இணுவில் சிவகாமி அம்மன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
 
==திருவிழா==
நித்திய நைமித்திய பூசைகள் சிறப்பாய் நடைபெற்று வருகின்றன. ஆண்டுத்திருவிழா, ஆடிப்பூரம், நவராத்திரி, திருவெம்பாவை என்பன மிகச்சிறப்பாய் ஆலயத்தே கொண்டாடப்பட்டு வருகின்றன. இக்கோயிலில் [[இந்துக்கோயில் திருவிழா|திருவிழா]] ஆண்டுக்கு ஒரு முறை பங்குனி மாதத்தில் பன்னிரு நாள் நடைபெற்று வருகின்றது. உத்தரநாளில் தீர்த்தத்திருவிழாவும் அதன் முதல்நாள் தேர்த்திருவிழாவும் பத்தாம், பதினோராம் நாட்களில் நடைபெறும். மகேசுவர பூசையும் இறுதி நாளில் திருக்கல்யாணமும் நடைபெறுகின்றது. பகல் சங்காபிடேகத்தோடு நடைபெறும் ஆடிப்பூரக் கற்பூரத் திருவிழாவும் மிகச்சிறப்பானது.
 
நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாள் நடைபெறும் மகிடாசுர சங்கார விழாவும், பத்தாம்நாள் மானம்பூ விழாவும் இத்திருத்தலத்திற்கு சிறப்புத் தருவன. புகழ்பெற்ற இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் அம்பு போடுதல் மற்றும் வன்னிமர வாழை வெட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும். திருவெம்பாவை வழிபாடு நாள்தொறும் அதிகாலை மூன்று மணி தொடக்கம் ஆறு மணிவரை நிகழும். நவராத்திரியை அடுத்து நவசக்தி சிறப்பு வழிபாடும் பூரணை நாளில் திருவிளக்கு வழிபாடும் நிகழ்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/இணுவில்_சிவகாமி_அம்மன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது