பிரேசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 73:
'''பிரேசில்''' (''República Federativa do Brasil'') [[தென் அமெரிக்கா]]வில் மிகப் பெரியதும் மிகுந்த மக்கள் தொகை கொண்டதுமான நாடாகும். இது பரப்பளவின் அடிப்படையிலும், மக்கள்தொகை அடிப்படையிலும் உலகிலேயே ஐந்தாவது பெரிய நாடு ஆகும். இதன் மக்கள்தொகை 192 மில்லியனுக்கும் மேற்பட்டது.<ref name="CIA Geo"/><ref name="CIA People">{{cite web |title=People of Brazil |booktitle=The World Factbook |publisher=Central Intelligence Agency |year=2008 |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/br.html |accessdate=2008-06-03}}</ref> பிரேசிலின் கிழக்கிலும் வடகிழக்கிலும் [[அட்லாண்டிக் பெருங்கடல்]] உள்ளது. 7,491 கிமீ (4,655 மைல்) நீளமான கடற்கரை பிரேசிலுக்கு உண்டு.<ref name="CIA Geo"/> பிரேசிலின் அருகாமையில் [[உருகுவே]], [[அர்ஜென்டினா]], [[பராகுவே]], [[பொலிவியா]], [[பெரு]], [[கொலம்பியா]], [[வெனிசூலா]], [[கயானா]], [[சுரினாம்]], [[பிரெஞ்சு கயானா]] ஆகிய நாடுகள் உள்ளன. அதாவது, [[எக்குவடோர்]], [[சீலே]] தவிர அனைத்து தென் அமெரிக்க நாடுகளுடனும், பிரேசில் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. பல்வேறு தீவுக் கூட்டங்களும் பிரேசிலின் ஆட்சிப் பகுதிக்குள் அடங்குகின்றன. [[பெர்னான்டோ டி நோரன்கா]], [[ரோக்காசு அட்டோல்]], [[செயின்ட் பீட்டர் மற்றும் செயின்ட் பவுல் தீவுக்கூட்டம்]], [[டிரின்டேடும் மார்ட்டிம் வாசும்]] என்பன இவற்றுட் சில.<ref name="CIA Geo"/> பிரேசிலின் தலைநகர் [[பிரேசிலியா]]. [[சாவோ பாவுலோ]], [[ரியோ தி ஜனைரோ]] ஆகியவை முக்கிய நகரங்கள்.
 
[[போர்த்துகல்|போர்த்துகீசியரின்]] ஆட்சியில் முன்பு இருந்ததால் [[போர்த்துக்கீசம்|போர்த்துகீச மொழி]] பிரேசிலில் பேசப்படும் மொழியும், அதிகாரப்பூர்வஅதிகாரபூர்வ மொழியும் ஆகும். தென்னமெரிக்காவில் பெரும்பான்மையாகப் போத்துக்கீச மொழியைப் பேசுபவர்களைக் கொண்ட நாடு இது மட்டுமே. அத்துடன், இம்மொழியைப் பேசுகின்ற உலகின் மிகப் பெரிய நாடும் இதுவே.<ref name="CIA Geo">{{cite web |title=Geography of Brazil |booktitle=The World Factbook |publisher=Central Intelligence Agency |year=2008 |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/br.html |accessdate=2008-06-03}}</ref>
 
1500 ஆம் ஆண்டில் [[பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால்]] கால் வைத்ததில் இருந்து 1815 ஆம் ஆண்டுவரை பிரேசில் போர்த்துக்கலின் [[குடியேற்ற நாடு|குடியேற்ற நாடாக]] இருந்தது. 1815ல் பிரேசில் ஒரு இராச்சியமாகத் தரம் உயர்த்தப்பட்டு, [[போர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியம்]] என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. உண்மையில், 1808 ஆம் ஆண்டில் நெப்போலியன் போர்த்துக்கலைக் கைப்பற்றிக்கொண்டபோது, போர்த்துக்கீசக் குடியேற்றவாதப் பேரரசின் தலைநகரம் லிசுப்பனில் இருந்து [[இரியோ டி செனீரோ]]வுக்கு மாற்றப்பட்டபோது குடியேற்றவாதப் பிணைப்பு அறுந்துவிட்டது.<ref name="CIA Intro">{{cite web |title=Introduction of Brazil |booktitle=The World Factbook |publisher=Central Intelligence Agency |year=2008 |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/br.html |accessdate=2008-06-03}}</ref>
வரிசை 79:
1822 ஆம் ஆண்டில் [[பிரேசில் பேரரசு|பிரேசில் பேரரசின்]] உருவாக்கத்துடன் நாடு விடுதலை பெற்றது. இப் பேரரசு [[அரசியல்சட்ட முடியாட்சி]]யுடன், [[நாடாளுமன்ற முறை]]யும் சேர்ந்த ஒரு ஒற்றையாட்சி அரசின் கீழ் ஆளப்பட்டது. 1889 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து, பிரேசில் சனாதிபதி முறைக் [[குடியரசு]] ஆனது. 1988ல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின்படி பிரேசில் ஒரு கூட்டாட்சிக் குடியரசு ஆகும்.<ref name="Constituição">{{cite web |title=Brazilian Federal Constitution |publisher=Presidency of the Republic |year=1988 |url=http://www.planalto.gov.br/ccivil_03/Constituicao/Constituiçao.htm |language=Portuguese |accessdate=2008-06-03}} {{cite web |title=Brazilian Federal Constitution |publisher=v-brazil.com |year=2007 |url=http://www.v-brazil.com/government/laws/titleI.html |quote=Unofficial translate |accessdate=2008-06-03}}</ref> கூட்டாட்சி மாவட்டங்கள் எனப்படும், 26 மாநிலங்களும், 5,564 மாநகரப் பகுதிகளும் இணைந்தே இக் கூட்டாட்சி உருவாக்கப்பட்டு உள்ளது.<ref name="Constituição"/><ref>{{cite web |title=Territorial units of the municipality level |publisher=Brazilian Institute of Geography and Statistics |year=2008 |url=http://www.sidra.ibge.gov.br/bda/territorio/tabunit.asp?n=6&t=2&z=t&o=4 |language=Portuguese |accessdate=2008-06-03}}</ref>
 
பிரேசிலின் பொருளாதாரம், பெயரளவு [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] அடிப்படையில் உலகின் ஆறாவது பெரியதும், வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் ஏழாவது பெரியதும் (2011 ஆம் ஆண்டு நிலை) ஆகும்.<ref name="siteresources.worldbank.org">"[http://siteresources.worldbank.org/DATASTATISTICS/Resources/GDP.pdf World Development Indicators database]" (PDF file), World Bank, 7 October 2009.</ref><ref>{{cite web |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2001rank.html |title=CIA – The World Factbook – Country Comparisons – GDP (purchasing power parity) |publisher=Cia.gov |date=|accessdate=25 January 2011}}</ref> உலகின் விரைவாக வளர்ந்துவரும் முக்கியமான பொருளாதாரங்களில்பொருளாதார நாடுகளில் பிரேசிலும் ஒன்று ஆகும். [[ஐக்கிய நாடுகள் அவை]], [[ஜி20]], [[போத்துக்கீச மொழி நாடுகள் சமூகம்]], [[இலத்தீன் ஒன்றியம்]], [[ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு]], [[அமெரிக்க நாடுகள் அமைப்பு]], [[தெற்கத்திய பொதுச் சந்தை]], [[தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியம்|தென்னமெரிக்க நாடுகளின் ஒன்றியம்]] ஆகிய அமைப்புக்களின் தொடக்ககால உறுப்பினராக பிரேசில் உள்ளது. [[பெரும்பல்வகைமை நாடுகள்|பெரும்பல்வகைமை நாடுகளில்]] ஒன்றான பிரேசிலில், பல்வகைக் [[காட்டுயிர்]]கள், [[இயற்கைச் சூழல்]]கள், பரந்த [[இயற்கை வளம்|இயற்கை வளங்கள்]], பல்வேறுபட்ட காக்கப்பட்ட வாழிடங்கள் என்பன காணப்படுகின்றன.<ref name="CIA Geo"/>
 
பிரேசில் இலத்தீன அமெரிக்காவில் மண்டலத்தின் செல்வாக்குள்ள நாடாகவும் பன்னாட்டளவில் நடுத்தர செல்வாக்குள்ள நாடாகவும் விளங்குகிறது.<ref name="Seelke2010">{{cite book|author=Clare Ribando Seelke|title=Brazil-U. S. Relations|url=http://books.google.com/books?id=AedJmV-wedMC&pg=PA1|year=2010|publisher=Congressional Research Service|isbn=978-1-4379-2786-3|page=1}}</ref> சில மதிப்பீடாளர்கள் பிரேசிலை உலகளவில் செல்வாக்கு பெருகிவரும் நாடாக அடையாளப்படுத்துகின்றனர்.<ref name="DominguezKim2013">{{cite book|author1=Jorge Dominguez|author2=Byung Kook Kim|title=Between Compliance and Conflict: East Asia Latin America and the New Pax Americana|url=http://books.google.com/books?id=c0I_4JmjFbwC&pg=PA98|year=2013|publisher=Center for International Affairs, Harvard University|isbn=978-1-136-76983-2|pages=98–99}}</ref> பிரேசில் கடந்த 150 ஆண்டுகளாக உலகின் மிக உயர்ந்த [[காப்பி]] பயிராக்கும் நாடாக விளங்குகின்றது.<ref name=Neilson102>{{cite book|url=http://books.google.co.uk/books?id=wokuHhx1AOUC&pg=PA1834#v=onepage&q&f=false|page=102|title=Value Chain Struggles|author= Jeff Neilson, Bill Pritchard|publisher=John Wiley & Sons|date= 26 July 2011}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிரேசில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது