நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
இராகவப்பிள்ளை [[தஞ்சை மாவட்டம்]], [[கும்பகோணம்]] அருகில் உள்ள சிற்றூரான[[நாச்சியார்கோவில்|நாச்சியார்கோவிலில்]] பாரம்பரிய [[இசைவேளாளர்]] குடும்பத்தை சேர்ந்த நடன ஆசிரியர் பக்கிரியாப் பிள்ளை, கண்ணம்பாள் ஆகியோருக்கு மகனாக நவம்பர் 8, 1910ல் பிறந்தார். இவரது சகோதரர்கள் நடன ஆசிரியர் [[இராமச்சந்திரம் பிள்ளை]] மற்றும் இசைக்கலைஞர்கள் ரெங்கசாமி பிள்ளை, நடராஜப் பிள்ளை ஆகியோர். இவருக்கு காமு, அம்மணி, வஞ்சுவள்ளி என்ற சகோதரிகளும் உண்டு.
 
இராகவப்பிள்ளை குழந்தையாக இருக்கும்போது அவரது தொட்டிலை சுற்றி ஒரு நல்லபாம்பு இருப்பதை பார்த்த அவரது தாயார் அலறிக் கூச்சலிட தெருவில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்து அருகில் செல்ல அஞ்சி பெருமாள் திருநாமங்களைச் சொல்லி வேண்டி நின்றனர். பாம்பு மேல் கூரை வழியாக வெளியேறியது. இதனால் இவருக்கு [[இராகவன்]] என்று பெயர் சூட்டினர். பக்கிரியாப் பிள்ளை தன் மகனுக்கு இயற்கையிலேயே நல்ல கலை ஞானம் இருப்பதை அறிந்து அவருக்கு [[மிருதங்கம்]] பயில ஏற்பாடு செய்தார். ஆனால் இராகவப்பிள்ளைக்கு [[தவில்]] தான் அதிக விருப்பமாக இருந்தது. எனவே அவர் [[திருவாளப்புத்தூர் பசுபதியாபிள்ளை]]யிடம் இரண்டு ஆண்டுகளும், பின்பு [[நீடாமங்களம்நீடாமங்கலம் என்.மீனாட்சி டி. மீனாட்சிசுந்தரம்சுந்தரம் பிள்ளை]]யிடம் [[குருகுலம்|குருகுல]] வாசமாக பதினோரு ஆண்டுகளும் தவில் பயின்றார். அவரது திறமையும், பண்பையும் கண்ட மீனாட்சிசுந்தரம் பிள்ளை தன் மகள் ஜெயலட்சுமியை மே 7, 1935ல் அவருக்குத் திருமணம் செய்து வைத்தார்.
 
இராகவப்பிள்ளைக்கு கமலா, கோமதி, வேம்பு, பிரேமா, சித்திரா என்ற ஐந்து பெண்களும், வாசுதேவன் என்ற ஓரே மகனும் இருக்கிறார்கள். இவர் இரத்த அழுத்த நோயால் ஏப்ரல் 10, 1964 இயற்கை எய்தினார்.