முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
LanguageTool: typo fix
== வரலாறு ==
{{Main|ஐக்கிய இராச்சியத்தின் வரலாறு}}
கொட்லாந்தும் இங்கிலாந்தும் [[10ம் நூற்றாண்டு|10ம் நூற்றாண்டிலிருந்து]] தனித்தனி அமைப்புகளாக இயங்கி வந்துள்ளன. [[1284]]ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயக் கட்டுப்பாட்டின் கீழிருந்த வேல்ஸ், [[ஒன்றியச் சட்டங்கள் 1536 - 1543]] வாயிலாக [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து இராச்சியத்துடன்]] இணைந்தது. [[1603]] முதல் ஒரே மன்னரைக் கொண்ட தனித்தனி இராச்சியங்களான இங்கிலாந்தும் கொட்லாந்தும் [[ஒன்றியச் சட்டம் 1707]] வாயிலாக ஒரு நிரந்தர ஒன்றியமாக இணைந்தன, [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பெரிய பிரித்தானியாவின் இராச்சியமாக]]. இது நடந்த நேரத்தில் கொட்லாந்து பொருளாதாரச் சீரழிவை எதிர்நோக்கியிருந்தது. இங்கிலாந்துடனான ஒருங்கிணைப்பு கொட்லாந்து மக்களின் பரவலான எதிர்ப்பைப் பெற்றது. [[1169]]ஆம் ஆண்டிலிருந்து [[1691]]ஆம் ஆண்டு வரை படிப்படியாக ஆங்கிலேயக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பட்ட [[அயர்லாந்து இராச்சியம்]], [[ஒன்றியச் சட்டம் 1800]] வாயிலாகப் பெரிய பிரித்தானிய இராச்சியத்துடன் இணைந்ததால், [[பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்]] உருவானது. இதுவும் ஐரிய மக்களின் விருப்பமின்றியே நடைபெற்றவொரு ஒருங்கிணைப்பாகும். இதற்குஇதற்குச் சற்று முன்னரே, 1798ஆம் ஆண்டில் ஐக்கிய ஐரிய மக்களின் புரட்சி வெடித்துத் தோல்வியடைந்திருந்தது. (பார்க்க: [[ஐக்கிய ஐரிய மக்கள் சமூகம்]]). நெப்போலிய மன்னனின் போர்த் தொடுப்புகளால் எழுந்த பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி, இந்த ஒருங்கிணைப்புச் செயல் விரைவு படுத்தப்பட்டது. [[1922]]ஆம் ஆண்டு நிகழ்ந்த கடும் போரைத் தொடர்ந்து [[ஆங்கில - ஐரிய ஒப்பந்தம்]] ஏற்பட்டு, அயர்லாந்து தீவு [[ஐரிய சுதந்திர நாடு]] மற்றும் [[வடக்கு அயர்லாந்து]] என்று பிரிவடைந்து, பின்னது ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தது. ஒப்பந்தத்தில் முடிவானபடி ஐரிஷ் மாகாணமான [[அல்ஸ்டர்|அல்ஸ்டரிலுள்ள]] ஒன்பது வட்டாரங்களில் ஆறு வட்டாரங்கள் ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தன. இங்கு வாழும் மக்கள் தொகையில் ஏறக்குறைய 40% உள்ளவர்கள் சுதந்திர அயர்லாந்துடன் ஒருங்கிணைய விரும்புகின்றனர். [[1927]]ஆம் ஆண்டு அயர்லாந்தின் பெரும்பகுதியின் வெளியேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய இராச்சியத்தின் பெயர் ''பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்'' என மாற்றப் பட்டது.
 
[[படிமம்:British Empire 1897.jpg|thumb|300px|left|1897-ல் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகள்]]
தொழிற்துறையிலும், கப்பற்துறையிலும் 19ஆம் நூற்றாண்டின் ஆதிக்க சக்தியாகத் திகழ்ந்த ஐ.இ, மேற்கத்திய சிந்தனைகளான உடைமை, சுதந்திரம், முதலாளித்துவம் மற்றும் [[பாராளுமன்ற மக்களாட்சி]] அகியவற்றின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியது. உலக இலக்கியம் மற்றும் அறிவியல் துறைகளிலும் பெரும் பங்காற்றியது. அதன் உச்ச நிலையில், [[பிரித்தானிய ஏகாதிபத்தியம்]] உலகின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கை உள்ளடக்கியிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், ஐக்கிய இராச்சியத்தின் ஆதிக்கம் இரு உலகப் போர்களால் வெகுவாகக் குறைந்ததைக் காணமுடிந்தது. 20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலோ, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கலைக்கப் பட்டு, முற்றிலும் மறைந்தது. ஆனால் ஐ.இ தன்னை ஒரு நவீனமயமான, வளமையான நாடாக வளர்த்துக் கொண்டது.
 
தற்போது ஐ.இ [[ஐரோப்பா|ஐரோப்பிய]] கண்டத்துடனான ஒருங்கிணைப்பின் விகிதத்தைக் குறித்து சிந்தித்து வருகிறது. [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] அங்கம் வகித்திருந்தும், உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காகவும் தற்போது நிலவும் பொருளாதாரச் சூழலைக் குறித்த அரசின் கணிப்புகளாலும், ஐ.இ இன்னும் [[ஐரோ|ஐரோவை]] அதன் நாணயமாக ஏற்றுக் கொள்ளவில்லை. [[ஐரோப்பிய ஒருங்கிணைப்பு|ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்கு]] மக்கள் மத்தியில் தீவிர எதிர்ப்பு நிலவுகிறது. சில ஆங்கிலேயப் பொருளாதார வல்லுனர்களின் கோரிக்கை, ஐ.இ ஐரோவைப் பின்பற்றுவதற்கு முன்னர், [[ஐரோப்பிய மத்திய வங்கி]] [[இங்கிலாந்தின் வங்கி|இங்கிலாந்தின் வங்கியை]] முன்மாதிரியாகக் கொண்டு சீர்திருத்தம் பெறவேண்டும்பெற வேண்டும் என்பதே. [[ஜெர்மனி]] ஐரோவை ஏற்றுக் கொண்டபின் சந்தித்த பொருளாதார இக்கட்டுகளைக் கருத்தில் கொண்டால், மேற்கூறிய கோரிக்கை நிறைவேற்றப்படும் சாத்தியங்களிருப்பதாகத் தென்படலாம்.
 
அரசியல் சட்டச் சீர்திருத்தமும் தற்போதைய ஒரு நிகழ்வாகும். [[பிரபுக்களின் அவை|பிரபுக்களின் அவையில்]] சீர்திருத்தங்கள், [[கொட்லாந்து]] தனது [[ஸ்காட்டிஷ் பாராளுமன்றம்|ஸ்காட்டிஷ் பாராளுமன்றத்தை]] [[1999]]ஆம் ஆண்டு தேர்வு செய்தது, அதே வருடம் [[அதிகாரப் பரவலாக்கம்|அதிகாரப் பரவலாக்கங்கள்]] [[வேல்ஸ்|வேல்ஸிலும்]] [[வடக்கு அயர்லாந்து|வடக்கு அயர்லாந்திலும்]] நடைபெற்றது, ஆகியவை அண்மை கால நிகழ்வுகள். தடைகளற்ற சுதந்திரமான பின்புலத்தைக் கொண்டிருந்தும், அரசின் [[தகவல் ஆணையரின் அலுவலகம்|தகவல் ஆணையரின்]] [[2004]]ஆம் வருடக் கூற்றுப் படி ஒரு [[பரவலான கண்காணிப்பு|பரவலான கண்காணிப்புடைய சமூகமாக]] ஐ.இ உருமாறும் வாய்ப்புள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் ஏகாதிபத்தியப் பின்புலத்தின் விளைவாக, பிரித்தானிய அரசமைப்பு உலகெங்கும் பின்பற்றப் படுகிறது. பிரித்தானியப் பாணிப் பாராளுமன்ற முறையைக் கடைப்பிடிக்கும் நாடுகள், [[வெஸ்ட்மின்ஸ்டர் அரசாட்சி முறை]]யைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகின்றன.
தற்போதைய முடிக்குரியவர் [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசெபெத்|இராணி எலிசெபெத் II]] (Queen Elizebeth II) ஆவார். இவர் [[1952]]ஆம் ஆண்டு அரியணை ஏற்று, [[1953]]ஆம் ஆண்டு முடிசூட்டப்பட்டார். நவீன கால ஐக்கிய இராச்சியத்தில் முடிக்குரியவரின் பங்கு என்பது, பொதுவாகப் பெயரளவில்தான், எனினும் எப்பொழுதும் அவ்வாறல்ல. அவருக்கு அமைச்சரவையின் எல்லா ஆவணங்களுக்கும் அனுமதியுண்டு. வாரமொருமுறை பிரதமர் அவரைச் சந்தித்து அரசின் நிகழ்வுகள் குறித்துநிகழ்வுகள்குறித்து தெரியப்படுத்துவார். அரசுச் சட்ட ஆசிரியர் [[வால்டர் பேக்ஹாட்]] (Walter Bagehot), முடிக்குரியவருக்குக் கீழ்கண்ட மூன்று உரிமைகள் இருப்பதாகக் கூறினார்: கலந்தாலோசிக்கப்படும் உரிமை, அறிவுரைக்கும் உரிமை மற்றும் எச்சரிக்கும் உரிமை. இவ்வுரிமைகள் அரிய சந்தர்ப்பங்களிலேயே உபயோகிக்கப் பட்டாலும், தக்க தருணங்களில் இன்றியமையாதவையாக அமைந்துள்ளன—உதாரணம், "[[தொங்கு பாராளுமன்றம்]]" ஏற்பட்ட பொழுதெல்லாம். ஒவ்வொரு வருடமும், பொதுவாக நவம்பர் மாதத்தில், இராணி அவர்கள் [[ஐக்கிய இராச்சியப் பாராளுமன்றம்|பாராளுமன்றத்தைத்]] துவக்கி வைத்து, அரசின் அடுத்த வருடத்திற்கான செயல் திட்டங்கள் குறித்ததிட்டங்கள்குறித்த சிறப்புரையை வழங்குவார்.
 
இராணி அவர்கள் பாராளுமன்றத்தின் இன்றியமையாத ஒரு அங்கத்தினராகக் கருதப் படுகிறார். பாராளுமன்றத்திற்கு, கூடும் அதிகாரத்தையும், சட்டங்களியற்றும் அதிகாரத்தையும் மேன்மைமிகு இராணி அவர்களே வழங்குவதாகக் கொள்ளப்படுகிறது. ஒரு [[பாராளுமன்ற சட்டவரைவு]] மேன்மைமிகு இராணி அவர்கள் கையொப்பமிடும் வரை சட்டமாக அங்கீகாரம் பெறாது. இத்தகைய இராச அங்கீகாரம் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்ட எந்த மசோதாவுக்கும் மறுக்கப் பட்டதில்லை ( ஒரே ஒரு முறை [[பெரிய பிரித்தானியாவின் ஆன்|இராணி ஆன்]] (Queen Anne) [[1708]]ஆம் ஆண்டில் அவ்வாறு செய்ததைத் தவிர). மேன்மைமிகு இராணி அவர்கள் செய்யும் இன்னொரு பணி, நாட்டிற்குப் பெருந் தொண்டாற்றியவர்களுக்குப் பட்டங்களும் பதக்கங்களும் வழங்கிக் கௌரவிப்பதாகும்.
[[படிமம்:Palace.of.westminster.arp.jpg|thumb|200px| மக்களவையும் பிரபுக்களவையும் [[இலண்டன்]] மாநகரம் [[வெஸ்ட்மின்ஸ்டர்|வெஸ்ட்மின்ஸ்டரில்]] [[தேம்சு ஆறு|தேம்ஸ் நதிக்]] கரையிலுள்ள [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]யில் தான் உள்ளன.]]
 
[[ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றம்|பாராளுமன்றம்]], மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட 646 உறுப்பினர்களைக் கொண்ட [[பிரித்தானிய மக்களவை|மக்களவை]], மற்றும் நியமன உறுப்பினர்களையே கொண்ட [[பிரித்தானிய பிரபுக்களவை|பிரபுக்களவை]], ஆகிய இரு அவைகளையும் உள்ளடக்கியதாகும். மக்களவை பிரபுக்களவையை விடக் கூடுதல் அதிகாரத்தை உடையதாகும். அதன் 646 உறுப்பினர்களும், ஐக்கிய இராச்சியத்தின் நான்கு பாகங்களிலிருந்தும், மக்களால் நேரடியாக, தொகுதி வாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர். பிரபுக்களவை தற்போது 706 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் எவரும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களல்ல. இவர்கள் அனைவருமே வம்சாவளியாகவோ அல்லது கௌரவிக்கப் பட்டோ உயர்குடிகளானவர்கள் (nobility), மற்றும் [[இங்கிலாந்து தேவாலயம்|இங்கிலாந்து தேவாலயத்தின்]] மதகுருமார்கள், ஆகியவர்களே. பண்டைய நாட்களில், பிரபுக்களவை [[உயர்குடிகள்|உயர்குடிகளையே]] உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. இவர்களுக்குப் பிறப்புரிமை கருதி உறுப்பினர் பதவி வழங்கப்பட்டன. எனினும் இன்றைக்கு இவ்வழக்கம் நிறுத்தப்பட்டு விட்டது. மேலும், [[பிரபுக்களவைச் சட்டம் 1999]], வம்சாவளி உறுப்பினர்களின் தொகையை வெகுவாகக் குறைத்தது. 706 உறுப்பினர்களில் 92 பேர்களுக்கே பிறப்புரிமையால் பதவி பெறும் வாய்ப்புண்டு, அதுவும் அவர்கள் மற்ற உயர்குடிகளால் தேர்ந்தெடுக்கப் படவேண்டும்பட வேண்டும் அல்லது [[Earl Marshal]], [[Lord Great Chamberlain]] போன்ற இராச்சிய பதவிகளை உடையவர்களாக இருக்க வேண்டும். பிரபுக்களவை சீர்திருத்தங்கள் முதலில் எல்லா வம்சாவளி உறுப்பினர்களின் வாக்குரிமையையும் பறிப்பதற்கு முயற்சி செய்தது. பிறகு சமரசம் செய்து கொள்ளப்பட்டு, அவர்கள் படிப்படியாக உரிமைகளை இழக்கும்படி மாற்றியமைக்கப்பட்டது.
 
ஐக்கிய இராச்சியம் ஒரு நடுவண் ஆட்சி, அல்லது [[ஒற்றையாட்சி]] (unitary) அரசு என்றும், வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள பாராளுமன்றமே ஐக்கிய இராச்சியத்தின் ஒட்டுமொத்தமான அரசதிகாரத்தை உள்ளடக்கிக் கொண்டுள்ளது என்றும், விவரிக்கப் படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி முழுவதிலும் ஐக்கிய இராச்சியம் அயர்லாந்துக்குச் [[சுயாட்சி]] வழங்குவது குறித்து விவாதித்தது. 1920ஆம் ஆண்டு வடக்கு அயர்லாந்திற்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. ஆனால் அது [[1972]]ஆம் ஆண்டு நடந்த பலத்த உள்நாட்டுக் கலவரத்துக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப் பட்டது. 1990களில் தன்னாட்சி மீண்டது, கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் சுயாட்சிப் பாராளுமன்றங்கள் உருவான பொழுது. [[1999]]இல் [[ஸ்காட்டியப் பாராளுமன்றம்|ஸ்காட்டியப் பாராளுமன்றமும்]] [[வேல்ஸ் தேசிய அவை]]யும்]] நிறுவப் பட்டன, முன்னது சட்டமியற்றும் அதிகாரமும் கொண்டதாக. இப்பொழுது கல்வி வட்டாரங்களிலும் மக்கள் மத்தியிலும் விவாதிக்கப்படுவது என்னவென்றால், [[கார்ன்வால்|கார்னிஷ்]] மக்களும் அவர்கள் வாழும் பகுதிகளும் ஐக்கிய இராச்சியத்தின் தனியொரு பகுதியாகவும் நாடாகவும் கருத வாய்ப்புள்ளதா என்பதே. [[கார்னிஷ் தேசியம்|கார்ன்வாலில்]] ஒரு தேசிய இயக்கம் ஒரளவுக்கு செயல்பட்டு வருகிறது. தன்னாட்சி கோரி ஒரு மனு சமர்பிக்கப் பட்டு, அதற்கு 50000 ஆதரவுக் கையொப்பங்களும் சேகரிக்கப் பட்டன. எனினும், ஐக்கிய இராச்சிய அரசுக்கு, கார்ன்வாலுக்கு எவ்வகையான தன்னாட்சியையும் வழங்கும் எண்ணமில்லை. [[மாகாண அவைகள்]] வடக்கில் முயற்சி செய்யப்பட்டு, மக்கள் ஆதரவின்றி கைவிடப்பட்டன. எனினும், துணைப் பிரதமரின் அலுவலகம் கூறுவது என்னவென்றால், "அரசு தொடர்ந்து அதிகாரத்தைப் பரவலாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு, அதன் மூலம் பிராந்திய அளவில் செயல்பாடுகளைச் செம்மைப் படுத்தி, எல்லா ஆங்கிலப் பிரதேசங்களையும் வலிமையாக்கும் கொள்கையில் தெளிவாகவுள்ளது" என்பதே. நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அதிகாரப் பகிர்வுடைய ஒரு [[வடக்கு அயர்லாந்து அவை|அவையின்]] நிர்மாணிப்பு என்று [[வடக்கு அயர்லாந்து|வடக்கு அயர்லாந்தின்]] சமீபத்திய சுயாட்சி முயற்சியும் [[பெல்ஃபாஸ்ட் ஒப்பந்தம்|தூய வெள்ளி ஒப்பந்தத்தைத்]] தொடர்ந்து ஏற்பட்டது, ஆனால் அது தற்போது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. பன்முக (federal) அரசமைப்பைப் போலல்லாது, தன்னாட்சிப் பாராளுமன்றங்களுக்கு அரசுச் சட்டத்தில் எந்தவொரு உரிமையோ, இடமோ கிடையாது. அவை இலண்டன் பாரளுமன்றத்தால் உருவாக்கப் பட்டு, 1972இல் வடக்கு அயர்லாந்தில் நிகழ்ந்தது போல், இலண்டன் பாரளுமன்றத்தாலேயே கலைக்கப் பட்டும் விடலாம்.
== மக்கள்தொகை பரம்பல் ==
 
முதன்மையாகப் பேசப்படும் மொழி ஆங்கிலமாகும். மற்ற ஆதிகுடி மொழிகளாவன: செல்டிக், வெல்ஷ், ஸ்காட்டிஷ் கேலிக், அதற்கு நெருங்கியத் தொடர்புடைய ஐரிஷ் கேலிக், கார்னிஷ், ஆங்கிலத்துடன் நெருங்கியத் தொடர்புடைய சமவெளி ஸ்காட்ஸ், ரோமனி, பிரிட்டிஷ் சைகை மொழி, ஐரிஷ் சைகை மொழி ஆகியவை. பல நூற்றாண்டுகளாக வடக்கு இங்கிலாந்தில் செல்டிக் வட்டார மொழியான [[கம்ப்ரிக்|கம்ப்ரிக்கின்]] பாதிப்பு இருந்து வந்திருக்கிறது. இதற்குஇதற்குச் சிறந்தவொரு உதாரணம், அப்பகுதிகளில் செம்மறி ஆடுகளை எண்ணுவதற்கென்றே பிரத்யேகமாகப் பயன்படுத்தப்படும் கம்ப்ரிக் எண்கள் ஆகும்.
 
அண்மை காலத்தில் குடியேறிவர்கள், குறிப்பாகக் [[காமன்வெல்த் நாடுகள்|காமன்வெல்த் நாட்டவர்கள்]], வேறு பல மொழிகளையும் பேசுகிறார்கள். அவை (சீன நாட்டின்) [[கான்டன் மொழி|கேன்டனியம்]], [[பஞ்சாபி]], [[குஜராத்தி]], [[ஹிந்தி]], [[உருது]] மற்றும் [[ஜமேய்க்கக் கிரியோல்]] ஆகியவை.
350

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1708915" இருந்து மீள்விக்கப்பட்டது