ஜார்ஜ் ஆர்வெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அறுபட்ட கோப்பு
No edit summary
வரிசை 18:
}}
 
'''ஜார்ஜ் ஆர்வெல்''' (''George Orwell'', ஜூன் 25, [[1903]] – ஜனவரி 21, [[1950]]) ஒரு [[பிரிட்டன்|பிரிட்டானிய]] எழுத்தாளர் மற்றும் இதழாளர். [[ஆங்கிலம்|ஆங்கில]] எழுத்துலகின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படும் இவரது இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளைர் (''Eric Arthur Blair''). ஆர்வெலின் படைப்புகளில் அவரது கருத்துத் தெளிவு, சர்வாதிகாரத்துக்கு எதிரான நிலைப்பாடுகள், ஜனநாயக சமதர்ம ஆதரவு, சமூக ஆநீதிகளுக்கெதிரானஅநீதிகளுக்கெதிரான அறச்சீற்றம், மொழியாளுமை ஆகியவை காணக்கிடைக்கின்றன.
 
அர்வெல் புனைவுகள், தருக்க பத்திகள், கவிதைகள், இலக்கிய விமர்சனம் என பலவகைப்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார். பிறழ்ந்த உலகுப் (dystopia) புதினமான ''நைண்ட்டீன் எய்ட்டி ஃபோர்'', [[கம்யூனிசம்|கம்யூனிசத்தை]] கேலி செய்த ''[[அனிமல் ஃபார்ம்]]'' ஆகிய இரண்டும் அவரது உலகப் புகழ்பெற்ற படைப்புகளாகும். இவை தவிர [[எசுப்பானிய உள்நாட்டுப் போர்|எசுப்பானிய உள்நாட்டுப் போரில்]] குடியரசுப் படைகளில் தன்னார்வல வீரராக பங்கேற்ற அனுபவங்களைத் தொகுத்து எழுதிய ''ஹோமேஜ் டூ காத்தலோனியா'' மற்றும் இலக்கியம், அரசியல் மொழி, பண்பாடு ஆகிய தலைப்புகளில் அவர் எழுதிய பல கட்டுரைகளும் சிறந்த படைப்புகளாகக் கருதபடுகின்றனகருதப்படுகின்றன. தற்காலம் வரை ஆங்கில இலக்கியம், பண்பாடு, மொழி ஆகிய துறைகளில் ஆர்வெல்லின் தாக்கம் உணரப்படுகிறது. அவர் உருவாக்கிய புதுமொழிகள் (neologisms) பல இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. அவை தவிர Orwellian (ஆர்வெல் படைப்புகளில் வருவது போன்ற) என்ற ஆங்கில பதமும் வெகுஜனப் பயன்பாட்டில் இடம் பிடித்துவிட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_ஆர்வெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது