"சந்தனு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

349 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி (+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி)
 
==மறுமணம்==
[[File:Ravi Varma-Shantanu and Satyavati.jpg|thumb|175px|இரவிவர்மாவின் ஓவியத்தில் சாந்தனு தன்னை மணமுடிக்கும்படி மீனவப் பெண்ணான சத்தியவதியை வற்புறுத்தும் காட்சி.]]
[[கங்கை சாந்தனு]]வின் மகன் [[தேவவிரதன்]] (பீஷ்மர்) தேர்ந்த வீரனாக, அரசகுமாரனுக்கு உரிய தகுதியானவனாக இருந்தான். ஆனால் தேவவிரதன்(பீஷ்மர்) அரசாள மறுத்துவிட்டான். மீண்டும் சாந்தனு காதல்வயப்பட்டான். [[கங்கை]]யில் படகு ஓட்டிவந்த [[சத்தியவதி]]யைக் கண்டான், அவளது உடலிலிருந்து வந்த இனிய நாற்றம் சாந்தனுவை காதல் கொள்ள வைத்தது. சாந்தனுவின் காதலை ஏற்க [[கங்கை]]யைப் போன்றே அவளும் [[நிபந்தனை]] விதித்தாள். சாந்தனுவின் நாட்டை ஆட்சி செய்ய தனது வயிற்றில் பிறக்கும் குழந்தைகளுக்கு உரிமை தந்தால் சம்மதிக்கிறேன் என்றாள். தேவவிரதன் (பீஷ்மர்) ஏற்கனவே அரசகுமாரனாக தயாராக இருக்கும்போது வேறு பிள்ளைகள் எப்படி முடியும். குழம்பிப் போன சாந்துனுவின் சங்கடத்தை போக்க அதிரடியாக ""நான் ஆட்சியை துறக்கிறேன்"" என அறிவிக்கிறான் தேவவிரதன். [[சத்தியவதி]] மீண்டும் கேட்கிறாள். "உங்கள் குழந்தைகள் என் மகனின் குழந்தைகளிடம் சண்டையிடுவார்களே எப்படி தடுப்பது தேவவிரதன் புன்னகைத்து தனது வம்ச சரித்திரத்தையே மாற்றும் முடிவு ஒன்றை எடுத்தான் எந்த வருத்தமுமின்றி "நான் திருமணமே செய்துகொள்ள மாட்டேன், எந்தப் பெண்ணுடனும் இருக்க மாட்டேன், எந்தக் குழந்தைக்கும் தந்தையாகவும் மாட்டேன்" இந்த அறிவிப்பு அண்ட சராசரத்தையும் திகைப்படையச் செய்தது. வானத்து தேவர்கள் ஒன்று கூடி (பீஷ்மர்) தேவவிரதனுக்கு தன் மரணத்தை, மரண நேரத்தை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று வரமளித்தனர். (பீஷ்மர்) தேவவிரதன் பிரம்மசர்யம் அனுசரிக்க முடிவெடுத்தான். சாந்தனுவின் மறுமணம் இனிதே முடிந்தது. காலப்போக்கில் [[சித்ராங்கதன்]] மற்றும் [[விசித்திரவீரியன்]] என இருவர் பிறந்தனர். சிறிது காலத்திலேயே சாந்தனு மரணமடைந்தான்.<ref name = "one"> Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK </ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1683660" இருந்து மீள்விக்கப்பட்டது