குமரி விடுதலைப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*நீக்கம்* *எழுத்துப்பிழை திருத்தம்* *விரிவாக்கம்*
வரிசை 1:
'''குமரி விடுதலைப் போராட்டம்''' என்பது [[தமிழ்]] பேசும் குமரி மக்கள் திருவிதாங்கூரிலிருந்து [[கன்னியாகுமரி மாவட்டம்|குமரி மாவட்டத்தை]] [[தமிழ்]] நாட்டுடன் இணைக்க திரு மார்சல் [[ஏ. நேசமணி]] தலைமையில் 1947 முதல் 1956 வரை நடத்தியப் தொடர் போராட்டத்தைக் குறிக்கிறதுகுறிக்கும் . இப்போராட்டத்தின் விளைவாக நவம்பர் 1, 1956 ம் ஆண்டு குமரி மாவட்டம் [[தமிழ் நாடு|தமிழகத்துடன்]] இணைந்தது. இப் போராட்டத்தை தலைமைதாங்கி வழிநடத்தி வெற்றி பெற்றதனால் குமரி மக்கள் திரு மார்சல் நேசமணியை '''[[குமரித் தந்தை]]''' என்று அழைக்கின்றனர்.
 
==வரலாறு==
இந்தியா 1947 ம் ஆகத்து 15ம் நாள் சுதந்திரம் பெற்றப் போது மன்னர் சமத்தானமான [[திருவிதாங்கூர்]] இந்திய கூட்டாட்சியில் சேருவதில்லை என்று முடிவெடுத்தது. இருப்பினும் வேறுவழியின்றி மன்னர் திரு சித்திரை திருநாள் பாலராமலர்மா, பல்வேறு சூழ்நிலைகளால் இந்திய கூட்டாட்சியில் 1947 செப்டம்பர் 4 ம் நாள் இனைத்தார்இணைத்தார். 1949 ம் ஆண்டு அன்றய திருவிதாங்கூர்-[[கொச்சி]] <ref>http://www.hampi.in/kollam.shtml</ref>மாநிலத்துடன் குமரிப் பகுதி இணைக்கப்பட்டது. அக்காலத்தில் தென் திருவிதாங்கூரில் தென் தாலுக்காகளான [[நெய்யாற்றின்கரை]], விளவக்கோடு, கல்குளம், அகத்தீசுவரம், மற்றும் தோவாளை ஆகியவற்றில் வாழ்ந்த பெருவாரியான மக்கள் தமிழை தாய் மொழியாக கொண்டிருந்தனர். முதல் மற்றும் இரண்டாம் ஐந்து ஆண்டுத் திட்டங்களில் இத் தமிழ் பகுதிகளில் விவசாய வளர்ச்சிக்காக வகுக்கப்பட்ட நீர்பாசன திட்டங்களான [[சிற்றாறு]] பட்டணம் கால்வாய் திட்டம், [[பெருஞ்சாணி]] அணைத் திட்டம், [[நெய்யாறு இடதுகரை கால்வாய்த் திட்டம்]], [[குழித்துறை]] நீரூற்றுத் திட்டங்கள்திட்டங்களை மலையாள திருவிதாங்கூர் அரசு முடக்கியது. இதனால் வெறுப்படைந்த தமிழர்கள், திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைவதற்கு 1948 செப்டம்பர் மாதம் 8 ம் தேதி மார்சல் ஏ. நேசமணி தலைமையில் போராட்டங்களை தொடங்கினர். இவரின் தலைமையில் [[திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு]] என்ற அரசியல் அமைப்பை அவர் உருவாக்கி, இணைப்பு போராட்டங்களை நடத்தினார். தமிழர்கள் குறிப்பாக [[நாடார்]] சமுதாய மக்கள்{{citation needed}} பல உயிர் தியாகங்களும், சிறை கொடுமைகள் மற்றும் காவல் துறையின் அட்டூழியங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டனர். இதன் பயனாக 1956 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இனைந்தது. மலையாள ஆதிக்க நாயர்களிடமிருந்து சுமார் 200 ஆண்டு காலங்களாக அனுபவித்து வந்த சாதிக் கொடுமையில் இருந்து விடுதலை பெறுவதற்காகவும் இந்த போராட்டத்தை நாடார் மக்கள் முன்னின்று நடத்தி வெற்றியும் பெற்றனர். திருவிதாங்கூர் பகுதிகளில் நிலவிவந்த சாதிக் கொடுமைகளும் இப்பகுதிகள் பிரிந்து சென்று தமிழகத்துடன் இணைய இன்னொரு காரணமாக இருந்தது.
 
==போராட்டத்திற்கான காரணங்கள்==
தமிழர்கள் பெரும்பாலாக வாழ்ந்த திருவிதாங்கூர் சமத்தானத்தின் பகுதிகளான [[கல்குளம்]], [[விளவங்கோடு]], [[தோவாளை]], மற்றும் [[அகத்தீசுவரம்]] ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இனைக்கப்இணைக்க மூன்று காரனங்களைக்காரணங்களைக் கூறலாம்கூறப்படுகிறது.
===முதல் காரணம்===
இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் ஒருங்கினைந்த வளர்ச்சிக்காக பல்வேறுத் ஐந்தாண்டு திட்டங்களை வகுத்து செயல்படுத்தியது. இதன் படி முதலாவது ஐந்தாண்டு திட்டம் 1950 முதல் 1955 வரை செயல்படுத்தப் பட்டது. இந்த திட்டத்தில் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகளின் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் தீட்டப் பட்டது. அவை பெருஞ்சாணி அணைத் திட்டம், சிற்றாறு பட்டணம் கால்வாய்த் திட்டம், நெய்யாறு இடதுகரைக் கால்வாய்த் திட்டம், குழித்துறை லிப்டு இரிகெசன்நீரேற்றுப்பாசனம் (Lift irrigation) திட்டம், ஆகியன ஆகும். இவ்இம் முக்கிய நீராதாரத் திட்டங்களை சுதந்திர திருவிதாங்கூர் அரசு செயல் படுத்தவில்லை. இதனால் மக்கள் இந்த அரசு மீது வெறுப்படைந்தனர். ஐந்தாண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எந்த திட்டங்களையும் செயல்படுத்த முன்வரவில்லை. மக்கள் தலைவர்கள் பலமுறை வேண்டிக் கேட்டுக் கொண்டும், இப் பகுதி வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேண்டுமென்றே வட திருவிதாங்கூர் வளர்ச்சிக்கென திருப்பிவிட்டது. இதனால் தென் திருவிதாங்கூர் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகள் முற்றிலும் புறக்கணித்தது திரு [[பட்டம் தாணுபிள்ளை]]யின் அரசு. இத்தகைய தென் பொருளாதார வளர்ச்சிப் புறக்கணிப்பு, தாய் தமிழகத்துடன் இணைவதற்கான கோரிக்கை வலுவடைய முக்கிய காரணியாக அமைந்தது.
===இரண்டாம் காரணம்===
திருவிதாக்கூர் நாடு [[இந்து]] ஆகம அடிப்படையில் ஆட்சி நடத்தப்பட்டமையால் [[சாதி]]க் கோட்ப்பாடுகள் மிகக் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. [[உயர் இந்துக்கள்]], [[இழிவு இந்துக்கள்]] என சமுதாயத்தை இருகூறுகளாக்கினர். இழிவு இந்துக்களை தீண்டத்தகாதவர்களாகவும், காணத்தகாதவர்களாகவும், நடமாடத் தகுதியற்றவர்களாகவும் கருதி சமுதாயத்தில் அவர்களை இழிவுபடுத்தினர். இந்த நிலை மாற திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து செல்ல தமிழர்கள் விரும்பினர். இதுவும் பிரிவினைக்கு இரண்டாவது காரணமாக அமைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/குமரி_விடுதலைப்_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது