நவ துர்கைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 153:
 
மகாகௌரி கோவில்கள் : கண்க்ஹல் ,ஹரித்வார் ,உத்தரகாண்ட் மாநிலம்
 
== சித்திதாத்ரி ==
நவராத்திரி விழாவின் இறுதி நாளாம் மகா நவமி அன்று 'சித்தி தாத்ரி'யை ஆராதனை செய்வர் .சித்தி என்றால் சக்தி என்றும் தாத்ரி என்றால் தருபவள் என்று பொருள் .சித்திதாத்ரி என்றால் என்றால் பக்தருக்கு அனைத்து சித்திகளையும் தருபவள் . மார்கண்டேய புராணத்தின்படி எட்டு விதமான சித்திகள் -அணிமா ,மகிமா ,கரிமா ,லஹிமா ,ப்ராப்தி ,பிரகாமியம் , வாசித்வம் ,ஈசத்வம் என எட்டு விதமான சித்திகளையும் பக்தருக்கு தருபவள் இவள் .
 
அன்னை தாமரை மலரில் அமர்ந்து இருப்பவள் .நான்கு கரம் கொண்டு இருக்கும் இவள் இடது கரத்தில் கதை ,சக்ரம் கொண்டும், வள கரத்தில் தாமரை ,சங்கு ஏந்தியவள் .அன்னைக்கு வாகனம் சிங்கம் .தேவி புராணம் இவளை வழிபாடு செய்து அனைத்து சித்திகளையும் பெற்று 'அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என கூறுகிறது .
 
இவளின் அருள் யோகிகளுக்கு அனைத்து சித்திகளையும் தரும் .நவராத்ரியின் எட்டு நாட்களில் மற்ற அனைத்து சித்திகளையும் அடைந்த அவர்கள் இவள் அருளால் பேரானந்தம் என்னும் பேற்றை எய்துவர் .
 
நவராத்திரியின் மற்ற எட்டு நாட்களில் துர்கைகளை முறைப்படி பூஜை செய்யும் பக்தன் இறுதி நாளில்
சித்திதாத்ரி பூஜை செய்வான் .இவளை வழிபட்டால் மனதில் உள்ள ஐயம் நீங்கும் .எல்லாமும் ஒரு மகா சக்தியில் இருந்து தோன்றியதே என்ற தத்துவத்தை உணர வைப்பவள் இவள் .இவளை வழிபடுவோர் பேர்ஆனந்தத்தை அடைவர் .அவர்களுக்கு தேவை என்ற ஒன்று இருக்காது .அவன் அம்பிகையின் கருணை மழையில் நனைவான் .அவனுக்கு வேறு எதுவும் தேவைப்படாது .
 
சித்திதாத்ரி தேவியை எந்நேரமும் மனிதர் ,தேவர் ,முனிவர் ,யக்ஷர் ,கிங்கரர் வழிபடுவர் .இவள் அருள் மோட்சத்தின் பாதையை நமக்கு காட்டும். இவளுக்கான தியான மந்திரம்
 
{{cquote|சித்த, கந்தர்வ் ,யக்யாதிர்,சூர்ஆர் மரைரபி, சேவயாமணா சதா போயாத் சித்திதா சித்தி தாயினீ }}
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நவ_துர்கைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது