நவ துர்கைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
No edit summary
வரிசை 136:
காளராத்திரி கோவில்கள்:
# காளராத்திரி துர்கா ஆலயம், வாரணாசி, உத்தரப் பிரதேசம்
 
 
 
 
== மகாகௌரி ==
 
நவராத்திரியின் எட்டாம் நாளம் துர்காஷ்டமி தினத்தில் அன்னையை 'மகாகௌரி ' என வழிபடுகின்றனர் .மகா என்றால் பெரிய ,கௌரி என்றால் தூய்மையான என பொருள் .இவள் மிகுந்த வெண்மையாக இருப்பதால் மகா கௌரி எனப்படுகிறாள் .முன்னொரு காலம் பார்வதி சிவனை நோக்கி தவம் செய்த போது அவள் உடல் மண் சூழ்ந்து கருமையானது .அவளின் தவத்தால் மகிழ்ந்த ஈசன் அவளை மணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார் .அதற்கு முன் தேவியை அவர் கங்கை நீரால் நீராட்டினார் .அதனால் தேவியின் உடல் பால் போல வெண்மையானது .இவளே மகாகௌரி .
 
இவள் நான்கு கரம் கொண்டது ஒரு கரம் சூலத்தையும் , மறு கரம் மணியையும் தங்கி நிற்கும் .மற்ற இரு கரங்கள் பக்தருக்கு அபயம் தரும் வகையில் உள்ளன .இவளின் வாகனம் வெண்மையான காளை ஆகும் .இவளின் அருள் கிட்டினால் நம் வாழ்வு வசந்தமாகும் .இவள் நம் பிரார்த்தனைகளை விரைவில் நிறைவேற்றுவாள் என ஐதீகம் .
 
இவள் உடல் சக்ரங்களில் ' ஸ்வாதிஷ்டானமாய்' இருப்பவள் .யோகிகள் இவளின் ஆசி கொண்டு இந்த சக்ரத்தை அடைவர் .அன்னையின் வாகனம், ஆபரணம் என அனைத்தும் வெண்மையாக இருக்கும் .இவளின் த்யான மந்த்ரம்
 
{{cquote|ஸ்வேத விருஷப சமாருத ஷ்வேதாம்பர தாரா ஷுச்சின் மகாகௌரி சுபம் தத்யான் மகாதேவ பிரமோததா }}
 
"வெண்மையான காளையின் மீது ஏறி வருபவளும் ,தூய்மையான வெண்ணிற ஆடை அணிந்தவளும் , தூய்மையானவளும் ,மகாதேவரின் நாயகியாம் அன்னை மகா கௌரி எனக்கு அனைத்து நலன்களையும் , வளங்களையும் தர பிரார்த்தனை செய்கிறேன் "
 
மகாகௌரி கோவில்கள் : கண்க்ஹல் ,ஹரித்வார் ,உத்தரகாண்ட் மாநிலம்
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நவ_துர்கைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது