இராம் நாயக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,227 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
→‎top: *விரிவாக்கம்*
(→‎top: *விரிவாக்கம்*)
 
இராம்நாய்க் [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தின்]] சாங்லி மாவட்டத்தில் அட்பாடியில் நடுத்தர [[தேசஸ்த் பிராமணர்]] குடும்பத்தில் பிறந்தார். மே 17, 1960இல் குந்தா நாயக்கை மணந்து இரு மகள்களுக்குத் தந்தையானார். இவரது மூத்த மகள் நிசிகந்தா நாயக் உயிரியலாளர் ஆவார்; இளைய மகள் விசாகா குல்கர்னி இவருக்கு தனிச்செயலராகப் பணியாற்றுகிறார்.
 
 
[[பாரதிய ஜனதா கட்சி]]யின் உறுப்பினரான இராம்நாய்க் 13ஆவது [[மக்களவை (இந்தியா)|மக்களவை]]யில் பங்கேற்றுள்ளார் (1999–2004). முந்தைய தேசிய சனநாயக கூட்டணி அரசில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவளி அமைச்சராக பணிபுரிந்துள்ளார். [[பதினான்காவது மக்களவை|14ஆவது மக்களவையில்]] மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் இந்தி நடிகரும் இந்தியத் தேசியக் காங்கிரசின் வேட்பாளருமான [[கோவிந்தா]]விடம் தோற்றார். இதனையடுத்து 2014ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை.<ref>http://zeenews.india.com/news/nation/former-petroleum-minister-ram-naik-not-to-contest-ls-elections_879203.html</ref>
==பொறுப்பிலிருந்த பதவிகள் ==
* 1969-1977 - அமைப்புச் செயலாளர், [[பாரதீய ஜனசங்கம்]], [[மும்பை]]
* 1977-78 - பொதுச் செயலாளர், [[ஜனதா கட்சி]], மும்பை
* 1978-1989 - உறுப்பினர், மகாராட்டிர சட்டப் பேரவை (3 முறை)
* 1979-1980 - தலைவர், [[ஜனதா கட்சி]], மும்பை
* 1980-1986 - தலைவர், பாஜக, மும்பை
* 1986-1989 - துணைத் தலைவர், பாஜக, மகாராட்டிரம்
* 1989 - 9ஆவது மக்களவை உறுப்பினர்
* 1991 - 10ஆவது மக்களவை உறுப்பினர்
* 1999 - 13ஆவது மக்களவை உறுப்பினர்
* 1999-2004 - நடுவண் ஆய அமைச்சர், பாறைநெய் மற்றும் இயற்கை வளி
* 2004 முதல் - பாஜக அனைத்திந்திய ஒழுங்குக் குழுத் தலைவர்
 
==மேற்சான்றுகள்==
29,838

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1692505" இருந்து மீள்விக்கப்பட்டது