இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: az:Sonuncu şam yeməyi (Leonardo da Vinçi) is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி LanguageTool: typo fix
வரிசை 18:
லியொனார்டோ டா வின்சிக்குப் புரவலராக இருந்த லுடோவிக்கோ ஸ்ஃபோர்சா (''Ludovico Sforza'') என்னும் மிலான் குறுநில ஆளுநரும் அவர்தம் மனைவி பெயாட்ரீசு தெஸ்தே (''Beatrice d'Este'') என்பவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, டா வின்சி இச்சுவரோவியத்தை வரைந்தார்.
 
[[யோவான் நற்செய்தி]]யில் [[இயேசு]] தம் சீடர்களோடு இறுதி முறையாக உணவு அருந்திய நிகழ்ச்சி பற்றிநிகழ்ச்சிபற்றி விவரிக்கும் காட்சியை அடிப்படையாகக் கொண்டு டா வின்சி இந்த ஓவியத்தை உருவாக்கினார். [[இயேசு]] அந்த இறுதி இராவுணவின்போது [[நற்கருணை]] விருந்தை ஏற்படுத்தினார் என்று கிறித்தவர்கள் நம்புகின்றனர். எனவே இந்த இறுதி இராவுணவு "ஆண்டவரின் திருவிருந்து" (''Supper of the Lord'') என்றும் அழைக்கப்படுகிறது.
 
== திருவிவிலியத்தில் இயேசுவின் இறுதி இராவுணவு ==
வரிசை 25:
{{cquote|இப்படிச் சொன்னபின் இயேசு உள்ளம் கலங்கியவராய், 'உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்று திட்டவட்டமாகக் கூறினார். யாரைப்பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர்மேல் இயேசு அன்புகொண்டிருந்தார். சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி, 'யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக் கேள்' என்றார். இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த அவர், 'ஆண்டவரே அவன் யார்?' என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, 'நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்' என்று சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார். அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்.}}
 
[[யோவான் நற்செய்தி]] தவிர, [[மத்தேயு]], [[மாற்கு]], [[லூக்கா (நற்செய்தியாளர்)|லூக்கா]] ஆகிய பிற மூன்று நற்செய்தியாளர்களும் இயேசுவின் இறுதி இராவுணவை விவரித்துள்ளனர். [[பவுல் (திருத்தூதர்)|திருத்தூதர் பவுலின்]] மடல்களிலும் ஆண்டவரின் இறுதி உணவு பற்றியஉணவுபற்றிய குறிப்புகள் உண்டு:
* மத்தேயு 26:26-30
* மாற்கு 14:22-26
வரிசை 54:
லியோனார்டோ இறுதி இராவுணவு ஓவியத்தை 1495இல் வரையத் தொடங்கி, 1498இல் நிறைவுக்குக் கொணர்ந்தார். அவர் அதிகாலையில் எழுந்து ஓவிய வேலையைத் தொடங்கினால் மாலை வரையும், பசி தாகம் என்று பாராமல் ஓவியம் வரைவதிலேயே கண்ணாயிருந்தார் என்று சம கால எழுத்தாளர் மத்தேயோ பண்டேல்லோ (''Matteo Bandello'') என்பவர் குறிப்பிடுகிறார்.
 
சுவரில் ஓவியம் வரைய முடிவுசெய்த லியொனார்டோ அதிக நாள்கள் நீடித்து நிலைபெறும் தன்மையுடைய "ஈரவோவிய" (''fresco'') முறையைக் கையாள விரும்பவில்லை. அம்முறையில் முதலில் சமதளமான சுவரில் சீராகசீராகச் சுண்ணத்தால் முதல் பூச்சு செய்யவேண்டும்செய்ய வேண்டும். பூச்சு உலர்ந்துபோவதற்கு முன்னால், ஈரமாக இருக்கும்போதே சாயம் கலந்த நிறக்கலவைகளைத் தூரிகையால் பூச வேண்டும். ஆனால், லியோனார்டோ ஓவியம் வரைந்த போது ஒவ்வொரு தூரிகைப்பூச்சுக்கு முன்னும் சிந்தனையில் ஆழ்ந்திருப்பாராம்.
 
எனவே, "ஈரவோவிய முறையை" கையாளாமல், உலர்ந்த சுவர்தளத்தில் ஒரு பலகையில் ஓவியம் எழுதுவதுபோல முதலில் பசைக்கூழ் அப்பி, அடிநிறம் (''underpainting'') பூசி, அது உலர்ந்தபின் பல வண்ணங்களைத் துல்லியமாக விரித்தும் அழுத்தியும், பரவியும் குறித்தமைத்தும், ஒளிர்வித்தும் கருமையாக்கியும் இறுதி இராவுணவு ஓவியத்தை லியொனார்டோ எழுதினார்.
வரிசை 77:
* 1796: பிரஞ்சு இராணுவம் உணவறையை ஆயுதக் கிடங்காகப் பயன்படுத்தியது; ஓவியத்தின்மீது கல்லெறிந்தும், ஏணியில் ஏறி, ஓவியத்திலிருந்த திருத்தூதர்களின் சாயல்களில் கண்களைச் சுரண்டியும் நிறத்தை அகற்றினர். பின், ஓவியம் இருந்த உணவறை ஒரு சிறையாகப் பயன்பட்டது. சிறைக் கைதிகள் ஓவியத்தைச் சிதைத்தனரா என்று தெரியவில்லை.
* 1821: ஸ்டேஃபனோ பரேஸ்ஸி என்பவர் இறுதி இராவுணவு ஓவியத்தைச் சுவரிலிருந்து அகற்றி வேறிடத்துக்கு மாற்ற முயன்றார். அது இயலாத காரியம் என்று அவர் உணர்வதற்குள் ஓவியத்தின் நடுப்பகுதிக்கு மேலும் சேதம் விளைந்தது.
* 20ஆம் நூற்றாண்டு: ஓவியம் பற்றியஓவியம்பற்றிய ஒழுங்குமுறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
* 1901-1908: லூயிஜி காவெனாகி என்பவர் ஓவியத்தின் ஒளிப்படங்களைப் பயன்படுத்தி, கவனமாக ஆய்வு நிகழ்த்தி, முதன்முறையாக, லியொனார்டோவின் ஓவியம் "ஈரவோவிய முறையில்" எழுதப்படவில்லை என்று நிலைநாட்டினார். 1906-1908 ஆண்டுகளில் அவர் ஓவியத்தைத் தூய்மைப்படுத்தி, நிறம் போயிருந்த இடங்களில் நிறம் இட்டார். மேல் படிந்த அழுக்குகளை அகற்றினார்.
* 1924: ஒரேஸ்தே சில்வேஸ்த்ரி ஓவியத்தை மேலும் தூய்மையாக்கினார்.
வரிசை 91:
கடின உழைப்பின் விளைவாக லியொனார்டோவின் முதல் ஓவியத்தின் நிறங்கள் மீண்டும் வெளித்தோன்றின. நிறம் வெளிறிப்போன இடங்களில் பார்சிலோன் மிக மிதமானதொரு பொதுநிறப் பூச்சு கொடுத்தார். இவ்வாறு, புதுப் பூச்சும் லியொனார்டோ ஓவியத்தின் முதல் நிறங்களும் ஒன்றோடொன்று குழம்பாமல் பார்த்துக்கொண்டார்.
 
இந்த நீண்ட காலச் சீரமைப்புக்குப் பின் இறுதி இராவுணவு ஓவியம் 1999 மே மாதம் 28ஆம் நாள் மக்கள் பார்வைக்குத் திறந்துவைக்கப்பட்டது. ஓவியம் இருக்கின்ற அறை முழுவதும் மிக நுட்பமான, கட்டுப்படுத்தற்கு ஏற்றஏற்றக் காற்றோட்ட அமைப்பு நிறுவப்பட்டது. ஈரத்தன்மையையும் தூசி படிதலையும் தவிர்க்கும் தொழில்நுட்பமும் ஏற்படுத்தப்பட்டன. பார்வையாளர், முன்னறிவிப்போடுதான் ஓவியத்தைப் பார்க்க முடியும். ஒரே நேரத்தில் 25 பேர், 15 நிமிடங்கள் மட்டுமே பார்வைக்கு அனுமதி உண்டு.
 
==== சீரமைப்பு குறித்த விமர்சனம் ====
வரிசை 123:
=== பின்னணிக் கூறுகள் ===
 
ஓவியத்தின் மேல் பின்பகுதியில் மூன்று சாளரங்கள் உள்ளன. அவற்றின் வழியாக வரும் ஒளி ஓவியத்தின்மீது வெளிச்சத்தை உருவாக்குகிறது. இடதுபுறச் சுவரில் பக்கவாட்டிலுள்ளபக்கவாட்டில் உள்ள சாளரத்திலிருந்தும் ஒளி வீசி ஓவியம் முழுவதும், வலதுபுற மேல்பகுதியும் வெளிச்சம் பெறுகிறது. உணவறையில் உண்மையிலேயே அத்தகையதொரு சாளரம் இருந்தது.
 
* ஒரு சுவரில் வரையப்பட்ட ஓவியமாயினும் அது முப்பரிமாணம் கொண்ட வீட்டு அறைபோலப் பார்வையளிக்கிறது.
வரிசை 150:
* இயேசுவைச் சூழ்ந்து திருத்தூதர்கள் பன்னிருவரும் மூன்று பேர் மூன்று பேராக நான்கு குழுவாக உள்ளனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு உடல்நிலை கொண்டிருந்தாலும், மொத்தத்தில் சமனாகச் சீரமைத்த விதத்தில் பன்னிருவரும் தோற்றமளிக்கினறனர்.
 
* நடுவிலிருக்கும் இயேசுவிடமிருந்து புறப்படுகின்ற அலை போலஅலைபோல இருபுறமும் சீடர் குழுக்கள் உள்ளன. அவர் கூறிய சொற்களும் அலைபோலஅலைபோலச் சீடர்களைச் சென்றடைந்து அவர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உணர்ச்சிகளை எழுப்புகின்றன.
 
* இயேசுவின் அருகிலிருப்போருடைய உணர்ச்சி வெளிப்பாடு தீவிரமாகவும், சற்றே அகன்றிருப்போரின் உணர்ச்சி வெளிப்பாடு
வரிசை 180:
* லியொனார்டோ தருகின்ற குறிப்புகளையும் நம் கண்களுக்கும் உள்ளத்திற்கும் தோன்றுகின்றவற்றையும் கருத்தில் கொண்டு இந்த ஓவியத்தை நாம் உள்வாங்கினால் அங்கே அச்சம், ஆச்சரியம், கோபம், நம்பவியலாத் தன்மை, மறுப்பு, ஐயம் போன்ற பல உணர்வுகள் வெளிப்படுவதைக் கண்டுகொள்ளலாம்.
 
* [[பேதுரு (திருத்தூதர்)|சீமோன் பேதுருவின்]] வலது கையில் கத்தி இருக்கிறது. இது மறுமலர்ச்சிக் கால ஓவியங்களில் வழக்கமாக உள்ள சித்தரிப்புத் தான். அவர் [[இயேசு]]வை ஒருவர் காட்டிக்கொடுக்கப் போகிறார் என்பதை இயேசுவின் வாயிலிருந்து கேட்டதும், ஆத்திரத்தை அடக்கிக்கொள்ள முடியாமல், அருகிலிருக்கின்ற யோவானின் தோளைத் தம் இடதுகையால் பிடித்து அசைத்து, "யாரைப் பற்றிக் கூறுகிறார் எனக்கூறுகிறாரெனக் கேள்" ([[யோவான் நற்செய்தி|யோவான் 13:24]]) என்று சொல்கிறார்.
 
* "இயேசுவைக் காட்டிக் கொடுப்பவர் யார்" என்னும் கேள்வியைச் சீடர்கள் கேட்கின்றனர். தோமாவுக்கு இயேசு கேட்ட கேள்வியின் பொருள் என்னவென்று புரிந்துகொள்வதில் "ஐயம்" ஏற்படுகிறது. அவர் தம் கையைத் தூக்கி, சுட்டு விரலை உயர்த்தி, இயேசுவிடம் "விளக்கம்" கேட்பது போல் தோன்றுகிறார்.
வரிசை 186:
* பிலிப்பு இயேசுவின் சொற்களைக் கேட்டவுடன் இருக்கையிலிருந்து எழுந்து, இயேசுவைக் காட்டிக் கொடுப்பதன் விளைவு என்னவாகுமோ என்று "மலைத்துப்போய்" நிற்கிறார்.
 
* பர்த்தலமேயுவும் (ஓவியத்தின் இடது ஓரம்) எழுந்து நின்று, அந்திரேயாவை நோக்கிநோக்கிக் கேள்வி எழுப்புகிறார். அவரோ, தமக்கு ஒன்றுமே தெரியாது என்று கூறுவதுபோலகூறுவதுபோலக் கைகளை விரிக்கிறார்.
 
* திருத்தூதர்களில் சிலர் கேள்வி கேட்கின்றனர். மற்றும் சிலர் கோபம் கொண்டு, தாம் குற்றவாளிகள் அல்ல என்று கூறுகின்றனர்.
வரிசை 194:
* லியோனார்டோ யூதாசைச் சித்தரிப்பதில் சில தனிப் பண்புகள் உள்ளன. பெரும்பான்மையான மறுமலர்ச்சிக் கால ஓவியங்களில் யூதாசு ஒரு மூலையில் பணப்பையோடு இருப்பார். யூதாசுக்கு மட்டும் ஒளிவட்டம் இருக்காது. லியொனார்டோ அப்படிச் செய்யவில்லை. அவரது ஓவியத்தில் யூதாசு மற்ற திருத்தூதர்களுள் ஒருவராக, அவர்களோடு சேர்ந்தே இருக்கிறார். அவர் தம் சுதந்திரத்தைப் பயன்படுத்தி, தம் மனச்சாட்சிக்கு உண்மையுள்ளவராக நடக்க வேண்டும். அவர் சபிக்கப்பட்டவர் என்று முன் கூட்டியே விதி என்று ஒன்றும் இருக்கவில்லை என்னும் கருத்தை லியொனார்டோ ஓவியம் உணர்த்துகிறது.
 
* இயேசுவின் தனிப்பட்ட அன்புக்கு உகந்தவராய் இருந்தவர் யோவான். அவரை இளைஞராகச் சித்தரிப்பது வழக்கம். லியொனார்டோவும் அப்படியே செய்துள்ளார். யோவான் இயேசுவைப் போலவே அமைதியாக இருக்கின்றார். அவரது கண்கள் மூடியிருக்கின்றன. அவர் சீமோன் பேதுருவின் பக்கம் திரும்பி அவர் கூறுவதற்குச் செவிமடுக்கின்றார். இயேசு துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறக்கப் போகின்றார் என்பதை அறிந்தவர் போலஅறிந்தவர்போல அவரது முக பாவனை உள்ளது.
 
== ”த டா வின்சி கோட்” புதின சர்ச்சை ==
வரிசை 204:
டான் பிரவுன் எழுதிய புனைகதை லியொனார்டோ டா வின்சி வரைந்த இறுதி இராவுணவு ஓவியத்திற்குக் கற்பனை அடிப்படையில் விளக்கங்கள் தந்தது. அந்த விளக்கப்படி, லியொனார்டோ "சீயோன் மடம்" (''The Priory of Sion'') என்னும் ஐரோப்பிய இரகசிய குழுவின் உறுப்பினராக இருந்தார். அவர் வரைந்த ஓவியத்தில் இயேசுவின் வலப்புறம் அமர்ந்திருப்பவர் திருத்தூதர் யோவான் அல்ல, மாறாக, மகதலா மரியாதான் அவர். இயேசு மகதலா மரியாவை மணம் செய்திருந்தார். அவர் வழியாக ஒரு பெண்குழந்தைக்கும் தந்தை ஆனார். இயேசுவின் வாரிசைத் தாங்கிய மகதலா மரியாதான் "திருக் கிண்ணம்" (''Holy Grail''). லியொனார்டோ வரைந்த இராவுணவு ஓவியத்தில் "கிண்ணம்" இல்லை; ஆனால் "திருக் கிண்ணமாகிய" மகதலா மரியா இருந்தார்.
 
டான் பிரவுன் மேற்கூறிய கற்பனை ஊகத்தின் அடிப்படையில் விறுவிறுப்பானதொரு மர்ம-துப்பறியும் புனைகதை (mystery-detective novel) எழுதினார். அந்தப் புனைகதை நூலில் லியொனார்டோவின் ஓவியம் பற்றியஓவியம்பற்றிய டான் பிரவுன் கற்பனை விளக்கங்கள் குறிப்பாக 55, 56, 58 அதிகாரங்களில் உள்ளன.
 
=== புனைகதை விளக்கத்திற்கு மறுப்பு ===
வரிசை 214:
மேற்கூறிய சமயம் தொடர்பான மறுப்பைத் தவிர, கலை வரலாற்றாசிரியர்கள், இலக்கிய ஆய்வாளர்கள் போன்றோரும் டான் பிரவுன் லியொனார்டோ டா வின்சியின் ஓவியத்துக்கு அளித்த விளக்கம் தவறானது என்று நிறுவியுள்ளனர். இந்த மறுப்புப் பற்றிய விவரங்கள் இதோ:
 
* டான் பிரவுன் 2003இல் "த டா வின்சி கோட்" என்னும் புனைகதையை எழுதுவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் "த டெம்ப்ளார் ரெவலேஷன்" (''The Templar Revelation'') என்னும் புத்தகத்தை லின் பிக்னெட், க்ளைவ் ப்ரின்ஸ் என்போர் வெளியிட்டிருந்தனர்<ref>[http://en.wikipedia.org/wiki/The_Templar_Revelation த டெம்ப்ளார் ரெவலேஷன்]</ref>. டான் பிரவுன் அப்புத்தகத்திலிருந்து பல தகவல்களை அப்படியே எடுத்து (குறிப்பாக, லியொனார்டோ ஓவியத்தில் மகதலா மரியா இயேசுவின் அருகில் அமர்ந்திருப்பது, அவர்கள் இருவருக்கும் உள்ள உறவு போன்ற ஊகங்கள்), அவற்றைத் தமது நாவலின் கதைக்கு அடித்தளமாகக் கொண்டார். அந்நூலிலுள்ளஅந்நூலில் உள்ள ஓர் அதிகாரத்தின் தலைப்பிலிருந்து டான் பிரவுன் தம் நாவலுக்கான தலைப்பைத் தேர்ந்துகொண்டதாகவும் தெரிகிறது.
 
* டான் பரவுன் மேற்கூறிய நூலிலிருந்து தகவல்கள் பெற்றார் என்பதற்கு இன்னொரு காரணம் அவர் அந்நூலில் இருந்த தவறான சில வரலாற்றுத் தகவல்களை அப்படியே தமது நூலிலும் உண்மைத் தகவல் போலத்தகவல்போலத் தருகிறார். எடுத்துக்காட்டாக, பாரிசில் உள்ள புனித சுல்ப்பீஸ் கோவில் பற்றியகோவில்பற்றிய தகவல்கள் தவறாகத் தரப்படுவதைக் குறிப்பிடலாம்.<ref>[http://en.wikipedia.org/wiki/%C3%89glise_Saint-Sulpice,_Paris புனித சுல்ப்பீஸ் பற்றிய தவறான தகவல்கள்]</ref>"சீயோன் மடம்" என்னும் நிறுவனம் கற்பனையே என்றும் அதற்கும் சுல்ப்பீஸ் கோவிலுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது என்றும் ஒரு அறிவிப்புப் பலகை அக்கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. டான் பரவுனின் புனைகதையை வாசித்த பலர் அதில் வரும் தகவல்களை உண்மை எனஉண்மையென நம்பி, பாரிசில் போய் அது தொடர்பான இடங்களைத் தேடியதைத் தொடர்ந்து மேற்கூறிய அறிவிப்புப் பலகை வைக்கவேண்டியதாயிற்று.
 
* கலை வரலாற்றாசிரியர்களுள் மிகப் பெரும்பான்மையோர் கூறுவது: இறுதி இராவுணவு ஓவியங்களில் நற்செய்தி நூல்களைப் பின்பற்றி, இயேசுவும் அவருடைய பன்னிரு சீடர்களும் உணவருந்துவதாகச் சித்தரிப்பதே மரபு. லியொனார்டோவின் ஓவியத்தில் இயேசு உட்பட பதின்மூன்று பேர் மட்டுமே உள்ளனர். ஆகவே, பன்னிரு சீடரும் இயேசுவோடு இருந்தால் மகதலா மரியா அங்கே இருந்திருக்க முடியாது. டான் பிரவுன் (த டெம்ப்ளார் ரெவலேஷன் நூலிலிருந்து எடுத்த தகவல்படி) கூறுவது உண்மையானால் பன்னிரு சீடர்களுள் ஒருவர் இராவுணவின்போது இயேசுவோடு இருக்கவில்லை என்றாகும். ஆனால் இது நற்செய்தி நூல்களுக்கும் கிறித்தவ மரபுக்கும் மாறுபட்ட செய்தியாகும். எனவே, டான் பிரவுனின் கருத்து ஏற்கப்பட முடியாதது.
வரிசை 228:
* லியொனார்டோ இராவுணவு ஓவியத்தை வரைந்த அதே காலத்தில் கஸ்தாஞ்ஞோ (''Castagno''), தொமேனிக்கோ கிர்லாண்டாயோ (''Domenico Ghirlandaio'') போன்ற ஓவியர்களும் இராவுணவுக் காட்சியை வரைந்தனர் (ஆண்டு: 1447; 1480). அவர்களும் வேறு எத்தனையோ ஓவியர்களும் இயேசுவின் வலப்புறத்தில் யோவான் திருத்தூதரை அமர்த்தியிருக்கின்றனர். யோவான் இளைஞராக, பெண்தோற்றம் கொண்டவராக, நீண்ட முடியுடையவராகக் காட்டப்படுகிறார்.<ref>{{cite web|author=Anwender |url=http://home.arcor.de/berzelmayr/st-john.html |title=St. John at the Last Supper |publisher=Home.arcor.de |date=2006-04-14 |accessdate=2011-10-19}}</ref> யோவான் மற்றெல்லாத் திருத்தூதர்களை விடவும் வயதில் இளையவர்; இயேசுவுக்கு இறுதிவரை விசுவாசம்.உடையவராக இருந்து, சிலுவை அடியில் நின்றவர்; "இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்பு பக்கமாய்ச் சாய்ந்துகொண்டு, 'ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்?' என்று கேட்டவர்" (யோவான் 21:20) என்னும் தகவலை யோவான் நற்செய்தி மிகத் தெளிவாகவே தருகிறது.
 
=== டான் பிரவுன் தரும் விளக்கம் பற்றியவிளக்கம்பற்றிய விமர்சனம் ===
[[படிமம்:Leonardo da Vinci 005.jpg|thumb|இறுதி இராவுணவு ஓவியம். பகுதிப் பார்வை: பேதுரு, யூதாசு, யோவான்]]
லியொனார்டோ ஓவியத்திற்கு டான் பிரவுன் எழுதிய "த டா வின்சி கோட்" என்னும் புனைகதை தருகின்ற விளக்கம் கற்பனையே தவிர, அதற்கு வரலாற்று ஆதாரம் இல்லை என்பது கலை வரலாற்றாசிரியர்களின் முடிவு.<ref>[http://www.historyversusthedavincicode.com/index.html கலை வரலாற்றாசிரியர் தரும் சான்று பற்றிய இணையத்தளம்]</ref>