"வீரசிங்கம் ஆனந்தசங்கரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9,192 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''வீரசிங்கம் ஆனந்தசங்கரி''' (பிறப்பு: [[சூன் 15]], [[1933]]) ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாவார். இவர் [[தமிழர் விடுதலைக் கூட்டணி|தமிழர் விடுதலைக் கூட்டணியின்]] தலைவர். தமிழர் விடுதலைக் கூட்டணி [[தமிழ் தேசிய கூட்டமைப்பு|தமிழ் தேசிய கூட்டமைப்பில்]] சேரும்பொழுது எழுந்த கருத்து வேறுபாடுகளில் இவரது தலைமை கேள்விக்குட்படுத்தப்பட்டது. இவர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர மறுப்பு தெரிவித்தார்.
 
ஆனந்தசங்கரி, [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளை]] விமர்சிக்கும் ஒரு முக்கிய தமிழ் அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]] - சமரசம் அகிம்சை ஊக்குவிப்போருக்கான மதன்ஜித் சிங் பரிசு (UNESCO-Madanjeet Singh Prize for the Promotion of Tolerance and Non-Violence) வழங்கப்பட்டது.
 
==இடதுசாரி அரசியலில்==
ஆனந்தசங்கரி 1955 ஆம் ஆண்டில் இடதுசாரி [[இலங்கை சமசமாஜக் கட்சி]]யில் சேர்ந்து கொண்டார். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|1960 மார்ச்]] மாதத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட [[கிளிநொச்சி தேர்தல் தொகுதி]]யில் இக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு 1,114 வாக்குகள் மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-03-19|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960|1960 சூலை]],<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-07-20|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> மற்றும் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1965|1965]]<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1965|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> தேர்தலிலும் சமசமாஜக் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1965 ஆம் ஆண்டில் கிளிநொச்சி [[கரைச்சி பிரதேசச் செயலாளர் பிரிவு|கரைச்சி கிராமசபை]]த் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
==தமிழக் காங்கிரசில் இணைவு==
1966 மே மாதத்தில் [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]] கட்சியில் இணைந்து 1968 ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட கிளிநொச்சி நகரசபையின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970 இல் தமிழ்க் காங்கிரசுக் கட்சியின் இளைஞர் அணியின் தலைவரானார். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970|1970 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் வேட்பாளர் [[மு. ஆலாலசுந்தரம்|மு. ஆலாலசுந்தரத்தை]] 657 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1970|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref>
 
==தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைவு==
1972 ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரசு, [[இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்]] ஆகியன இணைந்து [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]யை ஆரம்பித்து அதனை அரசியல் கட்சியாகப் பதிவு செய்தனர். அன்று தமிழ்க் காங்கிரசுக் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆனந்தசங்கரி மட்டுமே தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொண்டார். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977 நாடாளுமன்றத் தேர்தலில்]] கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு அன்றைய [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யின் அமைச்சர் [[சி. குமாரசூரியர்|சி. குமாரசூரியரை]] 11,601 வாக்குகளால் தோற்கடித்தார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|title=Result of Parliamentary General Election 1977|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> [[ஈழ இயக்கங்கள்|இலங்கைத் தமிழ்ப் போராளிகளின்]] அழுத்தத்தாலும், [[தமிழ் ஈழம்|தமிழ் ஈழத்துக்கு]] ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், [[கறுப்பு ஜூலை|கருப்பு சூலை]] வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் [[வீரசிங்கம் ஆனந்தசங்கரி]] நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்<ref>{{cite news|last=Wickramasinghe|first=Wimal|title=Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament|url=http://www.island.lk/2008/01/18/features11.html|newspaper=தி ஐலண்டு|date=18 சனவரி 2008}}</ref>. ஆறாம் திருத்தச் சட்டத்துக்கு அமைய சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்ததை அடுத்து வழக்கறிஞராகப் பணியாற்றும் உரிமையும் இவருக்கு மறுக்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://kiruththiyam.blogspot.com/2009/06/15062009-77.html நீதி நியாயத்திற்கான குரலின் தலைவர் - திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள்
 
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:விடுதலை புலிகள் மீது விமர்சனங்கள்]]
[[பகுப்பு:1933 பிறப்புகள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 7வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்இந்துக்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள்]]
[[பகுப்பு:இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் ஆசிரியர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:விடுதலை புலிகள் மீது விமர்சனங்கள்]]
1,15,982

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1685134" இருந்து மீள்விக்கப்பட்டது