உல்லாசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
 
'''உல்லாசம்''' 1997ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக [[அஜித் குமார்|அஜித் குமாரும்]], கதாநாயகியாக [[மகேஷ்வரி|மகேஷ்வரியும்]] நடித்துள்ளனர். [[அமிதா பச்சன் கார்ப்பரேசன் லிமிடெட்|அ.ப.க.லி நிறுவனம்]] தயாரித்த இந்தத் திரைபடத்திற்கு [[கார்த்திக் ராஜா]] இசையமைத்துள்ளார். படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் [[விக்ரம்]] மற்றும் [[ரகுவரன்]] நடித்துள்ளனர்.
 
==கதைச்சுருக்கம்==
ரகுவரனின் மகன் விக்ரம், எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் அஜித் இவர்கள் நால்வருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டமே இத்திரைப்படத்தின் கதையாகும். எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மகனான அஜித், அவர்களது எதிர்வீட்டில் இருக்கும் உள்ளூர் ''தாதாவான'' ரகுவரன் மேலும் அவர் செய்யும் ரவுடித்தனங்களின் மேலும் ஈர்ப்பு ஏற்படுகிறது. அதனால் ரகுவரனுடன் இணைந்து அஜித்தும் ரவுடி செயல்களில் ஈடுபடுகிறார். அஜித்தின் தந்தையான எஸ். பி. பாலசுப்பிரமணியம் இதனை எவ்வளவோ கண்டித்தும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ரகுவரனின் மகனான விக்ரமோ அமைதியாக நல்வழியில் வாழ விரும்புகிறார். எனவே விக்ரமை தனது மகனாக நினைத்து தன்னுடன் வளர்க்கிறார். சிறப்பாக பாடல்களைப் பாடும் விக்ரமும் சிறப்பாக நடனம் ஆடுவதில் விருப்பம் உள்ளவரான அஜித்தும் ஒரே கல்லூரியில் பயில்கிறார்கள். அதே கல்லூரியில் பயிலும் மகேஷ்வரியை அவர்கள் இருவருமே விரும்புகிறார்கள். ஆனால் மகேஷ்வரியோ அஜித்தை விரும்புகிறார். இந்நிலையில் விக்ரமின் காதலைப் பற்றி அறிந்து கொள்ளும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் விக்ரமுக்காக காதலை விட்டுத் தருமாறு தனது மகன் அஜித்திடம் வேண்டுகிறார். அஜித்தும் தனது காதலை விக்ரமுக்காக தியாகம் செய்கிறார். இறுதியாக மகேஷ்வரிக்கு யாருடன் திருமணம் நடந்தது என்பதே இப்படத்தின் இறுதிக் காட்சியாகும்.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உல்லாசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது