திருத்தந்தை பிரான்சிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றையாக்கம்
சி இற்றையாக்கம்
வரிசை 413:
 
வழக்கம்போல, திருத்தந்தை தம் உரையின் முடிவில் நகைச்சுவையோடு கீழ்வருமாறு கூறினார்: "அவ்வளவு தான்! உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துகள்! எல்லாரும் போய் நன்றாக விருந்துண்ணுங்கள்!"<ref>[http://www.usatoday.com/story/news/world/2014/04/20/pope-easter-religion-rome/7926551/ 2014ஆம் ஆண்டு உயிர்த்தெழுதல் விழா அமைதிச் செய்தி]</ref>
 
==திருத்தந்தையின் முதல் ஆசியப் பயணம் - கொரியா: ஆகத்து 13-18, 2014==
 
சென்றமுறை ஒரு திருத்தந்தை ஆசியாவிற்குப் பயணமாகச் சென்றது 1999இல் ஆகும் (இந்தியா). அப்பயணத்தை மேகொண்டவர் திருத்தந்தை [[இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை)]]. அதன்பிறகு நிகழ்கின்ற திருத்தந்தைப் பயணம் இதுவே. இப்பயணம் திருத்தந்தை பிரான்சிசின் முதல் ஆசியப் பயணம். ஆசிய பெருநிலப் பரப்பில் வாழ்கின்ற பல கோடி மக்களுள் 3% பேர் மட்டுமே கத்தோலிக்கர் ஆவர். கொரியாவில் 10% பேர் கத்தோலிக்கர்.
 
ஆகத்து 13ஆம் நாள் வத்திக்கானிலிருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிசு, மறுநாள் கொரியாவின் சியோல் விண்படைத் தளத்தில் வந்திறங்கினார். அங்கு அவரை தென் கொரியா நாட்டு அதிபர் பார்க் கியோன்-கை வரவேற்றார். கொரியா தீபகற்பத்தில் ([[மூவலந்தீவு]]) அமைதியும் நல்லிணக்க உறவும் ஏற்பட வேண்டும் என்பதற்காக தாம் பயணம் மேற்கொண்டதாகத் திருத்தந்தை கூறினார். தென் கொரியா நாட்டு அதிபர், தம் உரையின்போது, “திருத்தந்தை பிரான்சிசு கொரியா நாட்டுக்கு வருகை தருவது அந்நாட்டு மக்கள்பால் அவர் கொண்டுள்ள அன்பைக் காட்டுகிறது” என்றார்.
 
1984, 1989 ஆகிய ஆண்டுகளில் [[திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்]] கொரியா நாட்டுக்குப் பயணமாகச் சென்றிருந்தார். அவருக்குப் பின் பதவியேற்ற [[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]] எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்த போதிலும் ஆசியாவுக்குப் பயணமாகச் சென்றதில்லை. இப்போது கொரியாவுக்கு வருகின்ற திருத்தந்தை பிரான்சிசு மேற்கொண்டுள்ள பயணம் கொரியாவில் நிகழ்கின்ற திருத்தந்தைப் பயணங்களுள் மூன்றாவதாக அமைகிறது.
 
தென் கொரிய நாட்டு மக்கள் இந்த வருகையைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். வீதிகள் தோறும் திருத்தந்தைக்கு வரவேற்பு அறிக்கைகளும் வளைவுகளும் எழுப்பப்பட்டுள்ளன.
 
ஆசிய நாட்டு மக்களோடு நேரடியாகத் தொடர்புகொள்ளும் வகையில் ஆங்கில மொழியில் உரையாற்றுவதற்காகத் திருத்தந்தை பிரான்சிசு தயாரிப்போடு வருகிறார். வழக்கமாக அவர் இத்தாலிய மொழியில் உரையாற்றுவார். சிலவேளைகளில் தமது தாய்மொழியான எசுப்பானியத்தில் உரை நிகழ்த்துவார்.
 
ஆகத்து 14, வியாழன்: இன்று காலை கொரியா வந்து சேர்ந்த திருத்தந்தை பிரான்சிசு, கொரியா நாட்டு ஆட்சித் தலைவர்களைச் சந்தித்த பிறகு, மாலையில் கொரியா கத்தோலிக்க ஆயர்களை சந்தித்து உரையாற்றினார்.
 
குண்டு துளைக்காத பாதுகாப்பு அரண்கொண்ட சிறப்பு ஊர்தியில் பயணம் செல்வதைத் தவிர்த்து, கொரியா நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற வாகனங்களுள் மிகச் சிறிய வகை சேர்ந்த “கியா சோல்” (Kia Soul) சிற்றுந்தைத் திருத்தந்தை தேர்ந்துகொண்டார். உலகப் பெரும் தலைவர்களுள் ஒருவரான திருத்தந்தை இவ்வாறு எளிய முறையில் பயணம் செய்வது குறித்து கொரியா மக்களும் பிறரும் வியக்கின்றனர்.
 
ஆகத்து 15, வெள்ளி: ஆகத்து 15ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபை அன்னை [[மரியாவின் விண்ணேற்பு]] பெருவிழாவைக் கொண்டாடுவதை முன்னிட்டுத் திருத்தந்தை பொது அரங்கில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினார். அப்போது அவர் கூறியது: “கொரியா நாட்டு மக்கள் கிறித்தவ நம்பிக்கையில் உறுதியாக நிலைத்து நிற்கின்றனர். எத்தனையோ துன்பங்களுக்கு நடுவிலும், துன்புறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் கிறித்துவுக்குச் சான்று பகர்ந்துள்ளனர்...இவ்வுலகச் செல்வங்கள் மனிதரின் இதயத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற ஆன்ம வேட்கையை நிறைவு செய்ய முடியாது...கட்டற்ற போட்டியின் அடிப்படையில் எழுகின்ற பொருளாதார அமைப்புகளும், தொழிலாளரின் உரிமைகளை மறுக்கின்ற பொருளாதார அமைப்புகளும் மனித மாண்பை ஏற்க மறுக்கின்றன. கிறித்தவர்கள் ஏழை மக்கள் மீது சிறப்பான கரிசனை காட்ட வேண்டும்.”
 
ஆசியாவின் பல நாடுகளிலிருந்து வந்திருந்த இளையோருக்கு செய்தி வழங்கிய திருத்தந்தை, கொரியா நாட்டுக் குடும்பத்திற்காக இறைவனை வேண்டுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். இளையோர் கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்திருந்த கொரியா நாட்டுப் பெண் ஒருவர் திருத்தந்தை பிரான்சிசிடம், “எங்கள் கொரியா நாடு இன்று வடக்கு ஒன்று, தெற்கு ஒன்று எனப் பிரிந்துகிடக்கின்றது. இதனால் மக்களுக்கு ஏற்படுகின்ற துன்பங்கள் என்றுதான் மறையுமோ” என்று கூறியதை அவர் கூர்ந்து கேட்டார்.
 
இளைஞர்களைச் சந்திக்கையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட உரையை வாசித்து அளிப்பதில் திருத்தந்தை சிரமப்பட்டது தெரிந்தது. அப்போது திருத்தந்தை “ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட உரையை வாசிப்பது இளையோரைக் கவராது. அவர்களோடு உறவாட வேண்டுமென்றால், இதயத்தின் ஆழத்திலிருந்து நேராகப் பேசவேண்டும் என்று என் நண்பர் ஒருவர் சொன்னார்” என்று கூறியதுமே, கூட்டத்திலிருந்து பலத்த கைத்தட்டு எழுந்தது. உடனேயே, திருத்தந்தை, ஆங்கில மொழியில் பேசுவதை விட்டுவிட்டு, இத்தாலிய மொழியில் உரையாடல் பாணியில் பேசத் தொடங்கினார். அப்போது, “கொரியா நாட்டு மக்கள் ஒரே மொழியைப் பேசுகின்றனர். நீங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு கொரியா என்று நாடு பிளவுபட்டுக் கிடப்பது மறைந்தது ஒரே குடும்பமாக நீங்கள் மாறிட அமைதியாக இறைவனை வேண்டுவோம்” என்று கூறியதும் கூட்டத்தில் பேரமைதி நிலவியது.
 
கம்போடியா நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு பெண், திருத்தந்தையிடம், கம்போடியாவிலும் பல கிறித்தவ மக்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களையும் புனிதர் என்று அறிக்கையிடுவது நல்லது என்று கூறியதும், திருத்தந்தை அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்தார்.
 
“தாமி” (selfie) வகை ஒளிப்படங்கள் எடுப்பதற்கு இளையோரோடு கூடவே பிரான்சிசு நின்றார்.
 
ஆகத்து 16, சனி: சியோல் நகரில் கொரியா மறைசாட்சிகள் திருத்தலத்தைத் திருத்தந்தை பிரான்சிசு சந்திக்கிறார். 10 மணிக்கு பவுல் சி-சுங் என்பவருக்கும் அவரோடு வேறு 123 பேருக்கும் “அருளாளர்” பட்டம் வழங்குகிறார். இவர்கள் 18-19 நூற்றாண்டுகளில் கொரியாவில் கிறித்தவ நம்பிக்கையை முன்னிட்டு கொல்லப்பட்டவர்கள். பின்னர், ஊனமுற்றோர் இல்லம் சென்று அவர்களைச் சந்திக்கிறார். மாலையில் கொரியாவின் கத்தோலிக்க துறவியர் பிரதிநிதிகளை சந்தித்து உரையாற்றுகிறார். அதுபோலவே, பொதுநிலையினரோடும் சந்திப்பு நிகழ்கிறது.
 
ஆகத்து 17, ஞாயிறு: திருத்தந்தை ஆசிய பெருநிலத்தின் ஆயர் பேரவைகளின் பிரதிநிதிகளை சந்தித்து உரையாற்றுகிறார். அக்கூட்டத்தில் சீனாவிலிருந்து ஆயர்கள் பங்கேற்க வழியிருக்குமா என்பது தெரியவில்லை. மாலையில் ஆசிய இளையோர் நாள் நிறைவுத் திருப்பலி நிகழ்கிறது.
 
ஆகத்து 18, திங்கள்: திருத்தந்தை பிரான்சிசு, பல மதங்களைச் சார்ந்த தலைவர்களை சந்தித்து உரையாற்றுகிறார். பின்னர், சியோல் உயர் மறைமாவட்டத்தின் பெருங்கோவிலில் திருப்பலி நிகழ்த்துகிறார். அமைதியையும், கொரியா நாடுகளுக்கிடையே நல்லுறவு இணக்கத்தையும் வலியுறுத்தி அத்திருப்பலி அமையும்.
 
நண்பகலில் பிரியா விடை நிகழும். பின்னர் திருத்தந்தை பிரான்சிசு வத்திக்கான் நோக்கிப் பயணமாகிறார்.<ref>[http://www.asianews.it/news-en/Pope-to-embrace-Korea's-youth-and-martyrs-31392.html திருத்தந்தை பிரான்சிசின் கொரியா பயணம்]</ref>
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தை_பிரான்சிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது