போர்த்துக்கலின் ஆறாம் யோவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 27:
 
1767இல் [[லிஸ்பன்|லிசுபனில்]] [[போர்த்துகலின் மூன்றாம் பீட்டர்]] அரசருக்கும் அரசி முதலாம் மாரியாவிற்கும் மகனாகப் பிறந்தார். துவக்கத்தில் போர்த்துகலின் அரியணை வாரிசல்லாத இளவரசராக (இன்பன்ட்) இருந்தார்; 1788இல் அவரது அண்ணன் ஓசே தனது 27வது அகவையில் [[பெரியம்மை]] தாக்கி மரணமடைந்தபோது பட்டத்திற்குரிய இளவரசரானார்.
 
போர்த்துக்கேய அரியணையில் ஏறுமுன்னரே அவர் பிரகன்சா கோமான், பெஜா கோமான், பிரேசிலின் இளவரசர் ஆகிய பட்டங்களை பெற்றிருந்தார். 1799இல் அரசியும் அவரது அன்னையுமான முதலாம் மாரியா மனநோய்வாய்ப்பட்டபோது அரசப் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தார். 1815இல் போர்த்துகல்,பிரேசில்,அல்கார்வெசு ஐக்கிய இராச்சியம் உருவானபோதும் அதனை அரசப் பிரதிநிதியாக ஆண்டு வந்தார். இறுதியில் அன்னையின் மறைவிற்குப் பிறகு போர்த்துகல் பேரரசின் அரசராகப் பொறுப்பேற்றார்.
 
முழுமையான முடியாட்சிக் காலத்தின் கடைசி பிரதிநிதியாக விளங்கிய ஆறாம் யோவான் தமது ஆட்சியில் கிளர்ச்சிமிக்க காலத்தை சந்தித்தார். அவரது ஆட்சியில் அமைதியே இல்லாதிருந்தது. பெரும் அரசுகளான [[எசுப்பானியா]], [[பிரான்சு|பிரெஞ்சுப் பேரரசு]] மற்றும் அதன் வழித்தோன்றல் [[முதலாம் பிரஞ்சு பேரரசு]], [[பெரிய பிரித்தானியா]] (1801இலிருந்து, [[ஐக்கிய இராச்சியம்|பெரிய பிரித்தானியா,அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்]]) தொடர்ந்து போர்த்துக்கல்லின் விடயங்களில் குறுக்கிட்டு வந்தன. [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியனின் படைகள்]] போர்த்துக்கலை படையெடுத்தபோது [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்குப் பெருங்கடலுக்கு]] அப்பாலுள்ள [[தென் அமெரிக்கா]]விற்கு தப்பியோடி [[பிரேசில்|பிரேசிலில்]] இருந்து ஆட்சி புரிந்தார். பிரேசிலிலும் [[தாராண்மையியம்|தனிநபர் விடுதலையாளர்களின்]] எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி வந்தது. புதிய பிரச்சினைகளை எதிர்நோக்க ஐரோப்பாவிற்கு திரும்பும்படியானது. அவரது மணவாழ்க்கையும் அமைதியானதாக இல்லை. அவரது மனைவி கார்லோட்டா தொடர்ந்து கணவருக்கு எதிராக தனது பிறந்த நாட்டினருக்கு (எசுப்பானியா) துணை புரிந்து வந்தார். அவரது மகன், பெட்ரோ, பிரேசிலின் விடுதலையை அறிவித்து அவரது ஆட்சிப்பரப்பை குறைத்தார். மற்ற மகன் மிகுவல் தந்தைக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டார். தற்கால ஆய்வுகள் அவரது மரணம் [[ஆர்சனிக்]] நஞ்சூட்டலால் நிகழ்ந்திருக்கலாம் எனக் காட்டுகிறது.
 
இத்தனை பிரச்சினைகளுக்கும் நடுவிலும் தமக்கெனத் தனி இடம் பெற்றவர் ஆறாம் யோவான். முக்கியமாக பிரேசிலில் புதிய பொருளாதாரத்திற்கு வேண்டிய பல அமைப்புக்களை நிறுவினார். தற்கால பிரேசிலுக்கு அடித்தளம் அமைத்தவராக பலாய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும் லூசோ-பிரேசிலிய வரலாற்றில் இவரை ஓர் நகைச்சுவை நபராகவே சித்தரிக்கின்றனர்; சோம்பேறித்தனமான, அரசியல் நுட்பமற்ற, முடிவெடுக்க இயலாதவராக, உடற்பருமன் மிகுந்தவராக சித்தரிக்கின்றனர்.
 
 
[[பகுப்பு:போர்த்துகலின் அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/போர்த்துக்கலின்_ஆறாம்_யோவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது