நெகிழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Plastic household items.jpg|thumb|300px|நெகிழிப் பொருட்களால் ஆன பல பயன்பாட்டுப் பொருட்கள்]]
'''நெகிழி''' அல்லது '''பிளாஸ்டிக் '''(Plastic) என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். "வார்க்கத் தக்க ஒரு பொருள்" என்னும் பொருள் தரும் "பிளாஸ்டிகோஸ்" என்ற [[கிரேக்க மொழி|கிரேக்கச்]] சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. நெகிழி என்னும் பொருளானது பிசைவு கொள்ளும் பொருள் ஆகும். அழுத்தம் தந்தால் வளைந்து கொடுக்காமலும் உடைந்தும் போகாமல் பிசைவு கொள்ளும் பொருட்கள் நெகிழிப் பொருள்கள் எனப்படும். களிமண் ஒரு வகையான நெகிழிப் பொருள். [[பீங்கான்]], [[கண்ணாடி]] போன்ற பொருள்கள் முறுகலான பொருட்கள் அவை வளைந்து கொடுக்காமல் உடைந்துவிடும். [[இரும்பு]] (எஃகு), [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]] [[தங்கம்]] போன்ற [[உலோகம்|மாழைகளை]] (உலோகங்களை) அறை வெப்பநிலையில் வளைத்தால், அவை மீண்டும் தன் நிலையை எய்தும். இத்தகு மீட்சித் திறன் (மீண்மை) கடந்த நிலையில் பல பொருட்கள் பிசைவு (அல்லது நெகிழ்வு) நிலையை அடைகின்றன. தங்கம், வெள்ளி போன்ற மாழைகளை விசை தந்து இழுத்தால், அவை முதலில் மீண்மைப் பண்புகளைக் காட்டும், பின்னர் இன்னும் அதிக விசையுடன் இழுத்தால் மீண்மை நிலையைக் கடந்து நெகிழ்வு நிலை அடையும். இதனை இளக்கம் (''yield'') என்பர். ஆனால் நெகிழிப் பொருள் அல்லது பிளாஸ்டிக்கு என்பது பெரும்பாலும் செயற்கையாக [[வேதியியல்]] முறையில் பல்கிப் பெருகக்கூடிய ஒரு [[மூலக்கூறு]] (சேர்மம்) வடிவை [[பல்லுருத் தொடர்|பல்லுருத் தொடராக]] செய்வித்து ஆக்கப்பட்ட பொருள் ஆகும்.
== வரலாறு ==
நெகிழி முதன் முதலில் [[1862]] -ல் [[லண்டன்|லண்டனைச்]] சேர்ந்த '''அலெக்சாண்டர் பார்க்ஸ்''' என்பவரால் [[செல்லுலோஸ்]] என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டு [[லண்டன்]] கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதற்கு அவர் "பார்க்ஸ்டைன்" என்ற பெயரிட்டார். முற்காலத்தில் [[விலங்குகள்|விலங்குகளின்]] [[நகம்|நகங்கள்]], [[குளம்புகள்]], [[ஆமை]] ஓடுகள் கொண்டு "செராடின்" என்ற நெகிழியும், சில [[வண்டு]], [[பூச்சிகள்|பூச்சிகளில்]] இருந்து "ஷெல்லாக்" வார்னிஷும் செய்யப்பட்டன. [[பில்லியார்ட்ஸ்]] [[பந்துகள்]] செய்ய தந்தங்களுக்காக [[யானை]]கள் கொல்லப்படுவதைத் தடுக்க [[1869]] -ல் '''ஜான் ஹயாத்''' என்பவர் [[செல்லுலோஸ்]] என்ற மாற்றுப் பொருள் ஒன்றை உருவாக்கினார். பிறகு [[மரப்பட்டை]], [[நைட்ரிக் அமிலம்]], [[கற்பூரம்]], [[பசை]] ஆகியவை கொண்டு [[செல்லுலாய்டு]] என்ற நெகிழி உருவானது. 1907-ல் '''லியோ பேக்லாண்டு''' என்பவர் மின் சுவிச்சுகள் செய்ய செயற்கை வேதிப் பொருள்கள் கொண்டு '''பேக்லைட்''' என்ற பொருளை உருவாக்கினார். முதல் உலகப் போரில், 'டுபாண்ட் அமெரிக்க நிறுவணம்'வெடி பொருள் நெகிழித் தொழிற்சாலையைத் தொடங்கி மேலும் வளர்ந்து பல நெகிழிப் பொருள்களை உருவாக்கியது. 1913-ல் கட்டுவதற்கான நெகிழி உருவானது. 1933-ல் '''பாசெட்''' மற்றும் '''கிப்ரான்''' ஆகியோர் உருவாக்கிய [[பாலிதீன்]] அதாவது [[பாலி எத்திலீன்]], இரண்டாம் உலகப் போரில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இன்று வரை மிக அதிகமாகப் பயன்படுத்தும் பொருளாகவும் பல சிக்கல்களை உருவாக்கும் பொருளாகவும் இருந்து வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நெகிழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது