வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 23:
'''வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931''' (''Statute of Westminster 1931'') [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] [[ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம்| நாடாளுமன்றத்தால்]] இயற்றப்பட்டச் சட்டமாகும்.
இது திசம்பர் 11, 1931 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் தன்னாட்சி உடைய [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசின்]] [[மேலாட்சி அரசு முறை|மேலாட்சி நாடுகளுக்கு]] ஐக்கிய இராச்சியத்துடனும் மற்ற மேலாட்சிகளுடனும் சமநிலையை அளித்தது. இந்தச் சட்டத்தை ஒத்த ஆனால் தனியான சட்டங்களை ஒவ்வொரு [[பொதுநலவாய இராச்சியம்|பொதுநலவாய இராச்சியமும்]] தங்கள் நாடாளுமன்றங்களில் உடனடியாகவோ அல்லது ஏற்பு வழங்கியபோதோ நிறைவேற்றின. இச்சட்டத்தினை விலக்கும் மாற்றுச் சட்டம் நிறைவேற்றப்படும்வரை இந்த [[பொதுநலவாய இராச்சியம்|பொதுநலவாய இராச்சியங்களில்]] இச்சட்டம் செயற்பாட்டில் உள்ளது. இந்த நாடுகளின் [[சட்டவாக்க அவை]]களுக்கு முழுமையான விடுதலை கொடுப்பதுடன் பொதுநல இராச்சியங்களுக்கும் பிரித்தானிய அரசிக்கும் (அரசர்) இச்சட்டம் பிணைப்பை உருவாக்குகிறது.<ref>{{cite web |url=http://www.parliament.uk/edm/2004-05/895 |title=Early day motion 895: Morganatic Marriage and the Statute of Westminster 1931 |first=Andrew |last=Mackinlay |date=10 மார்ச் 2005 |publisher=Queen's Printer |accessdate=5 நவம்பர் 2011}}</ref>
==நினைவு விழா==
 
தங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் ஓர் பாகமாக இருக்கும் சில நாடுகள், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு நிறைவை நினைவுறும் வண்ணம் கொண்டாடுகிறார்கள். கனடாவில் திசம்பர் 11 அன்று அரசக் கட்டிடங்களில் [[ஐக்கிய இராச்சியக் கொடி]] (கனடாவில் இது ரோயல் யூனியன் கொடி என்றழைக்கப்படுகிறது) பறக்கவிடப்படுவது கட்டாயமாகும்.<ref>{{citation| url=http://www.sen.parl.gc.ca/nkinsella/PDF/SpecialEvents/StatuteWestminster-e.pdf| last=Kinsella| first=Noël| title=Statute of Westminster Day| date=11 December 2006| publisher=Queen's Printer for Canada| accessdate=11 December 2012}}</ref> இதற்கான கொடிமரங்கள் இந்தக் கட்டிடங்களில் உள்ளன.
== மேலும் காண்க ==
* [[வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை]]
* [[இலண்டன் சாற்றுரை]]
==வெளி இணைப்புகள்==
{{wikisource}}
*{{UK-LEG|title=Statute of Westminster 1931|path=ukpga/Geo5/22-23/4/contents }}
*[http://www2.marianopolis.edu/quebechistory/federal/1931.htm 1 – Canada and the Statute of Westminster]
*[http://www.canadiana.org/citm/themes/constitution/constitution15_e.html 2 – Canada and the Statute of Westminster]
*[http://www.gov.ns.ca/legislature/legc/westmins.htm Statute of Westminster, 1931 (text)]
*[http://www.foundingdocs.gov.au/item.asp?dID=25 Australia and the Statute of Westminster]
 
== மேற்சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வெஸ்ட்மின்ஸ்டர்_சட்டம்_1931" இலிருந்து மீள்விக்கப்பட்டது