உரோமைப் பேரரசின் இறங்குமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
* கிழக்கு ஐரோப்பிய ஹுன்கள் [[அட்டிலா]] மற்றும் பிளேடா ஆட்சிகளில் வலிமை பெற்று (434-453), [[பால்கன் குடா]], கால், மற்றும் இத்தாலியைத் தாக்கினர். உரோமைக்கும் கான்ஸ்டண்டினோப்பிளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கினர்.
* 455இல் நடைபெற்ற இரண்டாவது ''சாக் ஆஃப் ரோம்'' நிகழ்வு - இம்முறை வாண்டல்கள் சூறையாடினர்.
* வாண்டல்களுக்கு எதிரான தாக்குதல்களின் தோல்வி (461 - 468). 461இல் மேற்கத்திய பேரரசர் [[மயோரியன்]] வாண்டல்களுக்கு எதிராக கடற்வழித் தாக்குதல் நடத்தி வடக்கு ஆபிரிக்காவை மீளவும் கைப்பற்ற திட்டமிட்டிருந்தார். இதனை முன்னதாகவே அறிந்த வாண்டல்கள் திடீர் தாக்குதல் நடத்தி முறியடித்தனர். 468இல் இரண்டாம் முறையாக முதலாம் லியோவும் ஆந்தெமியசும் அனுப்பிய கடற்படையும் தோல்வியைத் தழுவியது.
[[File:476eur.jpg|thumb|center|500px|476இல் இருந்த ஐரோப்பா, ''மூயிரின் வரலாற்று நிலப்படத்திலிருந்து'' (1911).]]
* கடைசி மேற்கத்தியப் பேரரசர்களான யூலியசு நெபோசு மற்றும் உரோமுலசு அகஸ்டசின் முடியிறக்கங்கள் (475 - 480). கிழக்கத்திய பேரரசர் செனோவால் நியமிக்கப்பட்ட நெபோசு கிளர்ந்தெழுந்த படைத்துறை தலைவர் பிளாவியசு ஒரெடெசால் முடியிறக்கப்பட்டார். ஒரெடெசு தமது மகன் உரோமுலசை அரியணை ஏற்றினார். செனோவும் அவரது எதிரி பாசிலிசுக்கசும் டால்மாடியாவிற்கு தப்பியோடிய யூலியசு நெபோசையே சட்டபூர்வ பேரரசராக அங்கீகரித்தனர். சிறுது காலத்தில் யூலியசால் நியமிக்கப்பட்ட படைத்தளபதி, [[ஒடோசெர்]] இத்தாலியைத் தாக்கி, ஒரெடெசை தோற்கடித்து செப்டம்பர் 4, 476இல் உரோமுலசு அகஸ்டசை பதவியிறக்கினார். ஒடோசெர் தாமே இத்தாலியின் அரசராக முடிசூட்டிக்கொண்டு பேரரசர் செனோவை கிழக்கு,மேற்கு இரு பேரரசுகளுக்கும் பேரரசராக இருக்க வேண்டினார். செனோ இதனை ஏற்று நெபோசின் உரிமையை மறுதளித்து ஒடோசெரை தமது அரச சார்பாளராக ஆட்சி புரிய அனுமதித்தார். 480இல் நெபோசு தமது படைவீரர்களாலேயே கொல்லப்பட்டார்.
* இத்தாலியில் ஓஸ்ட்ரோகோத்திக் இராச்சியம் நிறுவப்படுதல் (493). ஒடோசெரின் சாதனைகளையும் புகழையும் கண்டு கவலையுற்ற செனோ அவருக்கு எதிரான பரப்புரை நடத்தினார்; பின்னர் ஓஸ்ட்ரோகோத்களை இத்தாலியைக் கைப்பற்றத் தூண்டினார். அவர்களும் அவ்வாறே செய்தனர்;ஆனால் தங்களுடைய தன்னாட்சியான இராச்சியத்தை, தியோடொரிக் அரசராக, இத்தாலியில் நிறுவினர். இத்தாலியையும் முழுமையான மேற்குப் பகுதியையும் உரோம்ப் பேரரசு இழந்தது.
 
== மேற்சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உரோமைப்_பேரரசின்_இறங்குமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது