தொன்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
பழங்காலத்தில் இருந்து வழங்கிவரும் கதைகளை '''தொன்மக் கதைகள்''' எனலாம். சில தொன்மக் கதைகள் உண்மைச் சம்பவங்கள் அல்லது வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவையாக அமைந்தாலும், காலப்போக்கில் அவை பல்வேறு திருபுகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டு அந்த உண்மைச் சம்பவங்கள் நோக்கிய விடயத் தகவல்கள் அரிதாகி போவதுண்டு. மகாவலிபுரத்தில் இருந்ததாக கூறப்படும் ஏழு கோயில்கள் பற்றய கதைகளை இந்த வகைக்கு எடுத்துக்காட்க்களாக அமைகின்றன. <ref> [http://news.bbc.co.uk/2/hi/south_asia/1923794.stm Lost city found off Indian coast] - BBC</ref>
 
 
பல தொன்மக் கதைகள் மனிதர்களால் இலக்கிய ரசனைக்காக புனையப்பட்ட கதைகள். இவற்றில் தகவல் கூற்றுக்கள் இருந்தாலும் இவை மனிதர்களால் புனையப்பட்ட அல்லது கற்பனை செய்யப்பட்ட கதைகள். தமிழில் இளங்கோ அடிகளால் எழுதப்பட்ட [[சிலப்பதிகாரம்]] இவற்றுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
 
 
பொதுவாக தொன்மக் கதைகளில் மீவுயிற்கைச் சம்பவங்கள் இருக்கும். மேலும் பல்வேறு கற்பனை உயிரினங்களும், சூழ்நிலைகளும், நிகழ்ச்சிகளும், செயல்களும் இருக்கும். இவற்றை தமிழ்ச் சூழலில் புராணங்கள் என்றும் குறிப்பிடுவர். இப்படியான கதைகளுக்கு [[பைபிள்]] தொன்மக் கதைகள், [[இராமாயணம்]], [[மகாபாரதம்]] ஆகியவை எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.
 
 
== தொன்மக் கதைகளும் வரலாற்று நிகழ்வுகளும் ==
பழங்காலத்தில் நடந்த நிகழ்வுகள் பலவற்றை கதை வழியாகவே நாம் இன்று அறியக்கூடியதாக உள்ளது. அப்படியான தொன்மக் கதைகளை நாம் இலக்கிய தொன்மக் கதைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவசியம். இன்று இந்த வேறுபடுத்தல் சற்று சிக்கலாகவே இருக்கின்றது. எடுத்துக்காட்டக [[குமரிக்கண்டம்]] நோக்கிய கதையாடல்களில் இந்தக் கருத்துக் குளப்பம் உண்டு.
 
 
== மேற்கோள்கள் ==
* [[:en:Myth]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/தொன்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது