மாக்ஸ் முல்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
a
சி Added few more points with ref
வரிசை 5:
'''மாக்ஸ் முல்லர்''' ([[டிசம்பர் 6]], [[1823]] - [[அக்டோபர் 28]], [[1900]]), என்று பரவலாக அறியப்பட்ட '''பிரெட்ரிக் மாக்ஸ் முல்லர்''' (''Friedrich Max Müller'') ஒரு [[ஜெர்மன்|ஜெர்மானிய]] [[மொழியியலாளர்|மொழியியலாளரும்]], கீழைத்தேச ஆய்வாளரும் ஆவார். [[இந்தியவியல்|இந்தியவியலைத்]] தொடக்கி வைத்தவர்களுள் ஒருவராகக் கருதப்படும் இவர், [[சமயம்|சமய]] ஒப்பாய்வுத் துறையை உருவாக்கியவராகவும் கருதப்படுகிறார். இத் துறையில் இவர், ஆய்வு நூல்களையும், சாதாரண பொதுமக்களுக்கான நூல்களையும் எழுதியுள்ளார். இவருடைய மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட, ''[[கிழக்கத்தியப் புனித நூல்கள்]]'' (''Sacred Books of the East'') என்னும் பெயர்கொண்ட 50 தொகுதிகள் அடங்கிய பெரிய நூல் விக்டோரியா காலத்தின் ஆய்வு முயற்சிகளுக்குச் சான்றான ஒரு நினைவுச் சின்னமாக இன்றும் திகழ்கிறது.
 
==விவேகானந்தருடன்==
சுவாமி விவேகானந்தர் இவரைப் பற்றி, "தாம் எழுதிய உரையைப் புதுப்பிக்க சாயனர்தான் இப்போது மாக்ஸ்முல்லராகப் பிறந்திருக்கிறார் என்று நான் எண்ணுகிறேன். நீண்ட காலமாகவே எனக்கு இந்தக் கருத்து இருந்தது. மாக்ஸ்முல்லரைப் பார்த்த பிறகு அது உறுதியாகிவிட்டது." என்று கூறியுள்ளார்
 
==ரிக் வேதம்==
ரிக்வேதத்தை வெளியிட அவருக்குக் கிழக்கிந்திய கம்பெனி ஒன்பது லட்சம் ரூபாய் கொடுத்தது. அதன் கையெழுத்து பிரதியை தயாரிக்கவே அவருக்கு இருபத்து ஐந்து வருடங்கள் ஆயிற்று. அச்சிடுவதற்கு மேலும் இருபது வருடங்கள் பிடித்தன.
 
==ராமகிருஷ்ணர்: வாழ்வும், வாக்கும்==
இவர் [[சுவாமி விவேகானந்தர் | சுவாமி விவேகானந்தரின்]] குருவான [[ராமகிருஷ்ணர் | ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்]] அவதார புருஷர் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டவர். அவரைக் குறித்த கட்டுரைகளும், புத்தகமும் எழுதியவர்.
இவர் எழுதிய "ராமகிருஷ்ணர்: வாழ்வும், வாக்கும்" (Râmakrishna: His Life and Sayings (1898)) என்ற புத்தகம் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றி வெளிநாட்டினரால் எழுதப்பட்ட புத்தகங்களுள் முன்னோடியான ஒன்று.
 
==திலகரைப் பற்றிய கருத்து==
இவர் இந்தியாவின் பால கங்காதர திலகர் சிறையில் அடைக்கப்பட்ட போது, அப்போதைய விக்டோரியா மகாராணிக்கு திலகர் விடுதலை செய்யப்பட வேண்டும், சிறையில் நல்லவிதமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதினார். வில்லியம் வில்சன் ஹன்டர் மற்றும் பலரும் இக்கடிதத்தில் கையெழுத்திட்டனர். <ref>[[http://www.yabaluri.org/triveni/cdweb/therighthonourablefmaxmuellerjul71.htm மாக்ஸ் முல்லர்]]</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==உதவி நூல்==
* எழுந்திரு! விழித்திரு! ; சொற்பொழிவுகள் மற்றும் எழுதியவற்றின் தொகுப்பு : 6; பக்கம் 57,58, ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை
* [[http://www.advaitaashrama.org/cw/content.php சுவாமி விவேகானந்தர் எழுதியவற்றின் தொகுப்பு]]
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/மாக்ஸ்_முல்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது