ஜெர்க்சீஸின் கப்பல் படைக்கு இவள் தளபதியாக பொறுப்பேற்கிறாள்.
 
ஆனால், இந்த போரில் பங்கெடுக்க கிரேக்கர்களில் சிலர் தயங்குகின்றனர். ஆனால், தன்னம்பிக்கை கொண்ட தெமிஸ்டோகல்ஸ் மட்டும் இந்த போரை எப்படியாவது சந்தித்தே ஆகவேண்டும் என்று முடிவெடுக்கிறான். அதன்படி, தன்னுடைய நம்பிக்கைக்கு பாத்திரமான வீரர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு போரில் கலந்துகொள்ள செல்கிறான். கடல்வழி மார்க்கமாக தாக்குதலை தொடங்க ஆயத்தமாகும் தெமிஸ்டோகல்ஸ் வசம் சுமார் 100 படகுகளே உள்ளன. ஆனால், ஜெர்க்சீஸ் வசமோ ஆயிரத்துக்கும் மேல் படகுகள் உள்ளன.
 
இந்த போரில் தெமிஸ்டோகல்ஸ் பெர்சியாவின் தாக்குதலை சமாளித்தாரா? கிரேக்கர்களை பழிவாங்க வேண்டும் என்ற ஜெர்க்சீஸ் மற்றும் அர்தமெசியாவின் ஆசை நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.
 
==வெளியீடு==
"https://ta.wikipedia.org/wiki/300:_ரைஸ்_ஒப்_அன்_எம்பையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது