"திருத்தந்தை பிரான்சிசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

252 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (இற்றைப்படுத்தல்)
சி
திருத்தந்தை '''பிரான்சிசு''' ({{IPAc-en|ˈ|f|r|æ|n|s|ɨ|s}}, {{IPAc-en|ˈ|f|r|ɑː|n|s|ɨ|s}}; {{lang-en|Francis}} {{lang-la|Franciscus}} இயற்பெயர் '''ஹோர்கே மாரியோ பெர்கோலியோ''' பி. 17 டிசம்பர் 1936) [[கத்தோலிக்க திருச்சபை]]யின் [[திருத்தந்தையர்களின் பட்டியல்|266 ஆம்]] [[திருத்தந்தை]] ஆவார். இவர் 2013, மார்ச்சு 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் [[வத்திக்கான் நகர்|வத்திக்கான் நகரின்]] தலைவரும் ஆவார். இவர் [[அர்ஜென்டீனா]] நாட்டைச் சார்ந்தவர். [[புவேனோஸ் ஐரேஸ்]] உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றியவர்.
 
[[தென்னமெரிக்கா|தென்னமெரிக்காவிலிருந்து]] தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை இவரே. மேலும், [[இயேசு சபை]]யிலிருந்து திருத்தந்தைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபரும் இவர் ஆவார். [[மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை)|மூன்றாம் கிரகோரி]]க்கு பின்பு கடந்த 1200 ஆண்டுகளில் ஐரோப்பாவுக்கு வெளியே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.<ref>{{cite news|last=Donadio|first=Rachael|title=The New Pope: Bergoglio of Argentina|url=http://www.nytimes.com/2013/03/14/world/europe/cardinals-elect-new-pope.html|accessdate=13 மார்ச் 2013|newspaper=The New York Times|date=13 மார்ச் 2013}}</ref> 913இல் [[லாண்டோ (திருத்தந்தை)|திருத்தந்தை லாண்டோ]]வுக்குப் பின்பு தனக்கு முன் இருந்த திருத்தந்தையரின் பெயரை தனது ஆட்சிப்பெயராகஆட்சிப்பெயராகத் தெரிவு செய்யாத இரண்டாம் திருத்தந்தை இவர் ஆவார்.
 
இவர் தம் தாய்மொழியாகிய எசுப்பானியம், தம் பெற்றோரின் பூர்வீக மொழியான இத்தாலியம் மற்றும் இலத்தீன், செருமானியம், ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகளை நன்கு பேச அறிந்தவர்.<ref>{{cite news|url=http://www.guardian.co.uk/world/2013/mar/13/new-pope-thirteen-key-facts|title=திருத்தந்தை பிரான்சிசு: 13 key facts about the new pontiff|date=March 13, 2013|work=The Guardian|accessdate=13 March 2013}}</ref>
 
2005ஆம் ஆண்டு நடந்த [[திருத்தந்தைத் தேர்தல் அவை|திருத்தந்தைத் தேர்தல் அவையில்]] [[பதினாறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|பதினாறாம் பெனடிக்ட்]] திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அப்போது கர்தினால்-வாக்காளராகத் தேர்தலில் பங்கேற்ற பெர்கோலியோவுக்கு 40 வாக்குகள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.<ref>[http://ncronline.org/blogs/ncr-today/papabile-day-men-who-could-be-pope-13 2005 திருத்தந்தைத் தேர்தல் அவையில் இரண்டாம் இடத்தில் வந்தவர்]</ref> ஆயினும் கர்தினால் பெர்கோலியோ தமக்குத் திருத்தந்தைப் பதவிக்காக வாக்குகள் அளிக்கவேண்டாம்அளிக்க வேண்டாம் என்று உடன் கர்தினால்மார்களிடம் அழாக்குறையாகக் கேட்டுக்கொண்டதாககேட்டுக்கொண்டதாகச் சில செய்திகள் கூறுகின்றன.<ref name = "tears">{{cite web|url=http://vaticaninsider.lastampa.it/vaticano/dettaglio-articolo/articolo/conclave-22761/ |title=''Ecco come andò davvero il Conclave del 2005'' lastampa.it (Italian) |work=La Stampa |accessdate=2013-03-13}} According to the source, Cardinal Bergoglio begged "almost in tears" ("quasi in lacrime" in Italian)</ref>
 
==இளமைப் பருவம்==
==கர்தினால் பட்டம் பெறுதல்==
 
[[இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்]] பேராயர் ஹோர்கே மாரியோ பெர்கோலியோவை 2001, பெப்ருவரி 21ஆம் நாள் கர்தினால் பதவிக்கு உயர்த்தினார். அப்போது அவருக்குஅவருக்குப் புனித இராபர்ட் பெல்லார்மீனோ கோவில் கர்தினால்-குரு என்னும் பதவியும் அளிக்கப்பட்டது.
 
கர்தினால் என்னும் வகையில் அவர் உரோமை மைய அலுவலகத்தின் பல பேராயங்களில் உறுப்பினராகப் பணிபுரிந்தார். அவை:
கர்தினால் பெர்கோலியோ எளிமையான வாழ்க்கை நடத்தினார். பேராயர் என்ற முறையில் அவருக்குப் பெரியதொரு மாளிகை இல்லமாக இருந்தபோதிலும் அவர் ஒரு எளிய, சிறிய கட்டடத்தில் வாழ்ந்தார். தனி ஓட்டுநரைக் கொண்ட சொகுசு தானுந்து தமக்கு அளிக்கப்பட்டபோதும் அது வேண்டாம் என்று கர்தினால் பெர்கோலியோ பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்து மற்றும் பெருநகர் உந்துகளிலே பயணம் செய்தார்.<ref>{{cite web|url=http://cablegatesearch.net/cable.php?id=05VATICAN466|date=2005-04-18|accessdate=2012-03-13 |title=''Toward The Conclave Part III: The Candidates''}}</ref> மேலும், சமயலுக்கென்று தனி ஆள் வைக்காமல், அவர் தமக்கு வேண்டிய உணவைத் தாமே சமைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
 
அநீதியான அமைப்புகளை ஒழித்துஒழித்துச் சமூக நீதியை நிலைநாட்டுவதை விடவும் ஒவ்வொருவரும் நீதியான, எளிமையான மற்றும் நேர்மையான வாழ்க்கை நடத்தும்போது அதுவே சமூக நீதிக்கு வழியாகும் என்பது அவருடைய அணுகுமுறையாக இருந்தது.
 
==நோயுற்றோர் மீது பரிவு காட்டல்==
2013ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 11ஆம் நாள் [[பதினாறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]] அதிர்ச்சியான ஒரு செய்தியை அறிவித்தார். அதாவது, தமது முதிர்ந்த வயது காரணமாகவும் உடல்நிலைக் குறைவு காரணமாகவும் 2013, பெப்ருவரி 28ஆம் நாள் தாம் திருத்தந்தைப் பணியைத் துறக்கப்போவதாக அவர் செய்தி வெளியிட்டார். கடந்த சுமார் 600 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வாறு ஒரு திருத்தந்தை பணியிலிருந்து விலகியதில்லை. மாறாக, திருத்தந்தைப் பதவி வாழ்நாள் முழுவதற்கும் நீடிப்பது என்ற வழக்கம் நிலவியது.
 
அந்த அதிர்ச்சியான அறிவிப்பைத் தொடர்ந்து, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 2013, மார்ச்சு 12ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடிய 115 கர்தினால்மார் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க வாக்குகள் அளித்தார்கள். அடுத்த நாள் மார்ச்சு 13, புதன்கிழமையன்று கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://www.vatican.va/holy_father/francesco/elezione/index_sp.htm |title=FRANCISCUS |date=13 மார்ச் 2013|quote= Annuntio vobis gaudium magnum; habemus Papam: Eminentissimum ac Reverendissimum Dominum, Dominum Georgium MariumSanctae Romanae Ecclesiae Cardinalem Bergoglioqui sibi nomen imposuit Franciscum|archiveurl=http://www.webcitation.org/6F60wLVTO|archivedate=13 மார்ச் 2013|publisher=Holy See}}</ref><ref>[http://www.news.va/en/news/habemus-papam-cardinal-bergolio-elected-pope Habemus Papam! Cardinal Bergolio Elected Pope - Fracis I]</ref> இவர் பிரான்சிசு என்பதை தனது [[திருத்தந்தையின் ஆட்சி பெயர்|ஆட்சி பெயராகபெயராகத்]] தெரிவு செய்தார்.<ref name="cnbc">{{cite news |title=Cardinal Jorge Mario Bergoglio of Argentina Named as New Pope of the Roman Catholic Church |url=http://www.cnbc.com/id/100538976 |newspaper=CNBC |date=13 மார்ச் 2013 |accessdate=13 மார்ச் 2013}}</ref> அதே நாளில் வத்திக்கான் நகரின் துணை செய்தித் தொடர்பாளர் அருள்திரு தாமசு ரோசிக்கா, இப்பெயரை திருத்தந்தை [[அசிசியின் பிரான்சிசு]]வின் நினைவாகத் தேர்வு செய்தார் எனக் கூறினார்.<ref>Michael Martinez, [http://www.cnn.com/2013/03/13/world/pope-name/index.html?hpt=hp_t1 CNN Vatican analyst: Pope Francis' name choice 'precedent shattering'], [[CNN]] (13 மார்ச் 2013). Retrieved 13 மார்ச் 2013.</ref><ref>{{cite web|author=David Batty |url=http://www.guardian.co.uk/world/2013/mar/13/pope-francis-assisi-seagull-sistine |title=Pope named after Francis of Assisi heralded by gull atop Sistine chimney &#124; World news |publisher=The Guardian |date= |accessdate=2013-03-13}}</ref><ref>{{cite web|url=http://news.blogs.cnn.com/2013/03/13/cardinals-elect-new-pope/ |title=Argentina's Bergoglio becomes Pope Francis – This Just In - CNN.com Blogs |publisher=News.blogs.cnn.com |date= |accessdate=2013-03-14}}</ref> மேலும் அவர் திருத்தந்தையின் பெயர் ''பிரான்சிசு'' என்றும் ''முதலாம் பிரான்சிசு'' அல்ல எனவும் தெளிவுபடுத்தினார். பின்னாட்களில் வேறு ஒருவர் பிரான்சிசு என்னும் பெயரினைத் தேர்வு செய்தால் அப்போது இவர் முதலாம் பிரான்சிசு எனக் குறிக்கப்படுவார் எனவும் கூறினார்.<ref>Emily Alpert, [http://www.latimes.com/news/world/worldnow/la-fg-wn-vatican-pope-francis-name-20130313,0,1309501.story Vatican: It's Pope Francis, not Pope Francis I], ''[[Los Angeles Times]]'' (13 மார்ச் 2013). Retrieved 13 மார்ச் 2013.</ref>
 
===ஆட்சி முத்திரை===
திருத்தந்தை பிரான்சிசுவின் ஆட்சி முத்திரை மார்ச்,18,2013 அன்று வெளியிடப்பட்டது.<ref name="coa" /> [[இயேசு சபை]]யின் சின்னத்தையும், "இரக்கமுற்றுத் தேர்ந்துகொண்டார்" என்ற விருதுவாக்கையும், திருத்தந்தை பிரான்சிஸ் தன் ஆட்சி முத்திரையாகப் பயன்படுத்துகிறார். [[அர்கெந்தீனா]]வில் [[புவெனஸ் ஐரிஸ்]] பேராயராகப் பணியேற்றபோது பயன்படுத்திய ஆட்சி முத்திரையும், குறிக்கோளுரையையும் திருத்தந்தை பிரான்சிஸ் தொடர்ந்து பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
IHS என்ற மூன்று எழுத்துக்களும், அவற்றைஅவற்றைச் சுற்றி அமைந்துள்ள கதிர்போன்ற அடையாளங்களும் இயேசு சபையினரின் அதிகாரப்பூர்வமான சின்னம். அதற்குக் கீழ் ஒரு விண்மீனும், இலாமிச்சை (spikenard) மலரும் பொறிக்கப்பட்டுள்ளன. இவை, [[அன்னை மரியா]]வையும், [[புனித யோசேப்பு|புனித யோசேப்பையும்]] குறிப்பன.
 
வரிதண்டும் பணியில் இருந்த புனித மத்தேயுவை அன்புடன் பார்த்து, அவரைத் தன்பின்னே வரும்படி இயேசு அழைத்த நிகழ்வைப் பின்னணியாகக் கொண்டு, "இரக்கமுற்றுத்துத் தேர்ந்துகொண்டார்" என்ற வார்த்தைகளைவார்த்தைகளைத் தன் பேராயர் பணிக்கென திருத்தந்தை தேர்ந்திருந்தார். 1953ம் ஆண்டு [[மத்தேயு (திருத்தூதர்)|புனித மத்தேயு]] திருநாளன்று, அப்போது 17 வயது நிரம்பியவரான திருத்தந்தை பிரான்சிசு, தன் துறவற அழைப்பை உணர்ந்ததால், அந்த நிகழ்வைக் குறிக்கும் வார்த்தைகளைத் தன் பணிவாழ்வின் விருதுவாக்காக மேற்கொண்டார் என்றும் கூறப்படுகின்றது. மேலும், ''miserando atque eligendo'' ("இரக்கமுற்றுத் தேர்ந்துகொண்டார்") என்னும் இலத்தீன் சொற்றொடர், இயேசு சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்த மத்தேயுவைத் தம் சீடராகுமாறு அழைத்த நிகழ்ச்சியைக் குறிக்கிறது.
 
{{cquote|இயேசு அங்கிருந்து சென்றபோது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம் 'என்னைப் பின்பற்றி வா' என்றார் (மத்தேயு 9:9)}}
 
இந்த விவிலிய நிகழ்ச்சி பற்றிநிகழ்ச்சிபற்றி விரிவுரை எழுதியவர்களுள் ஒருவர் வணக்கத்துக்குரிய பேதா (The Venerable Bede) என்பவர். 672/3 - 735 ஆண்டுக்காலத்தில் வாழ்ந்த இவர் தமது விரிவுரையில், இயேசு மத்தேயுவைச் சுங்கச்சாவடியில் கண்டு அவர்மீது "இரக்கம் கொண்டு" அவரைத் தம் சீடராகத் "தேர்ந்துகொண்டார்" என்னும் கருத்தை எடுத்துச் சொல்லும் போது ''miserando atque eligendo'' என்னும் இலத்தீன் தொடரைப் பயன்படுத்துகிறார். அதையே திருத்தந்தை பிரான்சிசு தமது விருதுவாக்காகக் கொண்டுள்ளார். இதில் ''இரக்கம்'' என்னும் கருத்தும் ''தேர்ந்தெடுத்தல்'' (''வேறுபாடு காட்டாமல் பரிவோடு ஏற்கும் மனப்பான்மை'') என்னும் கருத்தும் அடங்கியுள்ளன.<ref>- இலத்தீன் தொடர்: "Vidit, inquit, Iesus hominem sedentem in telonio, Matthaeum nomine, et ait illi: Sequere me. Vidit autem non tam corporei intuitus, quam internae miserationis aspectibus, [...] Vidit ergo Iesus publicanum, et quia miserando atque eligendo vidit, ait illi, Sequere me." - வணக்கத்துக்குரிய பேடாவின் மறையுரைகள், 25</ref><ref>[http://it.wikipedia.org/wiki/Papa_Francesco திருத்தந்தை பிரான்சிசு - இத்தாலிய விக்கி]</ref> தாம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே இக்கருத்துகளைத் திருத்தந்தை பிரான்சிசு தமது உரைகள் வழியாகவும் செயல்கள் வழியாகவும் வெளிப்படுத்தி வருகின்றார்.
 
==திருத்தந்தை பிரான்சிசின் ஆட்சியின் முதல் நாள்கள்==
 
*'''2013, மார்ச்சு 13, புதன்:'''
[[திருத்தந்தைத் தேர்தல் அவை 2013|தேர்தல் அவையில்]] மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கர்தினால் பெர்கோலியோவுக்கு தேர்தலின் இரண்டாம் நாள் ஐந்தாம் சுற்றில் கிடைத்தது. உடனேயே கூடியிருந்த கர்தினால்மார் கையொலி எழுப்பிஎழுப்பித் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
 
கர்தினால்-வாக்காளர்களில் மூத்தவர் என்ற முறையில் கர்தினால் ஜோவான்னி பத்தீஸ்தா ரே, கர்தினால் பெர்கோலியோவை அணுகி, ''சட்டமுறைப்படியான தேர்தல் வழி உமக்கு அளிக்கப்படுகின்ற திருத்தந்தைப் பதவியை ஏற்கிறீரா?'' என்று கேட்டார். அதற்குஅதற்குக் கர்தினால் பெர்கோலியோ ''ஏற்கிறேன்'' என்று பதிலிறுத்தார். அந்நேரத்திலிருந்து கர்தினால் பெர்கோலியோ "திருத்தந்தை" என்னும் பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் கர்தினால் ரே, புதிய திருத்தந்தையிடம் ''என்ன பதவிப்பெயரைத் தெரிந்துள்ளீர்?'' என்று கேட்டார். அக்கேள்விக்குப் பதில்மொழியாகபதில்மொழியாகத் திருத்தந்தை ''பிரான்சிசு'' என்று கூறினார்.
 
பின்னர் திருத்தந்தை பிரான்சிசு சிவப்பு நிறமான தமது கர்தினால் அங்கியைக் களைந்துவிட்டு, திருத்தந்தைக்குரிய வெள்ளை அங்கியை அணிந்துகொண்டார். அந்த அங்கியின் மேல் திருத்தந்தைக்கே உரிய கருஞ்சிவப்பு நிறத்திலான தோள்சுற்றாடை (''mozzetta'') அணிந்து, அதன்மேல் தங்கக் கழுத்துச் சிலுவை அணியும்படி திருத்தந்தை வழிபாட்டுமுறைத் தலைவர் கேட்டுக்கொண்டார். ஆனால் திருத்தந்தை பிரான்சிசு அந்த ஆடம்பரம் தமக்கு வேண்டாம் என்று கூறி, தாம் ஆயரான நாளிலிருந்தே அணிந்துவந்துள்ள இரும்பிலான கழுத்துச் சிலுவையை போதும் என்றும், தோள்சுற்றாடை வேண்டாம் என்றும் கூறிவிட்டார்.
 
அதன்பிறகு, அவர் கர்தினால்-வேட்பாளர்கள் கூடியிருந்த சிஸ்டைன் சிற்றாலயத்திற்கு மீண்டும் சென்று, அங்கு கர்தினால்மார் அளித்த மரியாதையைப் பெற்றுக்கொண்டார். அங்கு வழக்கமாகவழக்கமாகப் புதிய திருத்தந்தைக்கென்று ஓர் உயர்ந்த மேடையில் இடப்பட்ட அரியணை இருக்கும் அதில் புதிய திருத்தந்தை அமர்ந்திருக்க, ஒவ்வொரு கர்தினாலும் அவர்முன் வந்து, முழந்தாட்படியிட்டு அவருடைய கை மோதிரத்தை முத்திசெய்தி தம் மரியாதையையும் கீழ்ப்படிதலையும் வெளிப்படுத்துவர். ஆனால், இங்கேயும் திருத்தந்தை தாம் எளிய முறையைக் கடைப்பிடிப்பதாகக் காட்டினார். அவர் தமக்கென்று போடப்பட்ட அரியணையில் அமராமல், பிற கர்தினால்மார்களைப் போலவே நின்றுகொண்டு அவர்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
 
''புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ என்னும் பெயருடைய அவர் பிரான்சிசு என்னும் பெயரைத் தெரிந்துகொண்டுள்ளார்'' என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய திருத்தந்தை மக்கள் முன் தோன்றி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.
 
மக்களுக்கு உரையாற்றியபோது திருத்தந்தை மக்களிடம் தமக்காக இறைவனிடம் அமைதியாக மன்றாடக் கேட்டுக்கொண்டார். அவ்வாறு கூறிய பின் சிறிது நேரம் மக்கள் முன்னிலையில் தலைதாழ்த்தி நின்றார். பின்னர் குருத்துவ அடையாளமான தோள்தொங்கல் பட்டையை அணிந்துகொண்டு மக்களுக்கு ஆசி வழங்கினார். ஆசி வழங்கியதும் அந்தஅந்தப் பட்டையைக் கழற்றிக்கொடுத்துவிட்டார். இவ்வாறு மக்களோடு ஒருவராகத் தம்மை ஒன்றுபடுத்தி, அவர்களுக்குத் தாம் பணியாளனாக இருப்பதைத் திருத்தந்தை செய்கைகள் வழியாக வெளிப்படுத்தினார்.
 
திருத்தந்தையின் எளிமையையும் பணிவையும் மக்கள் கண்டு வியந்தது மட்டுமல்ல, புதிய திருத்தந்தை கத்தோலிக்க திருச்சபையில் எளிமை, கனிவு, பணிவு போன்ற பண்புகள் வளர்வதற்குத் தம் பணிக்காலத்தை அர்ப்பணிப்பார் என்று பொருள்கொண்டனர்.
==திருத்தந்தை பிரான்சிசுவின் தலைமைப்பணி ஏற்புத் திருப்பலி==
 
2013, மார்ச்சு 19ஆம் நாள், தூய யோசேப்பு பெருவிழாவன்று, திருத்தந்தையின் தலைமைப்பணி ஏற்புத் திருப்பலி தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிகழ்ந்தது. அந்த நிகழ்வின்போது திருத்தந்தை பிரான்சிசு உரோமை மறைமாவட்டத்தின் ஆயராகவும், அந்தத் தகுதியின் அடிப்படையில் அனைத்துலகத் திருச்சபைக்கும் தலைவராகவும் பகிரங்கமாகப் பணிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். முன்னாட்களில் "முடிசூட்டல் விழா" (''coronation'') என்று அழைக்கப்பட்ட இந்த விழாவை எளிமையான விதத்தில் கொண்டாடும்படி பிரான்சிசு விரும்பினார். இயேசுவின் முதன்மைத் திருத்தூதரான புனித பேதுருவின் வழிவரும் பணியாளர் என்ற முறையில் இந்தப் பணிப்பொறுப்பை ஏற்பதாகஏற்பதாகப் பிரான்சிசு முன்வந்தார்.
 
திருப்பலியில் குறைந்தது 200,000 மக்கள் கலந்துகொண்டார்கள் என்று கணிக்கப்படுகிறது. வெளிநாட்டுத் தலைவர்களும் தூதர்களுமாக 132 நாடுகளிலிருந்து ஆட்சி அதிகாரிகள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
கத்தோலிக்க திருச்சபையிலிருந்து 11ஆம் நூற்றாண்டில் பிரிந்து சென்ற மரபுவழி கீழைத் திருச்சபைக்குத் தலைவராக இருக்கின்ற காண்ஸ்டான்டிநோபுள் மறைமுதுவர் முதலாம் பர்த்தலொமேயு இந்த விழாவில் கலந்துகொண்டது ஒரு சிறப்பு அம்சம் ஆகும். இந்த இரு திருச்சபைகளும் 1054இல் பிரிந்தன. அந்த நாளிலிருந்து இன்றுவரை கீழைத் திருச்சபை முதல்வர் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான திருத்தந்தையின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டதில்லை.<ref>{{cite news|last1=Pullella |first1=Philip|last2=Hornby|first2=Catherine|title=Pope sets tone for humbler papacy, calls for defense of the weak |url=http://www.reuters.com/article/2013/03/19/us-pope-idUSBRE92D05P20130319 |accessdate=19 March 2013|newspaper=Reuters|date=19 March 2013}}</ref>
 
திருப்பலி தொடங்குவதற்கு முன்னால், திருத்தந்தை புனித பேதுரு கோவில் வளாகத்தில் மக்களிடையே சென்று அவர்களை வாழ்த்தினார். இழைமக் கண்ணாடியால் மூடப்பட்ட சிறப்பு உந்தில் நின்றுகொண்டு மக்களிடையே செல்வது முந்திய வழக்கம். ஆனால் திருத்தந்தை பிரான்சிசு அந்த மூடிய உந்து தமக்கு வேண்டாம் என்று கூறிவிட்டார். மக்களோடு நேரடி தொடர்புகொண்டு அவர்களோடு உறவாட விரும்பிய அவர் சிறப்பு உந்தில் நின்றுகொண்டு வளாகத்தில் கூடிய மக்கள் நடுவே சென்றபோது, ஆங்காங்கே இறங்கி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். சிறு குழந்தைகளை அவரிடம் கொண்டுவந்தபோது அவர்களுடைய உச்சந்தலையில் முத்தமிட்டு அவர்களுக்கு ஆசி வழங்கினார். குறிப்பாக, ஊனமுற்ற ஒருவரை ஒருசிலர் உயர்த்திப்பிடித்து அவரை ஆசிர்வதிக்கஆசிர்வதிக்கக் கேட்டபோது, திருத்தந்தை வண்டியிலிருந்து இறங்கிச் சென்று அவரைத் தொட்டு முத்தமிட்டு ஆசி வழங்கினார்.
 
===சமயத் தலைவர்கள் வருகை===
 
===கம்பளிக் கழுத்துப்பட்டை அணிவித்த சடங்கு===
மேடையில் அமர்ந்திருந்த திருத்தந்தை பிரான்சிசுக்குக் கம்பளிக் கழுத்துப்பட்டை அணிவிக்கப்பட்டது. திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் (''Habemus Papam'') என்று 2013 மார்ச்சு 13ஆம் நாள் உலகுக்கு அறிவித்த கர்தினால் ழான்-லூயி தோரான் என்பவர் திருத்தந்தைக்கு அந்தக் கழுத்துப்பட்டையை அணிவித்தார். கம்பளி ஆடுகளிலிருந்து பெறப்பட்ட கம்பளியைக் கொண்டு நெய்யப்பட்ட அந்தஅந்தக் கழுத்துப் பட்டை கிறித்தவ மக்கள் என்னும் "ஆட்டுமந்தையை" கரிசனையோடு மேய்த்து, வழிநடத்தும் தலைவராக, நல்ல ஆயராகத் திருத்தந்தை விளங்கவேண்டும்விளங்க வேண்டும் என்னும் உண்மையை நினைவுபடுத்தும் அடையாளம் ஆகும்.<ref>[http://www.news.va/en/news/the-papal-pallium கம்பளிக் கழுத்துப்பட்டை அணிவித்தல்]</ref>
 
==="மீனவர் கணையாழியை" அணிவித்த சடங்கு===
பின்னர் கர்தினால் குழுவின் தலைவரான கர்தினால் ஆஞ்செயோ சொடானோ என்பவர் திருத்தந்தையை அணுகி, அவருடைய வலதுகை மோதிரவிரலில் "மீனவர் கணையாழி" (''Fisherman's Ring'') என்று அழைக்கப்படும் மோதிரத்தை அணிவித்தார். இந்த மோதிரம் திருத்தந்தையின் அதிகாரத்தின் சின்னம் ஆகும். இயேசுவின் முதன்மைச் சீடரான புனித பேதுரு மீனவராக இருந்தார் என்பதால், பேதுருவின் வழித்தோன்றலாகப் பதவியேற்கும் திருத்தந்தையும் அந்த மீனவர் கணையாழியை அணிகின்றார். திருத்தந்தை பிரான்சிசுக்கு அணிவிக்கப்பட்ட மோதிரம் தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிக் கணையாழி ஆகும். இதை என்றிக்கோ மான்ஃப்ரீனி என்னும் கலைஞர் [[ஆறாம் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் பவுலுக்கென்று]] வடிவமைத்திருந்தார். அந்த மோதிரத்தில் புனித பேதுரு கைகளில் திறவுகோல்களைத் தாங்கி நிற்பதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. அந்த மோதிரத்தைத் திருத்தந்தை ஆறாம் பவுல் அணியவில்லை. அவர் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைச் சித்தரித்த மோதிரத்தை அணிந்தார். ஆனால் ஆறாம் பவுலுக்கென உருவாக்கப்பட்ட மோதிரத்தின் அச்சு பாதுகாக்கப்பட்டிருந்ததால் அதைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட மோதிரத்தைத் தாம் விரும்புவதாகவிரும்புவதாகத் திருத்தந்தை பிரான்சிசு கூறியதன்படி அவருக்கு அந்த மோதிரம் அணிவிக்கப்பட்டது.<ref>[http://www.news.va/en/news/pope-francis-fishermans-ring "மீனவர் கணையாழி"]</ref>
 
===புனித யோசேப்பு பெருவிழாவின் பொருள்===
அதே நேரத்தில் அவர் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை ஆட்சியாளர்களுள் ஒருவராக இருந்ததாலும், இயேசு சபையில் மாநிலத் தலைவராகச் செயல்பட்டதாலும் அந்த ஆட்சிக் காலத்தில் சமூகப் பிரச்சனைகளை எவ்வாறு அணுகினார், எவ்வாறு அணுகவில்லை, அவருடைய அணுகுமுறையில் என்னென்ன குறைபாடுகள் இருந்தன என்பது குறித்தும் கருத்துகள் வெளியாயின.
 
எனவே, கத்தோலிக்க திருச்சபையின் இன்றைய உலகளாவிய தலைவராக, 1.2 பில்லியன் மக்களை வழிநடத்துபவராகவழிநடத்துபவராகத் திருத்தந்தை பிரான்சிசு விளங்குவதால் அவரது செயல்பாடுகள் குறித்தசெயல்பாடுகள்குறித்த விமரிசனங்களை எடுத்துக் கூறும்போது அவர் செயல்பட்ட காலம், அக்காலத்தின் அரசியல் சமூக பின்னணிகள் போன்றவற்றைத் தெளிவுபடுத்துவது இன்றியமையாதது.
 
=== அர்ஜென்டீனாவின் "இழிவான போர்" காலம் (1976-1983) ===
*1976 - தளபதி ஹோர்கே விதேலா என்பவர் தலைமையில் இராணுவக் கூட்டாட்சி (military junta) ஆட்சியைக் கைப்பற்றியது. இராணுவ ஆட்சியின் கீழ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இராணுவ ஆட்சியை எதிர்த்தவர்கள், மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தவர்கள், கல்லூரி மாணவர்கள், சமூகத் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கைதுசெய்யப்பட்டார்கள். மேலும் பெயரோ முகவரியோ இன்றி "காணாமற்போனவர்கள்" அரசு கொடுமைக்கு ஆளானர்கள். இந்த "அரசு பயங்கரவாதம்" (''state terrorism'') [[இழிவான போர் (அர்ஜென்டினா)|அர்ஜென்டீனாவின் இழிவான போர்]] (''Dirty War'') என்னும் பெயரால் அறியப்படுகிறது. அத்தகைய அரசு பயங்கரவாதம் 1983 வரை நீடித்தது.
 
*1981 - இராணுவ ஆட்சிக்குஆட்சிக்குத் தளபதி லெயோப்போல்டோ கல்த்தியேரி (''General Leopoldo Galtieri'') தலைமை ஏற்றார்.
 
*1982 ஏப்பிரல் - தளபதி கல்த்தியேரி கொடுத்த கட்டளையின்மேல் அர்ஜென்டீனிய படைகள் ஃபாக்லாந்து தீவுகளைக் கைப்பற்றின. ஐக்கிய இராச்சியம் தனது அயல்நாட்டுக் குடியேற்றப் பிரதேசமாகக் கருதிய அத்தீவுகளை மீட்க படை அனுப்பியது. போரில் 700 அர்ஜென்தீனியர் இறந்தனர். ஐக்கிய இராச்சியம் தீவுகளை மீண்டும் கைவசம் கொண்டுவந்தது. தளபதி கல்த்தியேரி பதவி இறங்கினார், தளபதி ரேய்னால்டோ பிக்னோனே என்பவர் பதவி ஏற்றார்.
 
*1983 - இராணுவ ஆட்சியிலிருந்து மீண்டு அர்ஜென்டீனா குடிமக்கள் ஆட்சிக்குத் திரும்பியது. ராவுல் அல்ஃபோன்சின் என்பவர் அதிபர் ஆனார். உடனேயே அரசு ''இழிவான போர்'' நடந்த காலக் கட்டத்தில் (1976-1983) இராணுவ ஆட்சியினர் நிகழ்த்திய அட்டூழியங்களை விசாரிக்கக் கட்டளையிட்டது. அப்போது ஆட்சியில் பங்கேற்ற இராணுவத் தலைவர்கள் மனித உரிமைகளை மீறியது பற்றிபற்றித் தகவல் சேகரித்து அவர்களுக்குத் தண்டனை வழங்க வழி ஏற்பட்டது. பணவீக்கம் 900% அளவை மிஞ்சியது.
 
*1989 - பெரோன் கட்சியைச் சார்ந்த கார்லோஸ் மேனெம் என்பவர் நாட்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*2001 அக்டோபர் - நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியினரான பெரோன் கட்சியினர் இரு அவைகளிலும் பெரும்பான்மை இடங்களைப் பெற்றார்கள்.
 
*2001, திசம்பர் 20 - மோசமாகிப்போன பொருளாதார நிலை காரணமாககாரணமாகக் கலவரங்களும் எதிர்ப்புகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து அதிபர் ஃபெர்னாண்டோ தெ லா ரூவா பதவி துறந்தார்.
 
*2002, சனவரி 1 - பெரோன் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எதுவார்தோ துகால்தே தற்காலிகத் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*2003 மே - நெஸ்டோர் கிர்ச்னர் நாட்டு அதிபராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
 
*2003 ஆகத்து - இராணுவ ஆட்சிக்காலத்தில் ஆட்சிப் பங்கேற்ற இராணுவத் தலைவர்களுக்கு மனித உரிமை மீறல் விசாரணையிலிருந்து அளிக்கப்பட்ட பாதுகாப்பை விலக்கவேண்டும்விலக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தீர்மானம் இயற்றின.
 
*2005 சூன் - நாட்டின் உச்ச நீதிமன்றம் ''இழிவான போர்'' காலத்தில் (1976-1983) இராணுவ ஆட்சியின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்களில் பங்கேற்றதாகக் கருதப்பட்ட இராணுவ ஆட்சியாளர்களை விசாரிப்பதிலிருந்து அளித்த பாதுகாப்பை விலக்கிவிட கட்டளை இட்டது.
*2006 சனவரி - [[அனைத்துலக நாணய நிதியம்|அனைத்துலக நாணய நிதியத்துக்கு]] அர்ஜென்டீனா திருப்பிச் செலுத்த வேண்டிய பல பில்லியன் டாலர் கடனை அர்ஜென்டீனா செலுத்தியது.
 
*2006 அக்டோபர் - முன்னாள் அதிபர் தளபதி ஹூவான் பெரோனின் உடலைஉடலைப் புவேனோஸ் ஐரேஸ் நகரின் வேறொரு பகுதியில் புதைத்த போது வன்முறை நிகழ்ந்தது.
 
*2007 சனவரி - வலதுசாரி இராணுவக் குழுக்கள் 1970களில் கட்டவிழ்த்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த அப்போது ஆட்சியிலிருந்த இசபெல் பெரோன் கைதுசெய்யப்பட்டார்.
*2007 திசம்பர் - கிறிஸ்டீனா ஃபெர்னாண்டெஸ் தெ கிர்ச்னர் நாட்டு அதிபராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
 
*2008 ஏப்ரல்- முன்னாள் அதிபர் இசபெல் பெரோன் தமது ஆட்சிக்காலத்தில் மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டதால் அவரை அர்ஜென்டீனாவுக்குத் திருப்பி அனுப்பவேண்டும்அனுப்ப வேண்டும் என்று அர்ஜென்டீனா அரசு கேட்டது. அக்கோரிக்கைக்கு இணங்குவதற்கு எசுப்பானிய நீதிமன்றம் மறுத்துவிட்டது.
 
*2008 ஆகத்து - 1973 முதல் 1983 வரை இராணுவ ஆட்சிக்காலத்தில் நடந்த ''இழிவான போர்'' காலத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டு இரண்டு முன்னாள் தளபதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
 
=== கருக்கலைப்பு, கருத்தடை, கருணைக் கொலை ===
திருத்தந்தை பிரான்சிசு பெண்களின் சில குறிப்பிட்ட உரிமைகள் தொடர்பாக அடிப்படைவாதக் கொள்கையாளராக விமர்சிக்கப்படுகிறார். [[திருமண முறிவு]], பெண்களுக்குபெண்களுக்குக் குருத்துவம் அளிப்பது, பெண்களின் உடல் நலம் சார்ந்த உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படும் [[கருக்கலைப்பு]] மற்றும் [[கருத்தடை]]க்கான உரிமை ஆகியவற்றை கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரப்பூர்வ படிப்பினைகளின் படி எதிர்ப்பவர் ஆவார்.<ref>"Francis remains an outspoken opponent of abortion, divorce, women's rights and euthanasia." - [http://www.guardian.co.uk/world/2013/mar/15/pope-francis-joy-humility-unbending Pope Francis: a man of joy and humility, or harsh and unbending?]</ref> கருக்கலைப்பு, குழந்தைக்குகுழந்தைக்குக் கருவில் அளிக்கப்படும் மரண தண்டனை எனக் கூறியுள்ளார்.<ref>{{cite web|url=http://www.lifenews.com/2013/03/13/new-pope-francis-called-abortion-the-death-penalty-for-the-unborn/ |title=New Pope Francis Called Abortion the 'Death Penalty for the Unborn' |publisher=LifeNews.com |accessdate=2013-03-13}}</ref><ref name="Aparecida presentation">{{cite news|last=Hoffman|first=Matthew Cullinan|title=Cardinal Archbishop of Buenos Aires Rages Against Abortion "Death Sentence"|url=http://www.lifesitenews.com/news/archive//ldn/2007/oct/07100509|accessdate=13 March 2013|newspaper=LifeSiteNews|date=5 October 2007}}</ref> [[கருணைக் கொலை]] செய்வதைக் கடுமையாக எதிர்ப்பவர் ஆவார். மேலும் இவற்றில் எக்கொள்கையையேனும் சரி எனக் கடைபிடிப்பவர்கள் [[நற்கருணை]] வாங்கத் தகுதியற்றவர்கள் எனவும் கூறியுள்ளார்.<ref>{{cite web|last=Pope Benedict XVI|title=LETTER OF HIS HOLINESS BENEDICT XVI TO THE BISHOPS OF LATIN AMERICA AND THE CARIBBEAN (Aparecida Document)|url=http://www.aecrc.org/documents/Aparecida-Concluding%20Document.pdf|accessdate=13 March 2013|archive=old.usccb.org/latinamerica/english/aparecida_Ingles.pdf|date=29 June 2007}} – para. 436</ref><ref>{{cite web|url=http://www.zenit.org/en/articles/aparecida-document-sent-to-pontiff |title=Aparecida Document Sent to Pontiff |publisher=Zenit.org |accessdate=2013-03-13}}</ref>
 
=== நங்கை, நம்பி, ஈரர், திருனர் ===
 
கத்தோலிக்க திருச்சபையின் படிப்பினைகளின் படி இவர் [[நங்கை, நம்பி, ஈரர், திருனர்]] பாலியல் நடத்தைகளையும் கடுமையாக எதிர்த்துள்ளார். ஆயினும் தற்பால் ஈர்ப்பு உடையவர்களை மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் எனஎனக் கூறியுள்ளார்.<ref>{{cite web|author=Catholic Online |url=http://www.catholic.org/hf/faith/story.php?id=50111 |title=NEW POPE: Who is this man named Bergoglio? – Living Faith – Home & Family – Catholic Online |publisher=Catholic.org |accessdate=2013-03-13}}</ref><ref>{{cite web|url=http://www.vatican.va/archive/ccc_css/archive/catechism/p3s2c2a6.htm |title=Catechism of the Catholic Church – The sixth commandment |publisher=Vatican.va |date=29 October 1951 |accessdate=2013-03-13}}</ref>
 
இவர் பாலியல், திருமணம் தொடர்பாக அடிப்படைவாத கொள்கையாளார் ஆவார். [[அர்கெந்தீனா]]வில் நநஈதி திருமண உரிமைச் சட்டம் தொடர்பாக இவர் "இறைவனின் போர்" என்று கூறி கடுமையான எதிர்ப்பைத் திரட்டினார். அச்சட்டம் "சாத்தானின் திட்டம்" என்றும் விமர்சித்தார்.<ref>[http://www.nytimes.com/2013/03/15/world/americas/argentines-divide-over-selection-of-pope-francis.html?_r=0 Back Home a Pontiff Is Honored, if Not by All]</ref> மேலும் [[தற்பால்சேர்க்கை|ஓரினத் தம்பதியர்]] குழந்தைகளைத் தத்தெடுப்பது அக்குழந்தைகளுக்கு அநீதி இழைப்பதாகும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு கருத்துத் தெரிவித்தற்காக அர்ஜென்டீனா நாட்டுக் குடியரசுத்தலைவர் [[கிறிஸ்டீனா ஃபெர்னாண்டெஸ் தெ கிர்ச்னர்]] கர்தினால் பெர்கோலியோவுக்கு வெளிப்படையான எதிர்ப்பினைக் காட்டினார்.
===முப்பெரும் சுற்றுமடல்கள்===
 
திருத்தந்தை பெனடிக்ட் தம் ஆட்சிக்காலத்தில் கிறித்தவ மரபின்படி நம்பிக்கை (''faith''), எதிர்நோக்கு (''hope''), அன்பு (''charity'') என்னும் மூன்று இறையியல் பண்புகள் பற்றிபற்றிப் படிப்பினை ஏடுகளைச் சுற்றுமடல்களாக வெளியிடத் தொடங்கியிருந்தார். அன்பு, எதிர்நோக்கு ஆகிய இரண்டு நற்பண்புகள் பற்றி எழுதிய அவர் நம்பிக்கை என்னும் நற்பண்பு பற்றி ஒரு சுற்றுமடலை எழுதி வெளியிட்டு, முப்பெரும் சுற்றுமடல் தொகுதியை நிறைவுசெய்ய எண்ணியிருந்த வேளையில் தம் திருத்தந்தைப் பதவியைத் துறந்தார். எனவே, தமது படைப்பை அவர் ஒரு தனி நூலாக, தனிப்பட்ட முறையில் வெளியிடக் கூடும் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
 
ஆனால், பெனடிக்ட் நம்பிக்கைப் பற்றி எழுதிய வரைவைத் திருத்தந்தை பிரான்சிசு அவரிடமிருந்து பெற்றுக் கொண்டு, அதில் தமது கருத்துகளையும் இணைத்து, மறுபார்வையிட்டு, தமது பெயரில் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு, பிழைப்புத் தேடி வந்து கடலில் மாண்டுபோனவர்களுக்காக இறைவேண்டல் செய்யவே திருத்தந்தை பிரான்சிசு 2013, சூலை 8ஆம் நாள் லாம்பெதூசா தீவுக்குச் சென்றார். தம் நாட்டை விட்டு வெளியேறி, பிற நாடுகளுக்கு அகதிகளாகச் செல்வோர் உலகெங்கிலும் சுமார் 8 மில்லியன் இருப்பர். 5000 மக்களை மட்டுமே கொண்ட சிறிய தீவாகிய லாம்பெதூசாவில் பல்லாயிரக் கணக்கான அகதிகள் சென்றிறங்குகின்றனர். அவர்களுடைய துன்ப நிலை தம் இதயத்தில் தைத்த முள் போல உறுத்துகிறது என்று திருத்தந்தை பிரான்சிசு கூறினார்.
 
அகதிகளைஅகதிகளைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிசு அம்மக்களுக்கு ஆதரவு தருகின்ற லாம்பெதூசா மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அதே நேரத்தில் அகதிகளின் நிலை குறித்துநிலைகுறித்து உலக மக்களிடையேயும் நாடுகளிடையேயும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். மேலும், அகதிகளின் அவல நிலையைப் பயன்படுத்தி அநியாயமாகப் பணம் ஈட்டுகின்ற இடைத் தரகர்களின் செயல்பாட்டையும் அவர் கண்டித்தார். கடலைக் கடந்து வந்தபோது விபத்துக்கு உள்ளாகி இறந்த அகதிகளின் நினைவாக ஓர் மலர் வளையத்தை அவர் கடலில் இட்டார்.
 
திருப்பலி நிறைவேற்றியபோது திருத்தந்தை மரத்தால் செய்த ஒரு கிண்ணத்தைப் பயன்படுத்தினார். அந்த மரக்கிண்ணம் அகதிகளை ஏற்றிவந்த ஒரு படகின் மரத்தால் செய்யப்பட்டது ஆகும்.
=="ஆண்டின் சிறந்த மனிதர்" விருது வழங்கப்படல்==
 
2013, திசம்பர் 11ஆம் நாளில், உலகப் புகழ்பெற்ற "டைம் வார இதழ்" ([[:en:Time Magazine|Time Magazine]]) திருத்தந்தை பிரான்சிசை [[ஆண்டின் மனிதர் (டைம் இதழ்)|2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்]] என்று அறிவித்துஅறிவித்துக் கவுரவப்படுத்தியுள்ளது.<ref>[http://poy.time.com/2013/12/11/pope-francis-the-choice/ 2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்]</ref>
 
திருத்தந்தை பிரான்சிசுக்கு இந்த விருது வழங்கியது எதற்காக என்று கேட்ட கேள்விக்கு "டைம்" இதழின் ஆசிரியர் நான்சி கிப்சு (''Nancy Gibbs'') என்பவர் பின்வருமாறு பதிலிறுத்தார்:
{{cquote|திருத்தந்தை பிரான்சிசு உண்மையிலேயே "மக்களின் திருத்தந்தை" (''The People's Pope'') என்ற சிறந்த இடத்தைப் பெற்றுள்ளார். பணிப்பொறுப்பை ஏற்ற 9 மாதங்களுக்கு உள்ளேயே, கத்தோலிக்க திருச்சபையின் உயர்தலைவரான திருத்தந்தை பிரான்சிசு உலக மனச்சாட்சியின் புதிய குரலாக மாறிவிட்டார்...மிகக் குறுகிய காலத்திலேயே உலக அரங்கில் முதியோர், இளையோர், ஆதரவாளர், ஐயப்பாடுடையோர் என்ற வேறுபாடின்றி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்ட பெருமை அவருக்கு உண்டு. எனவே, திருத்தந்தை பிரான்சிசை "2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் என்று அறிவித்துள்ளோம்.}}
 
திருத்தந்தை பிரான்சிசு, வத்திக்கான் அரண்மனையின் சொகுசுச் சூழலில் வாழ்வதற்கு மாறாகமாறாகச் சாதாரண விடுதியொன்றில் வாழ்வதற்கு முடிவுசெய்தார். உலகிலேயே மிகப்பெரிய கிறித்தவ திருச்சபையான கத்தோலிக்க திருச்சபை தன் நிர்வாகத்தில் காணும் குறைகளைக் களைய அவர் துணிச்சலுடன் செயல்படுகிறார். தவற்றினைச் சுட்டிக்காட்டும்போதும் ஆங்கே கனிவையும் இரக்கத்தையும் காட்டவேண்டும்காட்ட வேண்டும் என நினைவூட்டுகின்றார். ஏழைகளையும் சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டோரையும் அரவணைக்க மனித குலம் முன்வர வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றார். இப்பின்னணியில் அவருக்கு "சிறந்த மனிதர்" விருது வழங்கப்பட்டுள்ளது.
 
திருத்தந்தை பிரான்சிசுக்கு முன் வாழ்ந்த வேறு இரு திருத்தந்தையர்களுக்கும் "சிறந்த மனிதர்" விருது வழங்கப்பட்டது கருததத் தக்கது. அவர்கள் முறையே [[திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்]] (1962ஆம் ஆண்டு விருது), [[திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்]] (1994ஆம் ஆண்டு விருது) ஆவர்.
==உலக அமைதி பற்றிய செய்தி வழங்கல்: 2014 உயிர்த்தெழுதல் பெருவிழா==
 
வத்திக்கான் நகரின் [[புனித பேதுரு பெருங்கோவில்]] முன்னே அமைந்துள்ள [[புனித பேதுரு சதுக்கம்|புனித பேதுரு சதுக்கத்தில்]] கூடியிருந்த சுமார் 150 ஆயிரம் முன்னிலையில் [[இயேசுவின் உயிர்த்தெழுதல்]] பெருவிழாவான 2014, ஏப்பிரல் 20ஆம நாளன்று திருத்தந்தை பிரான்சிசு ''(உரோமை) நகருக்கும் உலகுக்கும்'' ([[:en:Urbi et Orbi|Urbi et Orbi]]) என்று கூறப்படுகின்ற சிறப்பு ஆசியுரை வழங்கினார். வானொலி, தொலைபேசி, சமூக வலையங்கள் வழியாகவழியாகக் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைந்த அந்த ஆசியுரையின்போது திருத்தந்தை பிரான்சிசு உலக மக்கள் அனைவருக்கும் அமைதிச் செய்தியை எடுத்துரைத்தார்.
 
உலகம் முழுவதும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை குறிப்பாக, சிரியா நாட்டில் அப்பாவி மக்களுக்கு எதிராக வன்முறைச் செயல்கள் நடைபெறுபெவது நிற்க வேண்டும் என்றார். அதுபோலவே, உக்ரைன் நாட்டில் இழுபறிநிலை தளர்த்தப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும் நைஜீரியா நாட்டில் நிகழும் கொடூரமான பயங்கரவாதம், ஈராக் நாட்டில் நிலவும் வன்முறை, தென் சூடான் மற்றும் உலகெங்கிலும் வன்முறைகள் முடிவுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
2014,மே 24-26 நாள்களில் இசுரயேலுக்கும் பாலத்தீனத்திற்கும் திருப்பயணமாகச் செல்லவிருக்கின்ற திருத்தந்தை பிரான்சிசு அந்த இரு நாடுகளுக்கிடையே அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று கேட்டார்.
 
மேலும், உலகத்தில் பசி பட்டினியால் மக்கள் அவதியுறுகின்ற நிலையை மாற்றிட அனைவரும் உழைக்க வேண்டும்; பசி பட்டினியால் குறிப்பாககுறிப்பாகச் சிறுவர்களும் முதுவயது தாண்டியோரும் வாடுகின்றனர். உலகில் நிகழும் போர்கள், கட்டாய இடம்பெயர்த்தல், வளங்களை வீணடித்தல் போன்றவையும் பசி பட்டினியை அதிகரிக்கின்றன. இந்நிலை மாற வேண்டும் என்றார் திருத்தந்தை பிரான்சிசு.
 
குறிப்பாக, [[எபோலா தீநுண்ம நோய்]] காரணமாககாரணமாகக் [[கினியா]], [[சியேரா லியோனி|சியேரா லியோனே]], [[லைபீரியா]] போன்ற நாடுகளில் துன்புறும் மக்களைத் திருத்தந்தை நினைவுகூர்ந்தார். மேலும், அக்கறையின்மையாலும் கொடிய வறுமையாலும் பரவுகின்ற நோய்கள் காரணமாக உலகில் எத்துணையோ மக்கள் இன்னல்படுகின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை, அந்நிலையை மாற்றிட அனைவரும் உழைத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
வழக்கம்போல, திருத்தந்தை தம் உரையின் முடிவில் நகைச்சுவையோடு கீழ்வருமாறு கூறினார்: "அவ்வளவு தான்! உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துகள்! எல்லாரும் போய் நன்றாக விருந்துண்ணுங்கள்!"<ref>[http://www.usatoday.com/story/news/world/2014/04/20/pope-easter-religion-rome/7926551/ 2014ஆம் ஆண்டு உயிர்த்தெழுதல் விழா அமைதிச் செய்தி]</ref>
சென்றமுறை ஒரு திருத்தந்தை ஆசியாவிற்குப் பயணமாகச் சென்றது 1999இல் ஆகும் (இந்தியா). அப்பயணத்தை மேற்கொண்டவர் திருத்தந்தை [[இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை)]]. அதன்பிறகு நிகழ்கின்ற திருத்தந்தைப் பயணம் இதுவே. இப்பயணம் திருத்தந்தை பிரான்சிசின் முதல் ஆசியப் பயணம். ஆசிய பெருநிலப் பரப்பில் வாழ்கின்ற பல கோடி மக்களுள் 3% பேர் மட்டுமே கத்தோலிக்கர் ஆவர். கொரியாவில் 10.4% பேர் கத்தோலிக்கர்.
 
ஆகத்து 13ஆம் நாள் வத்திக்கானிலிருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிசு, மறுநாள் கொரியாவின் சியோல் விண்படைத் தளத்தில் வந்திறங்கினார். அங்கு அவரைஅவரைத் தென் கொரியா நாட்டு அதிபர் பார்க் கியோன்-கை வரவேற்றார். கொரியா தீபகற்பத்தில் ([[மூவலந்தீவு]]) அமைதியும் நல்லிணக்க உறவும் ஏற்பட வேண்டும் என்பதற்காகஎன்பதற்காகத் தாம் பயணம் மேற்கொண்டதாகத் திருத்தந்தை கூறினார். தென் கொரியா நாட்டு அதிபர், தம் உரையின்போது, “திருத்தந்தை பிரான்சிசு கொரியா நாட்டுக்கு வருகை தருவது அந்நாட்டு மக்கள்பால் அவர் கொண்டுள்ள அன்பைக் காட்டுகிறது” என்றார்.
 
1984, 1989 ஆகிய ஆண்டுகளில் [[திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்]] கொரியா நாட்டுக்குப் பயணமாகச் சென்றிருந்தார். அவருக்குப் பின் பதவியேற்ற [[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]] எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்த போதிலும் ஆசியாவுக்குப் பயணமாகச் சென்றதில்லை. இப்போது கொரியாவுக்கு வருகின்ற திருத்தந்தை பிரான்சிசு மேற்கொண்டுள்ள பயணம் கொரியாவில் நிகழ்கின்ற திருத்தந்தைப் பயணங்களுள் மூன்றாவதாக அமைகிறது.
ஆசிய நாட்டு மக்களோடு நேரடியாகத் தொடர்புகொள்ளும் வகையில் ஆங்கில மொழியில் உரையாற்றுவதற்காகத் திருத்தந்தை பிரான்சிசு தயாரிப்போடு வருகிறார். வழக்கமாக அவர் இத்தாலிய மொழியில் உரையாற்றுவார். சிலவேளைகளில் தமது தாய்மொழியான எசுப்பானியத்தில் உரை நிகழ்த்துவார்.
 
ஆகத்து 14, வியாழன்: இன்று காலை கொரியா வந்து சேர்ந்த திருத்தந்தை பிரான்சிசு, கொரியா நாட்டு ஆட்சித் தலைவர்களைச் சந்தித்த பிறகு, மாலையில் கொரியா கத்தோலிக்க ஆயர்களைஆயர்களைச் சந்தித்து உரையாற்றினார்.
 
குண்டு துளைக்காத பாதுகாப்பு அரண்கொண்ட சிறப்பு ஊர்தியில் பயணம் செல்வதைத் தவிர்த்து, கொரியா நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற வாகனங்களுள் மிகச் சிறிய வகை சேர்ந்த “கியா சோல்” (Kia Soul) சிற்றுந்தைத் திருத்தந்தை தேர்ந்துகொண்டார். உலகப் பெரும் தலைவர்களுள் ஒருவரான திருத்தந்தை இவ்வாறு எளிய முறையில் பயணம் செய்வது குறித்து கொரியா மக்களும் பிறரும் வியக்கின்றனர்.
 
ஆகத்து 15, வெள்ளி: ஆகத்து 15ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபை அன்னை [[மரியாவின் விண்ணேற்பு]] பெருவிழாவைக் கொண்டாடுவதை முன்னிட்டுத் திருத்தந்தை பொது அரங்கில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினார். அப்போது அவர் கூறியது: “கொரியா நாட்டு மக்கள் கிறித்தவ நம்பிக்கையில் உறுதியாக நிலைத்து நிற்கின்றனர். எத்தனையோ துன்பங்களுக்கு நடுவிலும், துன்புறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் கிறித்துவுக்குச் சான்று பகர்ந்துள்ளனர்...இவ்வுலகச் செல்வங்கள் மனிதரின் இதயத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற ஆன்ம வேட்கையை நிறைவு செய்ய முடியாது...கட்டற்ற போட்டியின் அடிப்படையில் எழுகின்ற பொருளாதார அமைப்புகளும், தொழிலாளரின் உரிமைகளை மறுக்கின்ற பொருளாதார அமைப்புகளும் மனித மாண்பை ஏற்க மறுக்கின்றன. கிறித்தவர்கள் ஏழை மக்கள் மீதுமக்கள்மீது சிறப்பான கரிசனை காட்ட வேண்டும்.”
 
ஆசியாவின் பல நாடுகளிலிருந்து வந்திருந்த இளையோருக்கு செய்தி வழங்கிய திருத்தந்தை, கொரியா நாட்டுக் குடும்பத்திற்காக இறைவனை வேண்டுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். இளையோர் கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்திருந்த கொரியா நாட்டுப் பெண் ஒருவர் திருத்தந்தை பிரான்சிசிடம், “எங்கள் கொரியா நாடு இன்று வடக்கு ஒன்று, தெற்கு ஒன்று எனப் பிரிந்துகிடக்கின்றது. இதனால் மக்களுக்கு ஏற்படுகின்ற துன்பங்கள் என்றுதான் மறையுமோ” என்று கூறியதை அவர் கூர்ந்து கேட்டார்.
 
இளைஞர்களைச் சந்திக்கையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட உரையை வாசித்து அளிப்பதில் திருத்தந்தை சிரமப்பட்டது தெரிந்தது. அப்போது திருத்தந்தை “ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட உரையை வாசிப்பது இளையோரைக் கவராது. அவர்களோடு உறவாட வேண்டுமென்றால், இதயத்தின் ஆழத்திலிருந்து நேராகப் பேசவேண்டும்பேச வேண்டும் என்று என் நண்பர் ஒருவர் சொன்னார்” என்று கூறியதுமே, கூட்டத்திலிருந்து பலத்த கைத்தட்டு எழுந்தது. உடனேயே, திருத்தந்தை, ஆங்கில மொழியில் பேசுவதை விட்டுவிட்டு, இத்தாலிய மொழியில் உரையாடல் பாணியில் பேசத் தொடங்கினார். அப்போது, “கொரியா நாட்டு மக்கள் ஒரே மொழியைப் பேசுகின்றனர். நீங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு கொரியா என்று நாடு பிளவுபட்டுக் கிடப்பது மறைந்தது ஒரே குடும்பமாக நீங்கள் மாறிட அமைதியாக இறைவனை வேண்டுவோம்” என்று கூறியதும் கூட்டத்தில் பேரமைதி நிலவியது.
 
கம்போடியா நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு பெண், திருத்தந்தையிடம், கம்போடியாவிலும் பல கிறித்தவ மக்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களையும் புனிதர் என்று அறிக்கையிடுவது நல்லது என்று கூறியதும், திருத்தந்தை அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்தார்.
“தாமி” (selfie) வகை ஒளிப்படங்கள் எடுப்பதற்கு இளையோரோடு கூடவே பிரான்சிசு நின்றார்.
 
ஆகத்து 16, சனி: சியோல் நகரில் கொரியா மறைசாட்சிகள் திருத்தலத்தைத் திருத்தந்தை பிரான்சிசு சந்தித்தார். 10 மணிக்குமணிக்குப் பவுல் சி-சுங் என்பவருக்கும் அவரோடு வேறு 123 பேருக்கும் “அருளாளர்” பட்டம் வழங்கினார். இவர்கள் 18-19 நூற்றாண்டுகளில் கொரியாவில் கிறித்தவ நம்பிக்கையை முன்னிட்டு கொல்லப்பட்டவர்கள். வெளிநாட்டு மறைபரப்பாளர்கள் கொரியாவில் கிறித்தவத்தைக் கொணரவில்லை, மாறாக, கொரியா நாட்டு பொதுமக்களில் சிலர் சீன நாடு சென்று, அங்கு வாழ்ந்த கிறித்தவர்களிடமிருந்து கிறித்தவப் போதனைகளைக் கற்று, அவற்றைத் தம் சொந்த நாட்டிலும் பரப்பினார்கள். தமது சமய நம்பிக்கையின் பொருட்டு துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். இன்று, கொரியா மக்களுக்கும் ஆசிய மக்களுக்கும் ஏன் உலக மக்கள் அனைவருக்குமே அவர்கள் தலைசிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர் என்று திருத்தந்தை பிரான்சிசு கூறினார்.
 
பின்னர், கோட்டோங்னே (Kkottongnae) என்ற ஊனமுற்றோர் இல்லம் சென்று அங்கு பலவித ஊனங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெரியவர்களாக 70 பேரைபேரைச் சந்தித்து ஒரு மணி அளவு நேரம் செலவிட்டார். அவர்களுள் சிலர் தங்கள் ஊனங்கள் காரணமாக மருத்துவப் படுக்கைகளிலும் சக்கர வண்டிகளிலும் இருந்தனர். அவர்களை ஒருவர் ஒருவராகஒருவராகச் சந்தித்து, வாழ்த்துக் கூறி அவர்களுக்காகஅவர்களுக்காகச் செபம் ஒப்புக்கொடுத்தார்.
 
மாலையில் கொரியாவின் கத்தோலிக்க துறவியர் சுமார் 5000 பேரைபேரைச் சந்தித்து உரையாற்றினார். துறவியர், கற்பு, கீழ்ப்படிதல், ஏழ்மை ஆகிய வாக்குறுதிகள் அளிப்பதன் வழியாக, தங்கள் கிறித்தவ அழைத்தலை அதிக ஆர்வத்தோடு ஏற்கவேண்டும்ஏற்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். குறிப்பாக, ஏழைகளோடு தங்களை ஒன்றுபடுத்திக் கொண்டு, செல்வத்தை நம்பியிராமல் எளியவர்களாக வாழவேண்டும்வாழ வேண்டும் என்றும் கூறினார்.
 
ஆகத்து 17, ஞாயிறு: திருத்தந்தை ஆசிய பெருநிலத்தின் ஆயர் பேரவைகளின் பிரதிநிதிகளான 70 ஆயர்களைஆயர்களைச் சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியது: கத்தோலிக்க திருச்சபை வெற்றி மமதை கொண்ட மனப்பான்மையோடு இங்கு வரவில்லை. ஆயர்கள் ஆசிய நாடுகளின் பண்பாடுகளை மதித்து, கத்தோலிக்க நம்பிக்கையைக் கடைப்பிடித்து, பிறரோடு பகிரவேண்டும்பகிர வேண்டும். உரையாடல் மிக முக்கியம். ஆசியா பெருநிலத்தில், திருப்பீடத்தோடு முழு உறவு இன்னும் ஏற்படுத்தாத நாடுகள் இந்த உரையாடல் மனப்பான்மையோடு உறவுகள் ஏற்படுத்த முன்வரும் என்று எதிர்பார்க்கிறோம். உரையாடல் என்பது அரசியம் துறையில் மட்டுமல்ல, சகோதர மனப்பான்மையோடு நிகழ்வதாகவும் இருக்க வேண்டும்.
 
ஆசியாவில், சீன நாடு 1951இல் திருப்பீடத்தோடு ஆட்சி உறவுகளை முறித்துக்கொண்டது. வட கொரியா நாட்டில் சமய சுதந்திரம் இல்லை. அங்கு கிறித்தவர்களும் மிகச் சிலரே என்று தெரிகிறது. அவர்களும் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். வட கொரியாவோடும் திருப்பீடத்திற்கு அரசியல் உறவுகள் இல்லை.
கொரியாவுக்கு வான்வழியாகப் பயணம் சென்ற திருத்தந்தை பிரான்சிசின் விமானம் சீன நாட்டு வான் எல்லையில் பறந்த போது, வழக்கம்போல, திருத்தந்தை பிரான்சிசு சீன அரசுத் தலைவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
 
ஆகத்து 18, திங்கள்: திருத்தந்தை பிரான்சிசு, பல மதங்களைச் சார்ந்த தலைவர்களைதலைவர்களைச் சந்தித்து உரையாற்றுகிறார். பின்னர், சியோல் உயர் மறைமாவட்டத்தின் பெருங்கோவிலில் திருப்பலி நிகழ்த்துகிறார். அமைதியையும், கொரியா நாடுகளுக்கிடையே நல்லுறவு இணக்கத்தையும் வலியுறுத்தி அத்திருப்பலி அமையும்.
 
நண்பகலில் பிரியா விடை நிகழும். பின்னர் திருத்தந்தை பிரான்சிசு வத்திக்கான் நோக்கிப் பயணமாகிறார்.<ref>[http://www.asianews.it/news-en/Pope-to-embrace-Korea's-youth-and-martyrs-31392.html திருத்தந்தை பிரான்சிசின் கொரியா பயணம்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1709382" இருந்து மீள்விக்கப்பட்டது