சுமார்த்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
 
== தத்துவம் ==
தத்துவப்படி ஸ்மார்த்தர்களுக்கு ஆதி சங்கரரின் [[அத்வைதம்]] தான் அடித்தளம். அதாவது இறைவன் ஈஸ்வரனும், நம் ஜீவனும் உண்மையில் முழுதிலும் [[பிரம்மமே|பிரம்மம்]]. [[மாயை]]யினால் சிக்குண்டதால், [[ஈஸ்வரன]]் வேறு [[ஜீவன்]] வேறு என்பதாகத் தெரிகிறது. உயர் ஞானம் கிட்டுமாயின், இந்த வேறுபாடு தெளிந்திடும். [[முக்தி]] அடைவதற்கு ஒரே பாதை [[ஞான யோகம்]]தான் என்பது பெரும்பாலான ஸ்மார்த்தர்களின் நம்பிக்கை. அறிவின் தேடலாலும், [[குண்டலினி]] அல்லாத யோக முறையினாலும். குருவின் ஆசியுடன் தொடங்கப்படும் இந்த யோக நெறியில் த்யானிப்பவர், தன்னையே ப்ரம்மமாக நினைவில் நிறுத்தி, மாயையின் தளையில் இருந்து விடுபட முயல்வார். இவர்களின் தீர்கமான, முடிவான இலக்கானது, நானும் அந்த ப்ரம்மமாக இருக்கிறேன் என்று உணர்வதுதான். இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் எதெல்லாம் அஞ்ஞானம் (அவித்யயை) என்பதை உணர்ந்து தோற்ற மயக்கத்திலிருந்து விடுபட வேண்டியதுதான். முக்தி அடைதலுக்கு வெறும் மந்திரங்களை ஓதுவதாலாலோ, உயிர் பலி கொடுப்பதாலோ அல்லது தன்னையே வருத்தி நூறு உபவாச நோன்புகள் இருப்பதாலோ அடைந்து விட முடியாது. மறைகளை படித்து உணர்வதும், ப்ரம்மத்தின் பிம்பத்தினை தன்னுள் கண்டுணர்வதும், த்யானத்தினாலும் அஞ்ஞானம் அகன்றிட வழி வகுக்கும்.



== இதர வழிகள் ==

ஞானம் அடைதலுக்கு ஞான யோகமே வழி என்றாலும் அந்த சித்தி கிட்டுவதற்கு மூன்று முன்பாதைகளையும் சொல்கிறார்கள். அவையாவன: [[பக்தி யோகம்]], [[கர்ம யோகம்]] மற்றும் [[ராஜ யோகம்]].
"https://ta.wikipedia.org/wiki/சுமார்த்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது