மா. இராசமாணிக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி LanguageTool: typo fix
வரிசை 3:
 
==இளமை வாழ்க்கை==
இவரது தந்தையான மாணிக்கம், நிலம் அளந்து தரம் விதிக்கும் அலுவலகத்தில் ஒரு பிரிவின் மேலாளராக இருந்து, வட்டாட்சியராக உயர்ந்தவர். இவரது அன்னை தாயாரம்மாள். ஏழு பேர் பிறந்த குடும்பத்தில் இராசமாணிக்கனாரும் அவரின் அண்ணனான இராமகிருட்டிணன் என்பவருமே மிஞ்சினர். அரசுப் பணியாளரான தந்தையார் அலுவல் காரணமாகப் பல ஊர்களுக்கும் மாற்றப்பட்டதால் இராசமாணிக்கனாரின் கல்வியும் பல ஊர்களில் வளர்ந்தது. பல ஆண்டுகள் வரையில் தற்போதைய [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர மாநில]] [[கர்நூல்]], [[சித்தூர்]] முதலிய ஊர்களில் இருக்க நேரிட்டதால் நான்காம் வகுப்பு வரை தெலுங்கு மொழியே பயின்ற இவர், 1916 இல் தந்தையார் [[மதுரை]] மாவட்டத்தைச் சேர்ந்த நிலக்கோட்டைக்கு மாற்றப்பட்ட பிறகே தமிழ் பயிலத் தொடங்கினார். 1921ல் பணி காரணமாககாரணமாகத் [[திண்டுக்கல்]] வந்த தமையனார் இராமகிருட்டிணருக்குத் துணையாகத் தாயாருடன் இராசமாணிக்கனாரும் வந்தார். அங்கு திண்டுக்கல் தூய மேரி உயர்நிலைப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவராக அவர் சேர்ந்த நிலையில் தமிழ்க்கல்வி தொடர்ந்தது. இவர் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் தந்தையார் மறைந்ததால் திண்டுக்கல்லில் இருந்துதிண்டுக்கல்லிலிருந்து நிலக்கோட்டைக்கு வந்த இராசமாணிக்கனாரின் கல்வி மீண்டும் தடைப்பட்டது. குடும்பப் பொறுப்பேற்ற தமையனாருடன் அவரும் அன்னையாரும் இருக்க வேண்டிய சூழல் அமைந்ததால் தமையனார் பணிமாற்றம் பெற்ற இடங்களுக்கெல்லாம் அவரும் செல்ல நேர்ந்தது. நன்னிலத்தில் நிலையாக ஓராண்டு தங்கிப் பணியாற்றும் வாய்ப்பைத் தமையனார் பெற்ற நிலையில் 1920 இல் இராசமாணிக்கனார் மீண்டும் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்து பயின்று தேறினார்.
 
==தமிழார்வம்==
வரிசை 10:
மீண்டும் தமையனார் இராமகிருட்டிணருக்கு நன்னிலத்திலிருந்து தஞ்சாவூருக்குப் பணி மாற்றலாகிய நிலையில் அங்கு தம் படிப்பைத் தொடர விரும்பினார் இராசமாணிக்கனார். ஆனால் மாணிக்கனார் படிப்பு பலமுறை தடைபட்டதால் அவரை ஒரு தையல் கடையில் அவரது அண்ணன் வேலைக்குச் சேர்த்து விட்டார். ஆனால் படிப்பார்வம் கொண்ட இராசமாணிக்கனாரின் கல்வி [[தஞ்சாவூர்]] புனித பீட்டர் பள்ளித் தலைமையாசிரியரின் பேருதவியால் தொடர்ந்தது. பள்ளியில் முதல் மாணவராக வந்ததால் இவரின் கல்வி தடையின்றி தொடர்ந்தது.
 
இவரது உயர்நிலைக் கல்வியின் போது இவரது அண்ணனுக்கு மீண்டும் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர மாநிலத்திற்கு]] பணிமாற்றம் ஆனது. அவர் அனுப்பிய பணம் கல்வி செலவுக்குசெலவுக்குப் போதாததால் இவர் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்குமாணவர்களுக்குத் தனிப்பாடம் நடத்தி அதில் வரும் வருவாயை வைத்துவைத்துக் கல்வியைத் தொடர்ந்தார்.
 
[[தஞ்சாவூர்]] பள்ளியின் பேராசிரியரான கரந்தை கவியரசு [[ரா.வேங்கடாசலம் பிள்ளை]] என்பவராலும் அவரின் உதவியால் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர்களான [[உமாமகேசுவரம்பிள்ளை]], [[ந.மு.வேங்கடசாமி நாட்டார்]], [[உ.வே.சாமிநாதையர்]], [[ரா.இராகவையங்கார்]] போன்ற தமிழறிஞர்களாலும் இவரின் தமிழார்வமும் சமய ஆர்வமும் நெறிப்படுத்தப்பட்டது.
 
==தமிழாசிரியர்==
இவரது தந்தையாரின் நண்பரான கே.திருவேங்கடம் என்பாரின் உதவியுடன் 1928 ஆம் ஆண்டு சென்னை வந்து, வண்ணாரப் பேட்டையிலுள்ள தியாகராயர் நடுநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார். அங்கு கண்ணம்மாள் என்பவரைஎன்பவரைத் தன் 23ஆவது வயதில் மணந்தார். 1928 - 1936 வரையில் தியாகராயர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர் மாணவர்க்கான பாடநூல்களையும் துணைப்பாட நூல்களையும் எழுதினார். அப்போது இவரின் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு மட்டுமே.
 
==வரலாற்று நூலாசிரியர்==
வரிசை 28:
 
==பட்டப்படிப்பு==
எட்டு ஆண்டுகள் தியாகராயர் நடுநிலைப்பள்ளியில் பணியாற்றிய பிறகு, 1936ஆம் ஆண்டு முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்று பி.ஓ.எல், எல்.டி., எம்.ஓ.எல் ஆகிய பட்டங்களை முறையே 1939, 1944, 1945 ஆகிய ஆண்டுகளில் பெற்றார். எம்.ஓ.எல் பட்டத்திற்குப் [[பெரிய புராணம்|பெரியபுராணத்தை]] நன்கு ஆய்வு செய்து, பெரியபுராண ஆராய்ச்சி என்ற தலைப்பில் இவர் எழுதிய ஆய்வு நூலே பெரிய புராண ஆராய்ச்சி என்னும் நூலாகநூலாகப் பின்னாளில் வெளியாகியது. மேலும் பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு, சிந்து சமவெளி நாகரிகம் போன்ற நூல்களையும் இக்காலத்திலேயே எழுதினார்.
 
==சுயமரியாதை இயக்கம்==
தியாகராயர் பள்ளியிலும் முத்தியாலுப்பேட்டை பள்ளியிலும் பணியாற்றிய காலத்தில் சுயமரியாதை இயக்கத்தில் பற்று கொண்ட இவர் சுயமரியாதை சார் நூல்களையும் எழுதியுள்ளார். அக்காலத்தில் தமிழர் திருமணச் சடங்குகள் ரீதியில் பல தமிழ் குடும்பங்கள் கடன் சுமையால் துன்பப்பட்டதைக் கண்டு தமிழர் நல்வாழ்க்கைக் கழகம் கேட்டுக்கொண்டதன் பேரில் தமிழர் திருமண நூல் என்ற நூலை எழுதிஎழுதித் தமிழ் நாட்டு அறிஞர்களின் ஒருமுகமான போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் பாத்திரமானார்.
 
==கல்லூரி ஆசிரியர் மற்றும் முனைவர் பட்டம்==
இவர் 1947 முதல் 1953 வரை [[சென்னை]] விவேகானந்தர் கல்லூரியில் விரிவுரையாளராகவிரிவுரையாளராகப் பணியாற்றினார். அதன் போதே 1951ல் ''சைவ சமய வளர்ச்சி'' என்னும் நூல் வெளியிட்டு முனைவர் பட்டத்தையும் பெற்றார். அதன்பின் 1953ல் மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராகவும் தலைமை பேராசிரியராகவும் பொறுப்பேற்றார்.
 
==பல்கலைக்கழக பேராசிரியர்==
வரிசை 40:
 
==சைவத்தமிழ் பட்டங்கள்==
[[சைவ சமயம்|சைவ சமயத்தில்]] இவர் ஆற்றிய பணிகளைத் தொடர்ந்து இவருக்குஇவருக்குச் சைவ சமயத் தலைவர்களின் வாயிலாகவாயிலாகப் பல பட்டங்கள் வழங்கப்பட்டன. அவை,
# சைவ வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர் - 1951ல் திருவாடுதுறை ஆதீனம் வழங்கினார்.
# ஆராய்ச்சிக் கலைஞர் - 1955ல் மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம் வழங்கினார்.
வரிசை 50:
 
==மறைவு==
இவருக்குஇவருக்குத் தன் 59ஆவது வயதில் முதல் [[இதயத்திசு இறப்பு]] ஏற்பட்டது. இருந்தும் மருத்துவ சிகிச்சை மூலம்சிகிச்சைமூலம் பிழைத்துக் கொண்டார். மீண்டும் இரண்டாவது முறை [[இதயத்திசு இறப்பு]] ஏற்பட்ட போது 26 மே 1967ல் மரணம் அடைந்தார்.
 
==நாட்டுடைமை நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மா._இராசமாணிக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது