"திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

59 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
(change category)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
==புத்தமதம்==
இப்பகுதியில் [[புத்தமதம்]] சிறப்பாக ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்தது என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
இத்திருக்கோயில் வளாகத்தில் உள்ள புத்தர் சிலை கோயிலுக்கு வரும் சிவபக்தர்களால் இன்றளவும் வழிபடப்படுகிறது.<ref>http://www.dinamani.com/tamilnadu/article1227058.ece</ref> இந்த புத்தர் சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. தமிழகத்தில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலைகளே அதிகமாக உள்ளன. நின்ற நிலையிலான புத்தர் சிலைகள் மிகக்குறைந்த அளவில் உள்ளன. புன்னகை தவழும் முகம், புன்னகை சிந்தும் உதடுகள், சற்றே மூடிய நிலையிலான கண்கள், நீண்டு வளர்ந்த காதுகள் போன்ற கூறுகளுடன் மேலாடையுடன் இச்சிலை உள்ளது. இவ்வாறே [[திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயிலில்|திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயிலில்கோயில்]] பல ஆண்டுகளுக்கு முன்பு வரை நின்ற நிலையிலான புத்தர் சிலை ஒன்று இருந்துள்ளது. தற்போது அச்சிலை [[அரசு அருங்காட்சியகம், சென்னை|சென்னை அரசு அருங்காட்சியகத்தில்]] காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1712225" இருந்து மீள்விக்கப்பட்டது