நீலப்பச்சைப்பாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 58 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 2:
'''நீலப்பச்சைப்பாசி''' அல்லது '''நீலப்பச்சைப்பாக்டீரியா''' என அழைக்கப்படும் [[நுண்ணுயிரி]] '''சயனோபாக்டீரியா''' (''Cyanobacteria'') என அழைக்கப்படுகிறது. சயனோ என்பது அதன் நிறத்தைக் குறிக்கும் கிரேக்கத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு மருவிய சொல்லாகும். அதன் பொருள் நீலம் என்பதாகும். இவ்வகை நுண்ணுயிரிகள் நீர் நிலைகளில் மிகுதியாக காணப்படும் பாசிகளைப்போல் உள்ள பாக்டீரியாக்களாகும். இது பாசிகளினுடைய பண்புகளைக் கொண்டிருந்தாலும் இவை பாக்டீரியா என்னும் பெருந்தொகுதியில் இடம் பெற்றவையாகும். இது [[ஒளிச்சேர்க்கை]] அல்லது ஒளித்தொகுப்பால் தனக்குத் தேவையான வேதிகளை உற்பத்தி செய்து வாழ்கின்றன. ஒளிச்சேர்க்கையால் வாழும் [[ஆக்சிசன்|ஆக்சிசனை]](பிராணவாயு)வை வெளியிடா பிற பாக்டீரியாக்களான ஊதா மற்றும் பச்சை சல்பர் பாக்டீரியாக்களிலிருந்து மாறுபட்டு, இவை உணவு உற்பத்தியின் போது பிராணவாயுவை வெளியிடும் பாக்டீரியாக்களாகும்.
 
== '''பெயர்க்காரணம்''' ==
[[படிமம்:பாசிப்படர்ச்சி.jpg|right|thumb|250px|நீலப்பச்சைப்பாசிப் படர்ந்துள்ளதால் குளத்தில் உயிர்வளி தட்டுப்பாட்டில் மீன்கள் இறந்து மிதக்கின்றன]]
இவ்வகைப்பாசிகள்/பாக்டீரியாக்கள் நீர்நிலைகளில் மிகுதியாக காணப்படுகின்றன. இவை நன்னீர் மற்றும் உப்புநீர் நீலப்பச்சைப்பாசிகள் உள்ளன. இவை நீரில் வாழும் போது தனக்கான உணவை உற்பத்திச்செய்ய சில நிறமிகளின் உதவி தேவைப்படுகிறது. அதாவது பச்சைத்தாவரங்களில் உள்ள பச்சையம் (க்ளோரோபில்) என்னும் நிறமியைக்கொண்டு தனக்கான உணவை பரிதியின் ஓளியிலிருந்து உற்பத்தி செய்வதுபோல் இவைகளும் க்ளோரோபில் A (பச்சையம் வகை ஏ), பைக்கோசையனின் மற்றும் பைக்கோஎரித்திரின் போன்ற நிறமிகளைக்கொண்டுள்ளன. இவைகளின் நீல நிறத்திற்கு காரணமான பைக்கோசையனின் (நீலநிறமி)இதன் தனிச்சிறப்பாகும். ஆகையால் ஆங்கிலத்தில் சயனோபாக்டீரியாக்கள் எனவும் தமிழில் பச்சையம் மற்றும் நீலநிறமியைக்கொண்டு இவை நீலப்பச்சைப்பாசி என விளிக்கப்படுகிறது.
இவை பொதுவாக இவற்றின் நிறம் காரணமாக நீலப்பச்சைப் பாசி என அழைக்கப்பட்டாலும், இவைப் பாசிக் கூட்டம் ([[அல்கா]]) அல்ல. இவை ஒளித்தற்போசணிகளாக உள்ள பாக்டீரியா வகைகளாகும்.
 
== '''உருவப்பண்புகள் மற்றும் உடற்செயலியல்''' ==
இவை ஒரு செல் உயிரியாகவும் பல செல்லுயிரியாகவும் வாழ்கின்றன. ஒரு செல் உயிர்களில் குறிப்பிடத்தக்கவன ''சினிக்கோசிச்டிச்'', ''சினிக்கோகாக்கச்'', க்ரூவோகாக்கச் ஆகியன குறிப்பிடத்தக்கவை.பல செல்லுயிரிகளில் குறிப்பிடத்தக்கவையாய் உள்ள ''அனபெனா'', ''ஒசிலட்டோரியா'', ''ஃபார்மிடியம்'' ஆகியன நூல் பட்டையைப் போன்றும் சில கூட்டு செல்லுயிரிகளாகவும் (உதாரணம் ''மைக்ரோசிச்டிச்'' ) உள்ளன. இவ்வின உயிர்கள் பூமியில் உள்ள நீர்நிலைகளில் விரவிக்கிடக்கின்றன. இதன் செல்சுவர்த் தோற்றம் சில கிராம் நெகட்டிவ் பாக்டீரியாக்களை ஒத்து உள்ளன. இதில் மற்ற பாக்டீரியாக்களைப்போல பெப்டிடோக்ளைக்கன் என்னும் சர்க்கரையும் காணப்படுகின்றது. இது பேரினங்களான பாசி மற்றும் தாவரம் போன்றவற்றில் உள்ளதுபோல தனியமைப்புகள் (க்ளோரோப்ளாச்டு) என்னும் அமைப்பு அற்றது. இது பேருயிரிகளுக்கு ஒளிச்சேர்க்கை மற்றும் உணவு உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகின்றன.இவைகளில் அது போன்ற தனியமைப்பு எதுவும் கிடையாது. இதில் பச்சையம் ஏ, தாவரபைலிப்புரதங்கள் (பைக்கோபிலிப்புரதங்கள்)ஆன பைக்கோசையனின் மற்றும் பைக்கோஎரித்திரின் ஆகிய சிறப்புவாய்ந்த நிறமிகளைக்கொண்டு தனக்கான உணவுகளைப் பெருக்கிக்கொள்கின்றன. இவைகளில் பைக்கோஎரித்திரின் என்பது சிவப்பு சார் நிறமியாகும். சார் (அக்சசரி)நிறமி என்பது மையநிறமியிலிருந்து மாறுபட்டவை.
 
இவை கரிமத்தை பரிதியின் ஒளியிலிருந்தும் புரத உருவாக்கத்திற்கு தேவையான நைதரசனை சில காற்றிலிருந்து தானாக நிலைப்படுத்தியும் அல்லது அடிப்படை [[நைதரசன்]] சேர்மமான நைட்ரேடிலிருந்தும் பெற்று அனுவெறிகையை நிரிமானித்துக்கொள்கின்றன. இவை சூரிய ஒளியிலிருந்து உணவு உற்பத்தியின் போது ஆக்சிசன் (பிராணவாயு) வெளியிடும் பெருங்குடும்பத்தைச்சார்ந்ததாக உள்ளது. இவை கரியமில வாயுவைப்பயன்படுத்தி சூரிய ஒளியிலிருந்து சர்க்கரையை உற்பத்தி செய்கின்றன. அதன் முடிவாக ஆக்சிசனையும் தண்ணீரையும் வெளியேற்றுகின்றன. இவையே ஒளிச்சேர்க்கையென அழைக்கப்படுகிறது. இவை புவிவெப்பமடைதலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
 
உடற்கூற்றியல்:
== '''பயன்கள்''' ==
சயனோபக்டீரியா [[நிலைக்கருவிலி]] (Prokaryota) கலக்கட்டமைப்பு உடைய அங்கிகளாகும். இவற்றில் கருவுறையால் சூழப்பட்ட உண்மையான [[கரு]] காணப்படுவதில்லை. இவற்றில் சில தனிக்கலங்களாக வாழ்பவையாகும். ஏனையவை இழையுருவான சமுதாயமாக ஒன்று சேர்ந்த தனிக்கலங்களாக வாழ்கின்றன. இவ்விழைகளின் கலங்கள் சளிய மடல்களால் ஒன்றிணைக்கப்பட்டிருக்கும். இழையுருவான சயனோபக்டீரிய சமுதாயங்களில் மூன்று வகையான கலங்கள் காணப்படலாம்:
* பதியக் கலங்கள்: அதிகளவில் காணப்படும் கல வகை. [[ஒளித்தொகுப்பு]]க்கென சிறத்தலடைந்த கல வகை.
* பல்லினச் சிறைப்பை (Heterocyst): நைதரசன் பதித்தலுக்கென சிறத்தலடைந்த கல வகை.
* அசைவிலி (akinete): உணவுச்சேமிப்பு அதிகமுள்ள, தடித்த கலச்சுவருடைய தகாத காலத்தைக் கழிப்பதற்கென சிறத்தலடைந்த கல வகை.
 
== '''பயன்கள்''' ==
[[படிமம்:Spitrulina.jpg|right|thumb|250px|நுண்ணோக்கியால் எடுக்கப்பட்ட ச்பைருலினா என்னும் சுருள் வகை நீலப்பச்சைப் பாசி. இதை உணவாகவும் பயன்படுத்தலாம்]]
இவை விவசாயத்திலும், மனித மற்றும் உணவுகளிலும் இடம் பிடிக்கின்றன. விவசாயத்தில் இவை நைத்ரசன் உற்பத்தியில் ஈடுபடுவதால் இவை நில பண்படுதலில் சிறப்பு பெறுகின்றன. ''அனபெனா அசோல்லே'' என்பவை [[அசோல்லா]] எனப்படும் நீர்வாழ் குறுந்தாவரத்திடம் இயற்கையாக ஒன்றியவாழ்வு வாழ்கின்றன. அப்போது அது காற்றிலிருந்து நைத்ரசனை நிலைப்படுத்துகின்றன. இதனை நிலத்தில் இடும்போது நிலம் செப்பனிடப்படுகின்றன. அதேப்போல் ''நாச்டாக்'' மற்றும் ஏனைய ''அனெபெனா'' பேரினத்தை சார்ந்தவைகளும் இந்நைத்ரசனை நிலைப்படுத்துகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/நீலப்பச்சைப்பாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது