பூலித்தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added few points and reference
சி Small correction and move
வரிசை 64:
1750-ல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தான். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தான்.இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றான் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது.<ref name="நூல்">{{cite book | title=விடுதலை வேள்வியில் தமிழகம் | pages=40}}</ref> பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும் கருதப்படுகிறது.<ref name="இந்து">{{cite press_release | url=http://www.thehindu.com/news/states/tamil-nadu/work-to-restore-17th-century-palace-begins/article104700.ece | title=Work to restore 17th century palace begins | accessdate=சனவரி 02, 2013}}</ref>
 
1755ஆம் ஆண்டு [[கர்னல் கீரோன்]] (கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார்.<ref>வீரத்தலைவர் பூலித்தேவர்-பேராசிரியர்- ந. சஞ்சீவி-காவியா பதிப்பகம்-சென்னை-2004</ref>
 
அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.
வரிசை 73:
 
1760ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு [[கேப்டன் பௌட்சன்]] வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1766ஆம் ஆண்டு தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், கொடூரமான போர்முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய [[கான்சாகிப்|கான்சாகிப்வால்]] '''பூலித்தேவரை''' ஆரம்பத்தில் வெல்ல முடியாமல் சுமார் 10 ஆண்டுகள் போரிட்டு அதன் பின் பூலித்தேவர் தோல்வியடைந்தார். அதன் பின் தலைமறைவானார். <ref>விடுதலைப் போரின் வீரமரபு-பக்கம்-36- பூலித்தேவன் -கீழைக்காற்று வெளியீட்டகம்-சென்னை-2010</ref>
 
1767 மே மாதம் டொனால்டு காம்பெல் தலைமையில் மேஜர் பிளிண்ட், காப்டன் ஹார்பர் ஆகியோர் வாசு தேவ நல்லூர் கோட்டையைத் திரும்பவும் தாக்கினர். குண்டுகளால் கோட்டை சுவரில் ஏற்பட்ட ஓட்டையை வீரர்கள் களிமண்ணும் வைக்கோலும் வைத்து அடைத்தனர், அதுவும் முடியாத சூழ்நிலையில் தத்தம் உடல்களைக் கொண்டு ஓட்டையை அடைத்துக் காத்தனர்.ஒருவாரம் நடந்த இந்த போரில் எதிர்பாராமல் வந்த பருவமழை உதவியால் புலித்தேவன் தப்பி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மறைந்து கொண்டார்.<ref name="புலித்தேவன்"/>
 
நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவர் மறுத்துவிட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/பூலித்தேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது