தொற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
பல தொற்றுநோய்கள் [[நோய்க்காவி|நோய்க்காவியினாலும்]] கடத்தப்படுகின்றது. இந்தக் கடத்தலின்போது, நோய்க்காரணியானது காவியின் உடலினுள் உட்செல்லாமல், காவியின் வெளியுடலில் ஒட்டிக்கொண்டு சென்று கடத்தப்படுமாயின் அதை பொறிமுறைக் கடத்தல் (mechanical) என்று அழைக்கலாம். உதாரணமாக ஈயானது மாட்டுச்சாணத்தில் உட்காரும்போது, அதன் உடலில் [[நோய்க்காரணி|நோய்க்காரணிகள்]] ஒட்டிக்கொண்டு சென்று, மீண்டும் அவை உணவுப் பொருட்களின் மேல் உட்காரும்போது, உணவுப் பொருளை அசுத்தமடையச் செய்கின்றது. இதனால், அந்த உணவை உட்கொள்ளும் உயிரினத்திற்கு [[நோய்க்காரணி]] கடத்தப்பட்டு, அங்கு நோயை ஏற்படுத்துகின்றது. மாறாக உயிரியல் [[நோய்க்காவி|நோய்க்காவிகள்]] எனப்படுபவை இயக்க நிலையிலிருந்து, [[நோய்க்காரணி|நோய்க்காரணியை]] தன் உடலினுள்ளே எடுத்துச் சென்று, வேறொரு உயிரினத்தினுள் செலுத்தி, அங்கே [[நோய்க்காரணி|நோய்க்காரணியை]] கடத்துகிறது. உதாரணமாக, நுளம்பானது ஒருவரிலிருந்து தான் பெறும் குருதியில் இருக்கும் [[நோய்க்காரணி|நோய்க்காரணியை]], வேறொரு நபரை கடிக்கும்போது, அவரது உடலினுள் செலுத்துவதன் மூலம் கடத்துகிறது. பொதுவாக தீவிரமான குருதியிலிருந்து உருவாகும் தொற்றுநோய்களான [[மலேரியா]], [[யானைக்கால்]] [[நோய்]] போன்றவை இப்படியான காவிகளாலேயே ஏற்படுகின்றது. வேறு [[உயிரினம்|உயிரினங்களும்]] [[உயிரியல்]] [[நோய்க்காவி|நோய்க்காவிகளாக]] இருக்கின்றதாயினும், பொதுவானவை நுளம்பு, ஈ, தெள்ளு, பேன் போன்ற ஆத்ரோபோடா வகையைச் சார்ந்த [[உயிரினம்|உயிரினங்களாகும்]]. இப்படியான [[நோய்க்காவி|நோய்க்காவிகள்]] [[நோய்க்காரணி|நோய்க்காரணியின்]] வாழ்க்கைவட்டத்தின் குறிப்பிட்ட நிலைக்கு அவசியமாக இருப்பதனால், [[நோய்க்காவி|நோய்க்காவியை]] அழிப்பதன்மூலம் நோய்க்கடத்தலையும், நோய்பரவலையும் தடுக்கலாம்.
 
'''தடித்த எழுத்துக்கள்'''== நோய்க்கடத்தலை தடுத்தல் ==
நோய்க்கடத்தலை தடுப்பதற்கு, ஒவ்வொரு நோயையும் உருவாக்கும் [[உயிரினம்]] பற்றி, [[நோய்|நோயின்]] இயல்புபற்றி, [[நோய்]] கடத்தப்படும் முறைபற்றி அறிந்திருத்தல் அவசியமாகும். அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான இயல்புகளாவன, [[நோய்க்காரணி|நோய்க்காரணியின்]] நோய்த்தொற்று வீரியம் (virulence), நோய்ப் பாதிப்புக்கு உட்பட்டிருப்பவர் செல்லும் தூரம், நோய்த் தொற்றின் நிலை என்பனவாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/தொற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது