பிலமோன் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 14:
== பிலமோன் திருமுகம் எழுதப்பட்ட சூழலும் நோக்கமும் ==
 
[[கொலோசையர் (நூல்)|கொலோசை]] நகரிலிருந்த முக்கிய கிறிஸ்தவரும் செல்வருமான [[பிலமோன் (புதிய ஏற்பாட்டு நபர்)|பிலமோன்]] என்பவரிடம் [[ஒனேசிம்]] என்பவர் அடிமைத் தொழில் செய்துவந்தார். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர் தலைவரிடமிருந்து தப்பியோடிவிட்டார் (பில 18). இதற்கு உரோமைச் சட்டப்படி மரண தண்டனை கொடுக்கலாம். ஆனால் ஒனேசிம் தம் தலைவரின் நண்பரான தூய [[பவுல் (திருத்தூதர்)|பவுலை]] நாடி வந்தார்; சிறிது காலம் அவரோடு இருந்து கிறிஸ்தவராகிய பின்னர் தம் தலைவரிடம் திரும்பிச் செல்ல விழைந்தார். அப்போது [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]], பிலமோன் ஒனேசிமுவை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஓர் அடிமையாக அல்ல, ஒரு சகோதரக் கிறிஸ்தவராகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கோரி இப்பரிந்துரைக் கடிதத்தை எழுதி அனுப்புகிறார்.
 
இக்கடிதத்தைப் பவுல் கி.பி. 61ஆம் ஆண்டு [[உரோமையர் (நூல்)|உரோமைச்]] சிறையிலிருந்து எழுதினார் என்பது மரபுக் கருத்து. எனினும் இதனை அவர் தம் மூன்றாம் நற்செய்திப் பயணத்தின்போது [[எபேசியர் (நூல்)|எபேசிலிருந்து]] எழுதியிருக்க வேண்டும் என்றே பெரும்பான்மையான அறிஞர்கள் கருதுகின்றனர். அவ்வாறாயின் இம்மடல் கி.பி. 53-56 அளவில் எழுதப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/பிலமோன்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது