சாரதா தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அன்னை சாரதா தேவி
 
சி added one point
வரிசை 22:
==சங்க ஜனனி==
[[சுவாமி விவேகானந்தர்]], அன்னை சாரதா தேவியை சங்க ஜனனி என்று குறிப்பிடுவார். [[ராமகிருஷ்ணர் | ஸ்ரீராமகிருஷ்ணரின்]] மறைவுக்குப் பின்னர், 1888 ஏப்ரல் மாதம் கயைக்கு சென்ற அன்னை, அங்கு உள்ள சன்னியாசிகளுக்கு உள்ள மட வசதிகளை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் துறவிச் சீடர்கள் இருந்த ஏழ்மை நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்து வருந்தி அழுதார். அவர், ஸ்ரீராமகிருஷ்ணரிடம் "..உமது பெயரில் அனைத்தையும் துறந்த என் பிள்ளைகள் உணவுக்காகப் பிச்சையெடுப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உம்மிடம் எனது பிரார்த்தனை இதுதான்: உமது பெயரைச் சொல்லிக் கொண்டு உலகைத் துறப்பவர்களுக்குச் சாதாரண உணவும் உடையும் கிடைக்க வேண்டும். அவர்கள் உமது உபதேசங்களையும் லட்சியங்களையும் மையமாகக் கொண்டு ஓரிடத்தில் ஒன்றுகூடி வசிக்க வேண்டும். உலக வாழ்க்கையில் துன்புற்ற மக்கள், அவர்களிடம் வந்து உமது அமுதமொழிகளைக் கேட்டு ஆறுதல் பெற வேண்டும்.அதற்காகவே அல்லவா நீர் வந்தீர்! அவர்கள் அலைந்து திரிவதைக் காண என்னால் சகிக்க முடியவில்லை" என்று பிரார்த்தித்தார். இவ்வாறு தமது பிரார்த்தனை மூலம் ராமகிருஷ்ண இயக்கத்திற்கு முதல் விதையை இட்டார். அதனாலேயே ’சங்க ஜனனி’ (இயக்கத்தை தோற்றுவித்தவர்) எனப் போற்றப்படுகிறார்.
 
==கடைசி உபதேசம்==
1919 இறுதியிலிருந்து அவரது உடல் ஆரோக்கியம் குன்றியது. அவரது நோய் கடுமையான காய்ச்சல் (Kala-azar) என்று கல்கத்தாவில் கண்டு பிடிக்கப்பட்டது. தமது வாழ்நாளின் இறுதிநாள் 1920 ஜூலை 20 வரை அவர் இந்த நோயால் அவதிப்பட்டார். மகளே, யாரெல்லாம் வந்திருக்கிறார்களோ, யாரெல்லாம் வரவில்லையோ, இனி யாரெல்லாம் வரப்போகிறார்களோ, அந்த என் பிள்ளைகளுகெல்லாம் என் அன்பைத் தெரிவித்துவிடு.என் நல்லாசிகள் அவர்களுக்கு எப்போதும் உண்டு என்று தமது கடைசி உபதேசத்தை அளித்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சாரதா_தேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது