பிரேசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 85:
== வரலாறு ==
=== போத்துக்கீசக் குடியேற்றம் ===
தற்போது பிரேசில் என அழைக்கப்படும் தென்னமெரிக்கப் பகுதியை 1500 ஆம் ஆண்டில் [[பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால்]] தலைமையிலான போத்துக்கீசக் கப்பல்கள் அடைந்ததில் இருந்து, அப்பகுதி போத்துக்கீசர் வசமானது.<ref name="Boxer, p. 98">Boxer, p.&nbsp;98.</ref> அப்போது, அங்கே கற்காலப் பண்பாட்டைக் கொண்ட தாயக மக்கள் பல்வேறு இனக் குழுக்களாகப் பிரிந்து காணப்பட்டனர். தூப்பி-குவாரானி குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசிய அவர்கள் எப்பொழுதும் தமக்குள் சண்டையிட்டபடி இருந்தனர்.<ref name="Boxer, p.&nbsp;100">Boxer, p. 100.</ref>
 
[[படிமம்:Meirelles-primeiramissa2.jpg|thumb|left|பிரேசிலில் முதலாவது [[கிறித்தவம்|கிறித்தவ வழிபாடு]], 1500.]]
முதலாவது குடியிருப்பு 1532 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட போதும், 1534 ஆம் ஆண்டில், [[போர்த்துகலின் மூன்றாம் யோவான்|டொம் யோவான் III]] (Dom João III) அப்பகுதியை தன்னாட்சியுடன் பரம்பரைத் தலைமைத்துவம் கொண்ட 1215 பிரிவுகளாகப் பிரித்த பின்னரே நடைமுறையில் குடியேற்றம் தொடங்கியது.<ref>Boxer, pp.&nbsp;100–101.</ref><ref name="Skidmore, p.&nbsp;27">Skidmore, p.&nbsp;27.</ref> எனினும் இந்த அமைப்பு ஒழுங்கு பிரச்சினைக்கு உரியதாக இருந்ததால்வித்திட்டதால் முழுக் குடியேற்றத்தையும் நிர்வாகம் செய்வதற்காக 1549ல், அரசர் ஒரு ஆளுனரை நியமித்தார்.<ref name="Skidmore, p.&nbsp;27"/><ref>Boxer, p.&nbsp;101.</ref> சில தாயக இனக்குழுக்கள் போத்துக்கீசருடன் தன்மயமாகிவிட்டனர்.<ref>Boxer, p.&nbsp;108</ref> வேறு சில குழுக்கள், [[அடிமை]]கள் ஆக்கப்பட்டனர் அல்லது நீண்ட போர்களில் அழிக்கப்பட்டனர். இன்னும் சில குழுக்கள் [[ஐரோப்பா|ஐரோப்பியர்]] மூலம் பரவியனவும், தாயக மக்கள் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிராதனவுமான [[நோய்]]களினால் மடிந்தனர்.<ref name="Boxer, p.&nbsp;102">Boxer, p.&nbsp;102.</ref><ref>Skidmore, pp.&nbsp;30, 32.</ref> 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், [[சர்க்கரை]] (சீனி) பிரேசில் நாட்டின் முக்கியமான ஏற்றுமதிப் பண்டம் ஆகியது.<ref name="Boxer, p.&nbsp;100"/><ref>Skidmore, p.&nbsp;36.</ref> அனைத்துலக அளவில் சர்க்கரைக்கான தேவை கூடியதனால்,<ref name="Boxer, p.&nbsp;102"/><ref>Skidmore, pp.&nbsp;32–33.</ref> கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகப் போத்துக்கீசர், [[ஆப்பிரிக்கா]]வில் இருந்து அடிமைகளை இறக்குமதி செய்தனர்.<ref>Boxer, p.&nbsp;110</ref><ref>Skidmore, p.&nbsp;34.</ref>
 
பிரான்சுடனான போர்களின் மூலம் போத்துக்கீசர் மெதுவாகத் தமது ஆட்சிப் பகுதியை விரிவாக்கிக் கொண்டனர். 1567ல் தென்கிழக்குத் திசையிலான விரிவாக்கத்தின் மூலம் ரியோ டி செனரோவையும், 1615ல் வடமேற்குத் திசை விரிவாக்கத்தின் மூலம் [[சாவோ லூயிசு|சாவோ லூயிசையும்]] கைப்பற்றினர்.<ref>Bueno, pp.&nbsp;80–81.</ref> [[அமேசான் மழைக்காடு|அமேசான் மழைக்காட்டுப்]] பகுதிக்குப் படையெடுத்துச் சென்று பிரித்தானியருக்கும் ஒல்லாந்தருக்கும் உரிய பகுதிகளைக் கைப்பற்றி,<ref>[http://www.s4ulanguages.com/wic.html Facsimiles of multiple original documents] relating about the events in Brazil in the 17th century that led to a Dutch influence and their final defeat</ref> 1669 ஆம் ஆண்டிலிருந்து அப் பகுதியில் ஊர்களை உருவாக்கிக் கோட்டைகளையும் அமைத்தனர்.<ref>Calmon, p.&nbsp;294.</ref> 1680 ஆம் ஆண்டில் தெற்குக் கோடியை எட்டிய போத்துக்கீசர், கிழக்குக் கரையோரப் பகுதியில் (தற்கால [[உருகுவே]]), ரியோ டி லா பிளாட்டா ஆற்றங்கரையில் [[சக்ராமென்டோ]] என்னும் நகரை நிறுவினர்.<ref>Bueno, p.&nbsp;86.</ref>
 
17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சர்க்கரை ஏற்றுமதுஏற்றுமதி வீழ்ச்சியடையத் தொடங்கிற்று.<ref>Boxer, p.&nbsp;164.</ref> ஆனால், 1690களில் மாட்டோ குரோசோ, கோயாசு ஆகிய பகுதிகளில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதனால் உடனடியான சீர்குலைவு தடுக்கப்பட்டது.<ref>Boxer, pp.&nbsp;168, 170.</ref>
 
1494 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின்படி தமக்கு உரியதான பகுதிகளுக்குள் போத்துக்கீசர் விரிவாக்கம் செய்வதை எசுப்பானியர் தடுக்க முயன்றனர். 1777ல் கிழக்குக் கரையோரத்தைக் கைப்பற்றுவதிலும் வெற்றி பெற்றனர். ஆனாலும், அதே ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட [[சான் இல்டிபொன்சோ ஒப்பந்தம்|சான் இல்டிபொன்சோ ஒப்பந்தப்படி]] போத்துக்கீசர் கைப்பற்றிக்கொண்ட பகுதிகளில் அவர்களது இறையாண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டதால் இம் முயற்சி வீணாயிற்று. இதன்மூலம், இன்றைய பிரேசிலின் எல்லைகள் பெரும்பாலும் நிலை நிறுத்தப்பட்டன.<ref>Boxer, p.&nbsp;207.</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிரேசில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது