வேதியியற் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: de:Chemische Bindung is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Electron dot-tamil.svg|thumb|வேதியியற் பிணைப்பு]]
 
[[அணு]]க்கள், [[மூலக்கூறு]]கள் என்பவற்றுக்கு இடையிலான ஈர்ப்பினால் உண்டாகும் தொடர்புகளுக்குக் காரணமான இயற்பியற் செயற்பாடே '''வேதியியற் பிணைப்பு''' எனப்படுகின்றது.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் பல விசைகளால் பிணைந்து வேதிப்பொருட்கள் உருவாகின்றன. அணுக்களுக்கு இடையிலான இத்தகைய ஈர்ப்பு விசையே வேதியியற் பிணைப்பு என்று அழைக்கப்படுகிறது. எதிர்மின் மற்றும் நேர்மின் சுமை அயனிகளுக்கிடையே நிகழும் நிலைமின் ஈர்ப்பு விசையின் காரணமாக அல்லது இரு முனை ஈர்ப்பு விசை காரணமாக இத்தகைய பிணைப்பு உருவாகிறது.அணுக்களுக்கிடையே நிகழும் வேதிப் பிணைப்புகளின் வலிமை, வலுவான அயனிப் பிணைப்பு , பலவீனமான இருமுனை ஈர்ப்பு விசைகள் அதாவது இலண்டன் விலக்கு விசைகள், மற்றும் ஐதரசன் பிணைப்புகள் என கணிசமாக மாறுபடுகிறது.

இது, ஈரணு அல்லது பல்லணு [[வேதியியற் சேர்மம்|வேதியியற் சேர்மங்களுக்கு]] (இலங்கை: இரசாயனச் சேர்வை), உறுதிப்பாட்டை வழங்குகிறது. சக்திச்சொட்டு மின்னியங்கியல் (quantum electrodynamics) விதிகளால் கையாளப்படும் இத்தகைய ஈர்ப்பு விசை தொடர்பான விளக்கங்கள் சிக்கலானவை. நடைமுறையில், வேதியியலாளர்கள், குறைவான சிக்கல்தன்மை கொண்ட [[சக்திச்சொட்டுக் கோட்பாடு]] அல்லது பண்பியல் விளக்கங்களின் மூலம் இதனைப் புரியவைக்க முற்படுகிறார்கள். பொதுவாகப் பிணைப்பில் சம்பந்தப்பட்டுள்ள அணுக்களுக்கிடையே [[இலத்திரன்]]கள் மாற்றப்படுவதன் மூலம் அல்லது பங்கு கொள்ளப்படுவதன் மூலமாகவே வலுவான வேதியியற் பிணைப்புக்கள் ஏற்படுகின்றன. மூலக்கூறுகள், [[பளிங்கு]]கள், ஈரணு [[வளிமம்|வளிமங்கள்]] போன்ற, சூழலில் காணப்படும் பெரும்பாலானவை வேதியியற் பிணைப்புக்களையே கொண்டுள்ளன.
 
பிணைப்புக்களின் வலுக்கள் பரந்த அளவில் வேறுபடுகின்றன. பொதுவாக covalent மற்றும் [[அயன் பிணைப்பு]]க்கள் வலுவானவை. [[ஐதரசன் பிணைப்பு]]க்களும், [[வாண்டெர்வால் பிணைப்பு]]க்களும் வலுக் குறைந்தவை. எனினும், வலுக் குறைந்தவற்றுள் கூடிய வலுக் கொண்ட பிணைப்புக்கள், வலுக் கூடியவற்றுள் குறைந்த வலுவுள்ள பிணைப்புக்களிலும் கூடிய வலுவுள்ளவையாக அமையக் கூடும் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/வேதியியற்_பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது