திருநாவுக்கரசு நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
இவர் [[தொண்டு வழி]]யில் [[இறைவன்|இறைவனை]] [[வழிபாடு|வழிபட்டவர்]]. பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்து, தேவாரப் [[பதிகம்|பதிக]]ங்களைப் பாடி சைவப் பணியில் ஈடுபட்டார். கோயில்களின் சுற்றாடலை உழவாரங் கொண்டுதூய்மைப் படுத்தியும் வந்தார். இதனால் இவர் '''உழவாரத் தொண்டர்''' எனவும் அழைக்கப்பட்டார். சமணப் பிடிப்போடு இருந்த பல்லவ மன்னனான மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப் பல்விதத்திலும் துன்புறுத்தினான். அத்துன்பங்கள் யாவற்றையும் திருநாவுக்கரசர் தனது இறைவலிமையோடு வென்றார். ‘கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே’ என்னும் நமச்சிவாயப் பதிகம் இதனை மெய்ப்பிக்கிறது. இறுதியில் [[பல்லவர்|பல்லவ]]ப் பேரரசனான [[மகேந்திர பல்லவன்|மகேந்திர பல்லவன்]] சைவ சமயத்திற்கு மாறினான்.
 
தனது முதிர்ந்த வயதில் சிறுவராயிருந்த [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரு]]டன் சேர்ந்து தல [[யாத்திரை]]கள் செய்தார். மேலும் திருஞானசம்பந்தரால் ''அப்பர்'' எனவும் அழைக்கப்பட்டார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று [[சைவத் திருமுறைகள்|திருமுறை]]களில் வகுக்கப்பட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் [[திருப்புகலூர்|திருப்புகலூரில்]] சித்திரைச் சதயத்தில் உயிர் நீத்தார்.
 
அவர் பாடிய தலங்களில் முக்கியமான தலம் [[மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்]] ஆகும். இஙகு அவர் ''என் கடன் பணி செய்துகிடப்பதே'' என்னும் வரிகளைப் பாடி அருளினார். மேலும் அவர் கரக்கோயில் என இத்தலத்தினை பாடியுள்ளார். ஒன்பது வகைக் கோயில்களில் கரக்கோயில் என போற்றப்படும் ஒரே தலம் [[மேலக்கடம்பூர்]] ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/திருநாவுக்கரசு_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது