ஓய்வூதியம் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
=== வயது முதிர்வு ஓய்வூதியம் ===
 
அரசுத்துறையில் பணிபுரிபவர் 58 வயது நிறைவடைந்ததும் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெறவேண்டும். அடிப்படை பணிபுரிபவர் என்றால் 60 வயது முடிந்தவுடன் ஓய்வு பெறவேண்டும். இவ்வாறு ஓய்வு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமே வயது முதிர்வு ஓய்வூதியம் (Superannuation Pension) எனப்படும். ஒவ்வொறு மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள் அந்த மாதத்திற்கு முன் மாதத்தின் கடைசி நாளில் பணியிலிருந்து ஓய்வு பெறவேண்டும். பணி ஓய்வுபெறும் நாளில் ஒருவர் [[தற்காலிக பணிநீககம்]] தண்டனை பெற்று இருப்பாராயின் அவர் பணியிலிருந்து ஓய்வுபெற இயலாது.
 
ஓய்வு பெறும் நாளில் ஒரு ஊழியர் பெற்று வருகிற ஊதியத்தையும் அவருடைய மொத்த பணிக்காலத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் கணக்கிடப்படுகிறது. 01.04.2003 காலத்திற்கு முன்புவரை 33 ஆண்டுகாலம் மொத்த பணிக்காலமாக கொண்டவர்களுக்கே முழு ஓய்வூதியம் அதாவது அவர் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது ஒருவர் 30 ஆண்டுகள் மொத்த பணிக்காலம் பெற்றிருந்தாலும் முழு ஓய்வூதியம் கிடைக்கும்.
வரிசை 23:
=== விருப்ப ஓய்வூதியம் ===
 
ஓரு அரசு ஊழியர் 58 அல்லது 60 வயது முடிவதற்கு முன்னர் தானாகவே முன்வந்து விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறுவதற்கு வழங்கப்படுவது [[விருப்ப ஓய்வூதியம்]] (Voluntary Retirement Penion) ஆகும்.
 
=== கட்டாய ஓய்வூதியம் ===
 
அரசு ஊழியர் ஓருவருக்கு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படுவதற்காக அளிக்கப்படும் கட்டாய ஓய்விற்கு வழங்கப்படும் ஓய்வூதியம் [[கட்டாய ஓய்வூதியம்]] (Compulsory Retirement Penion) எனப்படும்.
 
=== இயலாமை ஓய்வூதியம் ===
 
மருத்துவக்குழுவின் அடிப்படையில் ஒரு அரசுஊழியர் பணிபுரிய இயலாதவர் என்றோ மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றோ பரிந்துரைக்கப்பட்டால் அவருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் [[இயலாமை ஓய்வூதியம்]] (Invalid Pension) எனப்படும்
 
"https://ta.wikipedia.org/wiki/ஓய்வூதியம்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது