"கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

41 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{speed-delete-on|சூலை 9, 2014}}
==தல வரலாறு==
சோழவள நாட்டில் காவிரியின் வடகரையில் திருவருள் பாலித்திருக்கும் சிவன் தலங்களில் கொட்டையூர் அருள்மிகு கோடீஸ்வரசுவாமி கோயில் 44ஆவது தலமாகும். இக்கோயில் கும்பகோணத்திற்கு மேற்கே 4 கிமீ தொலைவில் கும்பகோணத்திற்கும் சுவாமிமலைக்கும் இடையே கொட்டையூரில் உள்ளது. மார்க்கண்டேயர் பூசித்த தலம். காவிரி வலஞ்சுழித்து, பிலத்துவாரத்தில் சென்றபோது, ஆத்ரேயமகரிஷி அத்துவாரத்தில் இறங்கி காவிரியை மேலே கொண்டுவந்த சிறப்புடையது. திருவலஞ்சுழியில் காவிரியில் இறங்கிய அவர் இங்கு வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது அவருடைய திருவுருவம் இக்கோயிலில் உள்ளது. ஒரு சமயம் இந்த ஊர் ஆமணக்கங்காடாக இருந்தது. இறைவன் ஆமணக்கன் கொட்டைச் செடியின்கீழ் இருந்ததால் இவ்வூர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது. மற்றொரு சமயம் சோழ மன்னன் ஒருவனுக்கு கோடி லிங்கமாக தரிசனம் கொடுத்ததால் இக்கோயிலுக்கு கோடிச்சுரம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. <ref> மகாமகப்பெருவிழா 2004, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு, கும்பகோணம் </ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1697222" இருந்து மீள்விக்கப்பட்டது