தாஜ் மகால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ref link correction
No edit summary
வரிசை 47:
| [[படிமம்:Mumtaz Mahal.jpg|thumb|right|150px|மும்தாஜைக் காட்டும் படம்]]
|}
1631 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசின் உயர்நிலையில் அப்பேரரசை ஆண்ட ஷா ஜகானின் மூன்றாம் மனைவி மும்தாஸ், அவர்களது 14 ஆவது பிள்ளையான [[குகாரா பேகம்]] பிறந்தபோது இறந்துவிட்டாள். பெருந் துயரம் அடைந்த மன்னன் அவளது நினைவாக இந்தக் கட்டிடத்தைக் கட்டத் தொடங்கியதாகவே அவனது வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன. மும்தாஸ் இறந்த அதே ஆண்டிலேயே தாஜ்மகாலின் கட்டிட வேலைகள் தொடங்கின. முதன்மைக் கட்டிடம் 1648 இல் கட்டி முடிக்கப்பட்டது. சூழவுள்ள கட்டிடங்கள், [[பூங்கா]] ஆகியவற்றின் கட்டிட வேலைகள் ஐந்து ஆண்டுகள் கழித்தே நிறைவேறின. பேரரசன் ஷா ஜகானே இக் கட்டிடத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறியதாகச் சொல்லப்படுகிறதுசொல்லப்படுகின்றது:
 
: <small>"குற்றம் செய்தவன் இதனைத் தஞ்சம் அடைந்தால், மன்னிக்கப்பட்டவனைப் போல் அவன் தனது பாவங்களிலிருந்து விடுதலை பெறுவான். ஒரு பாவி இந்த மாளிகைக்கு வருவானேயானால், அவன் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். இதனைக் காணும்போது துயரத்துடன் கூடிய பெருமூச்சு உண்டாகும். சூரியனும், சந்திரனும் கண்ணீர் வடிப்பர். படைத்தவனைப் பெருமைப் படுத்தவே இக்கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது".</small>
வரிசை 84:
தாஜ்மகால் தொகுதி மூன்று பக்கங்களில் செந்நிற மணற்கற் சுவர்களால் சூழப்பட்டுள்ளது. யாமுனை ஆற்றை நோக்கியுள்ள பக்கத்தில் சுவர்கள் இல்லை. சுவருக்கு வெளியே ஷா ஜகானின் ஏனைய மனைவியர்களுடையவை உட்பட மேலும் பல சிறிய சமாதிக் கட்டிடங்கள் உள்ளன. இவற்றுள் சற்றுப் பெரிய கட்டிடம் மும்தாஜின் விருப்பத்துக்குரிய பணிப்பெண்ணுடையது. இவற்றுட் பெரும்பாலானவை, அக்காலத்து சிறிய முகலாயச் சமாதிக் கட்டிடங்களைப் போல் செந்நிற மணற்கற்களால் ஆனவை. சுற்றுச் சுவர்களின் உட்பக்கங்களில், வளைவுகளுடன் கூடிய தூண் வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இந்தியாவின் இந்துக் கோயில்களில் காணப்படும் அம்சம் முகலாயக் கட்டிடங்களில் பயன்பட்டது.
 
முக்கியமாகச் சலவைக்கல்லால் அமைக்கப்பட்ட முதன்மை நுழைவாயில் முந்திய பேரரசர்கள் காலத்து முகலாயக் கட்டிடங்களை நினைவூட்டுகிறது. இது சமாதிக் கட்டிடத்தை ஒத்த வளைவுகளையும், புடைப்புச் சிற்பங்களையும், >பதிப்பு அழகூடல்களையும் கொண்டுள்ளது.
 
===ஆக்ராவின் தாஜ்மகாலைப் பார்த்தபோது சுவாமி விவேகானந்தர் கூறியது===
வரிசை 91:
 
== கட்டுமானம் ==
ஆக்ரா நகருக்குத் தெற்கே உள்ள நிலமொன்றில் தாஜ்மகால் கட்டப்பட்டது. மகாராஜா ஜெய் சிங் என்பவருக்குச் சொந்தமான இந்த நிலத்தைப் பெறுவதற்காக, ஷா ஜகான் அவருக்கு ஆக்ரா நகரின் மையப்பகுதியில் பெரிய நிலமொன்றை வழங்கினார். ஏறத்தாழ மூன்று ஏக்கர் நிலப்பரப்புக் கொண்ட பகுதி அகழப்பட்டு மண் நிரப்பி இறுக்கப்பட்டு ஆற்று மட்டத்திலிருந்து 50 மீட்டர் உயரத்துக்கு நிரப்பப்பட்டது. முதன்மைக் கட்டிடப் பகுதியில் ஆழமான கிணறு போன்ற அமைப்புகள் தோண்டப்பட்டு கற்களும், சிறு பாறைகளும் இட்டு நிரப்பி அத்திவாரம் இடப்பட்டது. மூங்கிலால் ஆன சாரமரங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்துவதற்காக செங்கற்களால் தற்காலிக அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவ்வமைப்புக்கள் மிகவும் பெரிதாக இருந்ததால் இதட் அகற்றுவதற்குப் பல ஆண்டுகள் ஆகக்கூடுமென்று அக்காலத்து [[மேற்பார்வையாளர்]]கள் கருதியதாகத் தெரிகிறது. மரபுவழிக் கதைகளின்படி கட்டிடம் கட்டி முடிந்ததும், இந்தத் தற்காலிக அமைப்பில் இருந்து எவரும் கற்களை எடுத்துத் தாங்களே வைத்துக் கொள்ளலாம் என அறிவித்தானாம் இதனால் ஓரிரவிலேயே இவ்வமைப்புக்கள் அகற்றப்பட்டனவாம். சலவைக்கற்களை கட்டிடக் களத்துக்கு எடுத்துச் செல்வதற்கு 15 கிலோமீட்டர் நீளமான [[சாய்தளம்|சாய்தளப்]] பாதை ஒன்று மண் போட்டு இறுக்கி அமைக்கப்பட்டதாம். 20 தொடக்கம் 30 எருதுகளைக் கொண்ட குழுக்களைக் கொண்டு இதற்கென உருவாக்கப்பட்ட வண்டிகளில் கற்களை ஏற்றி இழுத்துவந்ததாகச் சொல்லப்படுகிறதுசொல்லப்படுகின்றது.
 
== கறுப்பு நிறத் தாஜ் மஹால் ==
"https://ta.wikipedia.org/wiki/தாஜ்_மகால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது