உலகச் சமயங்களின் பாராளுமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 8:
 
[[தாயக அமெரிக்கச் சமயங்கள்]], [[சீக்கியம்]], வேறு சில உள்ளூர்ச் சமயங்களும், புவி மையச் சமயவாதிகளும் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 1993 ஆம் ஆண்டுக் கூட்டத்திலேயே இவை முதன் முதலாகக் கலந்து கொண்டன. அக்காலத்தில் புதிய இயக்கங்களாக இருந்த [[ஆன்மீகவாதம்]] (Spiritualism), [[கிறிஸ்தவ அறிவியல்]] (Christian Science) ஆகிய சமயங்கள் இக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தன. கிறிஸ்தவ அறிவியலின் நிறுவனரான [[மேரி பேக்கர் எடி]] என்பவரும் பேராளராக வந்திருந்தார். [[ஐரோப்பா]]வில் ஏற்கெனவே அறிமுகமாகி இருந்தாலும், இக் கூட்டத்தில் பேசப்பட்டதில் இருந்தே [[பஹாய் சமயம்]] அமெரிக்காவில் அறிமுகமானது. இலங்கையைச் சேர்ந்த [[அனகாரிக தர்மபால]] [[தேரவாத பௌத்தம்|தேரவாத பௌத்தத்தின்]] பேராளராகவும், [[சுவாமி விவேகானந்தர்]] [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] பேராளராகவும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
===கருத்துத் தோற்றம் மற்றும் செயலாக்கம்===
 
* சார்லஸ் கரோல் போனி எனும் வழக்கறிஞர் சர்வமத மகாசபை (உலகச் சமயங்களின் பாராளுமன்றம்) ஒன்றை கூட்டும் கருத்தையும், அது கிறித்துவ மதத்தை உலகின் தலைசிறந்த மதமாக மேன்மைப்படுத்தும் என்ற கருத்தையும் தெரிவித்தார். போனியின் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு சிகாகோ பிரஸ்பிட்டீரியன் சர்ச்சின் மதபோதகர் ஜான் ஹென்றி பரோஸ் சர்வமத மகாசபை அமைப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு, 1890 ஆம் ஆண்டு அக்டோபரில் இதற்கான பணிகள் துவக்கப்பட்டன.<ref name="சுவாமி">சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; ISBN 81-7823-220-0; பக்கம் 520,521,522</ref>
 
* 10,000 கடிதங்கள் 40,000 அறிக்கைகள் இக்குழுவின் சார்பில் உலக நாடுகள் அனைத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உலக நாடுகள் அனைத்திலிருந்தும் 3000 ஆலோசகர்களும் நியமிக்கப்பட்டனர். <ref name="சுவாமி"/>
 
* இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலோசகர்கள்: சென்னை இந்து பத்திரிக்கையின் ஆசிரியர் ஜி.எஸ்.ஐயர், மும்பை பி.பி.நகர்கர், கல்கத்தா பிரதாப் சந்திர மஜூம்தார். <ref name="சுவாமி"/>
 
*கலந்துகொண்ட மொத்த பிரதிநிதிகள் 170 பேரில் 100 பேர் கிறித்தவ மதத்தைச் சார்ந்தோராகவும் உலகின் மற்ற அனைத்து மதங்களுக்கும் சேர்த்த பிரதிநிதிகள் 70 பேராகவும் இருந்தனர்.<ref name="சுவாமி"/>
 
* பேப்டிஸ்ட், ஆங்க்லிகன் சர்ச் போன்ற கிறித்துவ சர்ச்கள் பங்கேற்கவில்லை <ref name="சுவாமி"/>
 
* ஆங்கிலிகன் சர்ச்சின் பிஷப், சம அந்தஸ்து உடைய மதங்கள் மட்டுமே கலந்துகொள்ளாமல் அனைத்து மதங்களும் அழைக்கப்பட்டிருப்பதால் தம்மால் பங்கெடுக்க இயலாது என பரோஸுக்குக் கடிதம் எழுதித் தெரிவித்தார். <ref name="சுவாமி"/>
 
* ஹாங்காங் பாதிரிகள் சர்வமத மகாசபை முயற்சியை ’ஏசுவிற்கு எதிரான வஞ்சகத் திட்டம்’ என்று கண்டித்தனர்.<ref name="சுவாமி"/>
 
* திட்டமிட்ட தேதிக்கு மேல் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது.<ref>சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; ISBN 81-7823-220-0; பக்கம் 530</ref>
 
===பங்குபெற்றோர்===
 
* கன்ஃபூசிய மதத்தின் புங் க்வாங் யு, ஜப்பானிய புத்த மதத்தின் ஹோரின் டோக்கி, இலங்கை பௌத்த மதத்தின் தர்மபாலர் இந்தியாவின் பிரம்ம சமாஜிகள் மஜும்தார் மற்றும் நகர்க்கர் ஆகியோரின் உரைகள் கீழை நாட்டு மதங்களின் உயர்வை மேலைநாடுகளுக்குத் தெரியப்படுத்தியது.<ref>சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; ISBN 81-7823-220-0; பக்கம் 575</ref>
 
* இதில் இடம் பெற்ற பத்து முக்கிய மதங்கள்: பிரம்ம சமாஜம், யூத, இஸ்லாம், இந்து, பௌத்த, தாவோ, கன்ஃபூசிய, ஷின்டோ,ஜொராஷ்டிரிய, கத்தோலிக்க, கிரேக்க சர்ச் மற்றும் புரோட்டஸ்டன்ட் மதங்கள். இவற்றைக் குறிப்பிடும் வகையில் நியூ லிபர்ட்டி மணி பத்து முறை அடிக்கப்பட்டது. (கத்தோலிக்க, கிரேக்க, புரோட்டஸ்டன்ட் பிரிவுகள் கிறித்துவ மதப்பிரிவுகளாதலால் ஒன்றாகக் கருதப்பட்டன)<ref>சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; ISBN 81-7823-220-0; பக்கம் 547</ref>
 
* சுவாமி விவேகானந்தர் 31ஆம் இருக்கையிலும் அவரருகில் மும்பையின் நகர்கர், அடுத்து இலங்கையின் தர்மபாலர், அடுத்ததாக மஜும்தார் ஆகியோர் அமர்ந்திருந்தனர். <ref name="சுவாமி1">சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; ISBN 81-7823-220-0; பக்கம் 548</ref>
 
* வீர்சந்த் காந்தி சமண மதத்தின் பிரதிநிதியாகவும் தியசாபிகல் சொசைட்டியின் பிரதிநிதியாக ஞான் சந்திர சக்கரவர்த்தி மற்றும் அன்னிபெசன்ட் வந்திருந்தனர். <ref name="சுவாமி1">சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; ISBN 81-7823-220-0; பக்கம் 548</ref>
 
* முதலில் பேசியவர் கிரேக்க சர்ச்சின் ஆர்ச் பிஷப் ஜாந்தே.<ref name="சுவாமி2">சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; ISBN 81-7823-220-0; பக்கம் 549</ref>
 
* கன்ஃபூசிய பிரதிநிதி புங் க்வாங் யூ குறிப்பிடத்தக்க பேச்சாளராக அமைந்தார். டாக்டர் பரோஸ், இவருக்கு கிடைத்த வரவேற்பைப் போல் மேடையில் வேறொருவரும் பெறவில்லை என்றும் நீண்ட காலமாக அமெரிக்கர்கள் சீனர்களை நடத்திய விதத்திற்கு மன்னிப்பு வேண்டுகின்ற விதத்திலேயே அத்தகைய சிறந்த வரவேற்பை அவரது உரை பெற்றது என்று போனி யும் குறிப்பிட்டனர்.<ref name="சுவாமி2">சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; ISBN 81-7823-220-0; பக்கம் 549</ref>இவர் சீன அரச பாரம்பரிய உடையணிந்திருந்தார்.<ref name="சுவாமி1">சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; ISBN 81-7823-220-0; பக்கம் 548</ref>
 
* இலங்கையின் புத்த மதத்தின் தர்மபாலரின் உரை பார்வையாளர்களைப் பிரமிக்கச் செய்த உரையாக அமைந்தது.<ref name="சுவாமி2">சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; ISBN 81-7823-220-0; பக்கம் 549</ref>
 
* சுவாமி விவேகானந்தர் 23வது பேச்சாளர். இவரது உரையை அனைத்திலும் வெற்றிகரமானது என்று பத்திரிக்கைகள் எழுதின. <ref>சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; ISBN 81-7823-220-0; பக்கம் 552,553</ref>
 
* மற்ற அனைத்து சமயப்பிரிவுகளின் பிரதிநிதிகளும் அவரவர்கள் சார்ந்த அமைப்பால் உரிய சான்றிதழ்களுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர், ஆனால், இந்தியாவிலிருந்து சென்று இந்து மதத்திற்காகப் பேசிய சுவாமி விவேகானந்தரை எந்த தனிப்பட்ட இந்து அமைப்புகளும் அனுப்பி வைக்கவில்லை. இவரை அனுப்பி வைத்த இவரது சென்னைச் சீடர்கள் உரிய அத்தாட்சிப் பத்திரங்களுடன் அனுப்பிவைக்கத் தவறியிருந்தனர். பிச்சை எடுப்பது சட்டப்படிக் குற்றமாக இருந்த அமெரிக்காவில் எப்படியாவது சமாளித்துக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் அனுப்பிவைத்திருந்தனர். <ref>சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; ISBN 81-7823-220-0; பக்கம் 529</ref>சென்னையில் இருந்த போது, சுவாமி விவேகானந்தர் அறிமுகக்கடிதத்திற்காக தியாசபிகல் சொசைட்டியின் தலைவர் ஆல்காட்டை சந்திக்க, அவ்வமைப்பில் சேர மறுத்ததால் அறிமுகக்கடிதம் தந்து உதவ ஆல்காட் மறுத்திருந்தார்.<ref>சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; ISBN 81-7823-220-0; பக்கம் 474</ref>
 
*இந்து மதத்தின் பிரதிநிதியாக சுவாமி விவேகானந்தருக்கு அறிமுகக் கடிதம் தந்தவர் அமெரிக்காவின் பேராசிரியர் ஜான் ஹென்றி ரைட்.<ref>சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; ISBN 81-7823-220-0; பக்கம் 537</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உலகச்_சமயங்களின்_பாராளுமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது