மின்னெதிர்த்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
{{Periodic table (electronegativity by Pauling scale)}}
 
==மின்னெதிர்த்தன்மையின் போக்குகள்==
===ஆவர்த்தன போக்கு===
[[File:Periodic variation of Pauling electronegativitiesta.png|thumb|பௌலிங் மின்னெதிர்த்தன்மைப் பெறுமானம் (y-அச்சு) குற்றாவர்த்தனத்தில் குழு வழியே மேலிருந்து கீழாக மாறுபடும் விதம்.]]
ஹீலியம், நியோன், ஆர்கன் ஆகிய [[அருமன் வாயு]]க்கள் [[சேர்வை]]களை உருவாக்காததால், அவற்றின் மின்னெதிர்த்தன்மைப் பெறுமானம் கணக்கிடப்படவில்லை. ஆவர்த்தன அட்டவணையில் மூலகங்களின் மின்னெதிர்த்தன்மைப் பெறுமானம் குற்றாவர்த்தனம் வழியே இடமிருந்து வலமாகச் செல்லும் போது பொதுவாக அதிகரித்துச் செல்லும். கதித்தொழிற்பாடு அற்ற மூலகங்களுள் சீசியத்தின் பெறுமானமே மிகவும் குறைவாகும். குற்றாவர்த்தனங்களை மாத்திரம் கருத்திலெடுத்தால் குழு 14ஐத் தவிர ஏனைய மூலகங்களின் மின்னெதிர்த்தன்மை குழு வழியே ஆவர்த்தன அட்டவணையில் மேலிருந்து கீழாகச் செல்லும் போது மின்னெதிர்த்தன்மை குறைந்து கொண்டு செல்கின்றது. அணு ஆரை அதிகரித்துச் செல்வதே இதற்குக் காரணமாகும்.
 
===ஒக்சியேற்ற எண்ணுடன் மின்னெதிர்த்தன்மை மாறுபடல்===
 
பௌலிங்கின் மின்னெதிர்த்தன்மைப் பெறுமானங்கள் உண்மையில் அணுக்கள் சேர்வைகளில் பொதுவாகக் காட்டும் ஒக்சியேற்ற எண்ணுக்கே வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக இங்கு ஒக்சிசன் பொதுவாகச் சேர்வைகளில் காண்பிக்கும் -2 ஒக்சியேற்ற நிலைக்கான பெறுமானமே வழங்கப்பட்டுள்ளது. மின்னெதிர்த்தன்மை சேர்வைகளில் அணுக்களின் ஒக்சியேற்ற எண் மாறும் போது மாற்றமடையும்.
ஒக்சியேற்ற எண் அதிகரிக்கும் போது மின்னெதிர்த்தன்மையும் அதிகரிக்கும்.
[[பகுப்பு:வேதியியல் கலைச்சொல்லியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மின்னெதிர்த்தன்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது