சல்லிய பருவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "'5'_The_Mahabharata,_Duryodhana_versus_Bhimsena,_Sanskrit_Epic_India.jpg" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்...
வரிசை 1:
[[File:Mahabharata04ramauoftShalya 1143becomes commander in chief.jpg|thumb|துரியோதனன் சல்லியனைப் படைத் தலைவனாக நியமித்தல்.]]
 
'''சல்லிய பருவம்''' [[மகாபாரதம்|மகாபாரதத்தின்]] 18 பருவங்களுள் ஒன்பதாவது பருவம் ஆகும். [[கர்ணன்]] போரில் இறந்த பின்னர் [[சல்லியன்]] படைத் தலைமைப் பொறுப்பு ஏற்றுப் போரிட்ட காலப் பகுதியின் நிகழ்வுகளை இப்பருவம் விளக்குகின்றது. சல்லியன் ஒரு நாள் மட்டுமே படைத் தலைமைப் பொறுப்பில் இருந்து அன்றே [[தருமன்|தருமரின்]] கையால் மடிகிறான். இதனால் இப்பருவம் இறுதி நாளான ஒரு நாட் போர் நிகழ்வுகளை மட்டுமே விபரிக்கிறது. [[சகுனி]]யும் இதே நாளில் [[சகாதேவன்|சகாதேவனுடன்]] போரிட்டு இறக்கிறான். பெரும்பாலானோர் இறந்து மிகச் சிலரே எஞ்சியிருந்த நிலையில், [[துரியோதனன்]] ஏரியொன்றுக்குட் சென்று மறைந்து கொள்கிறான். [[வீமன்]] அப்பகுதிக்குச் சென்று துரியோதனனை இழிவாகப் பேசி அவனை வெளியே வரவைத்து அவனுடன் கதாயுதப் போர் செய்கிறான். [[கண்ணன்|கண்ணனின்]] தூண்டுதலால், போர் முறைக்கு மாறாக, வீமன் துரியோதனனைத் தொடையில் அடித்துக் கொல்கிறான்.<ref>அருட்செல்வப் பேரரசன், சோ.(மொழிபெயர்ப்பு), ''[http://www.mediafire.com/download/ivzvardi38g5tei/01+Adiparvam+Revised+full.pdf முழு மகாபாரதம் - ஆதிபர்வம்]'', பக். 25</ref>
"https://ta.wikipedia.org/wiki/சல்லிய_பருவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது