ராம்நாத் கோயங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 36:
 
==இதழ் சுதந்திரம்==
அரசியல் கட்சிகள், அதிகார மையங்கள், வியாபாரக் குழுமங்கள், நண்பர்கள் வட்டம் என்று எதன் பிடியிலும் சிக்காமல் சுதந்திரமாகப் பத்திரிகை வெளிவர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இந்தியாவின் நலன்தான் தனது பத்திரிகையின் லட்சியம் என்பது அவரது தீர்மானமாகும். அரசியல் தலைவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், அறச் சிந்தனையாளர்கள், சமூக சேவகர்கள், மதத் தலைவர்கள், ஆன்மிகவாதிகள் என்று அனைத்துத் தரப்பினருடனும் தொடர்பில் இருந்த போதும் தனது இதழில் இடம்பெறும் செய்திகள் குறித்து அவர் சுதந்திரமாகச் செயல்பட்டார். அதில் தலையிடும் உரிமையையோ, சலுகையையோ யாருக்கும் அளிக்கவில்லை. இதழ்களுக்கு சிறந்த ஆசிரியர்களை நியமித்தார். அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார்.<ref>http://writersamas.blogspot.in/2011/03/blog-post.html</ref> அரசின் விளம்பரங்களுக்காக மட்டுமே இதழ்கள் என்ற நிலையை மாற்றிக் காட்டினார். அரசு விளம்பரம் தராவிட்டாலும் மக்களின் பிரச்னைகளைபிரச்சனைகளை எழுதி, ஓர் இதழுக்கு வாசகர்களின் ஆதரவும், விளம்பரதாரர்களின் ஆதரவும் இருந்தால் போதும் என்பதைச் செயலில் நிரூபித்தார்.
 
===அவசர நிலைப்பிரகடனத்திற்கு எதிராக===
இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கொண்டு வந்த அவசர நிலைப் பிரகடனத்தின் அம்சமாக அரசாங்கத்திற்கு எதிரான சிறு அசைவுகள் கூட கவனித்து ஒடுக்கப்பட்ட காலகட்டத்தில், அவசர நிலைப் பிரகடனத்தை எதிர்த்தும் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு ஆதரவாகவும் செய்திகளை இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியிட்டார்.
அதனால் அரசு, இந்தக்குழுமப் பத்திரிக்கைகளின் நிர்வாகத்தைத் தன் கைவசம் கொண்டுவந்தது. அப்போது உடல்நிலை சரியில்லாத கோயங்காவும், அவரது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் மிசாவில் கைது செய்யப்படலாம் என்று அச்சுறுத்தப்பட்டனர்.
உடல்நிலை தேறிய கோயங்கா சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து அரசாங்கம் நியமித்த நிர்வாகக் குழுவைக் கலைத்தார்.
அரசாங்கத்தால் சிவில், கிரிமினல் மற்றும் தனிப்பட்ட முறையில் என இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் கோயங்காவின் மீது கிட்டத்தட்ட 250 வழக்குகள் தொடுக்கப்பட்டன.
<ref name="அமுதசுரபி">அமுதசுரபி தீபாவளி மலர் 2004; இராம்நாத் கோயங்கா; பக்கம் 176-178</ref>
 
==பிறமொழி இதழ் பதிப்புகள்==
தமிழில் 'தினமணி'க்கு இருந்த வரவேற்பைப் பார்த்து வியந்த கோயங்கா, பிற இந்திய மொழிகளிலும் இதழ் தொடங்க விருப்பம் கொண்டு தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இதழ்களைத் தொடங்கி நடத்தினார். அனைத்திலும் அவரது இதழ் குழுமம் வெற்றிநடை இட்டது. அரசியலில் ஊழலுக்கு எதிரான போர்க்குரல் எழுப்புவதில் எக்ஸ்பிரஸ் குழுமம் முன்னின்றது.
"https://ta.wikipedia.org/wiki/ராம்நாத்_கோயங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது