பிரேசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 94:
17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சர்க்கரை ஏற்றுமதி வீழ்ச்சியடையத் தொடங்கிற்று.<ref>Boxer, p.&nbsp;164.</ref> ஆனால், 1690களில் மாட்டோ குரோசோ, கோயாசு ஆகிய பகுதிகளில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதனால் உடனடியான சீர்குலைவு தடுக்கப்பட்டது.<ref>Boxer, pp.&nbsp;168, 170.</ref>
 
1494 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின்படி தமக்கு உரியதான பகுதிகளுக்குள் போத்துக்கீசர் விரிவாக்கம் செய்வதை எசுப்பானியர் தடுக்க முயன்றனர். 1777ல் கிழக்குக் கரையோரத்தைக் கைப்பற்றுவதிலும் வெற்றி பெற்றனர். ஆனாலும், அதே ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட [[சான் இல்டிபொன்சோ ஒப்பந்தம்முதலாம் உடன்பாடு|சான் இல்டிபொன்சோ ஒப்பந்தப்படிஉடன்படிக்கையின்படி]] போத்துக்கீசர் கைப்பற்றிக்கொண்ட பகுதிகளில் அவர்களது இறையாண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டதால் இம் முயற்சி வீணாயிற்று. இதன்மூலம், இன்றைய பிரேசிலின் எல்லைகள் பெரும்பாலும் நிலை நிறுத்தப்பட்டன.<ref>Boxer, p.&nbsp;207.</ref>
 
1808ல், பிரான்சின் பேரரசர் நெப்போலியன் போர்த்துக்கலையும் பெரும்பாலான மைய ஐரோப்பாவையும் கைப்பற்றியதைத் தொடர்ந்து, போத்துக்கீச அரச குடும்பமும், பெரும்பாலான உயர் குடியினரும் தப்பி வந்து ரியோ டி செனரோ நகரத்தில் குடியேறினர். இதனால், அந் நகரம் போத்துக்கீசப் பேரரசு முழுவதினதும் தலைமை இடமாக மாறியது.<ref name="Boxer, p.&nbsp;213">Boxer, p.&nbsp;213.</ref> 1815 ஆம் ஆண்டில் தனது உடல்நலம் குன்றிய தாய்க்காக ஆட்சிப் பொறுப்பாளராக இருந்த [[போர்த்துக்கலின் ஆறாம் யோவான்|ஆறாம் டொம் யோவான்]] (Dom João VI) பிரேசிலை குடியேற்ற நாடு என்னும் தரத்திலிருந்து இறைமையுள்ள இராச்சியமாகத் தரம் உயர்த்தினார்.<ref name="Boxer, p.&nbsp;213"/> 1809 ஆம் ஆண்டில் பிரெஞ்சு கயானாவைப் போத்துக்கீசர் கைப்பற்றினர். 1817ல் இது மீண்டும் பிரான்சிடம் வழங்கப்பட்டது.<ref>Bueno, p.&nbsp;145.</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிரேசில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது