ஆரண்ய காண்டம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
இந்த படம் 18 டிசம்பர் 2008-இல் ஆரம்பிக்கப்பட்டு, 2009-இல் நிறைவடைந்தது. தணிக்கையில் அனுமதி கிடைக்காததனால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் 52-காட்சிகள் வெட்டப்பட்டு<ref name="thehindu1"/> 10 ஜூன் 2011 இல் வெளியிடப்பட்டது<ref>{{cite news| url=http://www.indiaglitz.com/channels/tamil/article/67543.html | work=IndiaGlitz.Com | title=Friday Fiesta 100611 | date=27 December 2011}}</ref>. இந்த படம், சிற‌ந்த பட‌த்தொகு‌ப்பு‌க்கான தே‌சிய ‌விருதைப் பெ‌ற்று‌ள்ளது.
==கதை==
கதை சிங்கம் பெருமாள் என்ற தாதா சுப்பு என்ற பெண்ணை கட்டாயப்படுத்துவதோடு தொடங்குகிறது. சிங்கம் பெருமாள் ஒரு வயதான தாதா. அவரிடம் பசுபதி , மற்றும் சில ரவுடிகள் வேலை பார்க்கிறார்கள். அவர் தன் வீட்டிலேயே சுப்பு என்ற பெண்ணை கட்டாயப்படுத்தி வைத்திருக்கிறார். கஜேந்திரன் என்னும் தாதாவிற்க்கு வரும் பொருளை வாங்குமாறு பசுபதி சிங்கம்பெருமாளிடம் சொல்கிறான். அதன் வாக்குவாத முடிவில் ஐம்பது லட்ஷம் கொடுத்து பொருளை வாஙக பசுபதிக்கு சம்மதம் தெரிவிக்கிரான். பசுபதியையும் கூடே சிலரையும் அனுப்பி வைத்து விட்டு தன்னிடம் வேலை பார்க்கும் சப்பை என்பவனிடம் சுப்புவை வெளியே அழைத்து செல்ல சொல்கிறான் சிங்கம் பெருமாள். இதற்க்கிடையில் பொருளை கொண்டு வந்திருக்கும் குருவி பாவா லாட்ஜ் என்னுமிடத்தில் தங்கி இருக்கிறான். அவனது அறையில் கொடுக்காபுளி என்ற சிறுவனும் அவனது அப்பாவும் தங்கியிருக்கிரறார்கள். சேவற்சண்டையில் ஜெயித்து கடனை அடைப்பதற்க்காக நகரம் வன்திருப்பதாக அவர்கள் சொல்லுகிறார்கள். பின் சேவற்சண்டையில் கலந்து கொள்கிறார்கள். அங்கே வரும் சிங்கம் பெருமாளின் சேவல் காளையனின் சேவலிடம் தோற்று விடுகிறது. அந்த கோவத்தில் சிங்கம்பெருமாள் காளையனின் சேவலை வெட்டி விடுகிறான். வேறு வழி இல்லாமல் காளையனும் கொடுக்காப்புளியும் திரும்பி பாவா லாட்ஜ் வருகிறார்கள். அதே வேளையில் இன்னொரு பக்கம் பசுபதியும் மற்ற அடியாட்களும் பாவா லாட்ஜிற்க்கு வரும் வழியில் சிங்கம் பெருமாள் ஒரு அடியாளிற்க்கு போன் செய்து பசுபதியை கொன்று விடுமாறு கூறுகிறான். அது ஸ்பீக்கரில் கேட்டு விடுவதால் ஒருவருக்கொருவர் சுதாரித்துக்கொள்கிறார்கள். அதற்க்குள் போலீஸ் வர போலீஸை வேண்டுமென்றே எதிர்த்து பேசி அடியாட்களிடம் இருந்து தப்பிக்கிறான் பசுபதி. போலீஸ் அழைத்து செல்லும்முன் ஒரு அடியாள் வந்து நாங்கள் சென்று உன் மனைவி கஸ்தூரியை அழைத்து செல்லுகிறோம் என்று கூரும்போது தான் பசுபதி தன் தவறை உனர்கிறான். பாவா லாட்ஜிற்க்கு திரும்பி வரும் காளையனும் கொடுக்காப்புளியும் குருவி இறந்து கிடப்பதை பாற்க்கிறார்கள். பிறகு பொருளை எடுத்துக்கொண்டு ஓடி விடுகிறார்கள். அதற்க்குள் பொருளை தேடி வரும் கஜேந்திரனின் ஆட்கள் காளையனை துரத்துகிறார்கள். காளையனும் கொடுக்காப்புளியும் தப்பித்து விடுகிறார்கள். போலீஸிடம் இருந்து தப்பிக்கும் பசுபதி நேராக வீட்டிற்க்கு வருகிறான். அங்கே கஸ்தூரியை காணவில்லை. அடியாட்கள் ஏற்கனவே வந்து கஸ்தூரியை அழைத்து சென்று விடுகிறார்கள். கஸ்தூரியை காரிலேயே வைத்திருக்குமாரும், அவளை ஒன்றும் செய்யகூடாது என்றும் சிங்கம்பெருமாள் போனில் அடியாட்களிடம் சொல்லுகிறான். வீட்டில் யாரையும் காணாது பசுபதி தவித்துக்கொண்டு இருக்கும் வேளையில் கஜேந்திரனின் அடியால் முள்ளு என்பவன் பசுபதியின் தலையில் துப்பாக்கி வைத்து பொருள் எங்கே என்று கேட்கிறான். பிறகு பசுபதியை அவர்கள் துரத்துகிறார்கள். அந்த துரத்தலில் தான் புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் வருவது போல் பசுபதிக்கு ஞானம் வருகிறது. "எதிரிக்கு எதிரி நண்பன் தான், ஆனால் இதில் நாம் கவனிக்காமல் விட்டது அந்த இருவரும் இப்போதும் எதிரிகள் தான்" இதுவே பசுபதி இடும் திட்டத்தின் சாராம்சம். ஒரு குப்பை மேட்டின் இடையில் வைத்து முள்ளுவை துப்பாக்கி முனையில் வைத்து தப்பிக்கிறான் பசுபதி. காளையனும் கொடுக்காபுளியும் தங்கள் கையிலிருக்கும் சீட்டில் இருக்கும் போன் நம்பருக்கு போன் செய்கிறார்கள். அது சிங்கம் பெருமாளுக்கு போகிறது. சிங்கம் பெருமாளின் ஆட்கள் வந்து காளையனை தூக்கிகொண்டு போய்விடுகிறார்கள். கொடுக்காப்புளி தப்பித்து விடுகிறான். கொடுக்காப்புளியிடம் தான் இப்போது சரக்கு இருக்கிறது. இதற்க்கெல்லாம் இடையில் வேறொரு பக்கம் சப்பை சுப்புவுக்கும் இடையில் உடலுறவு நடக்கிறது. அதன்பின் இருவரும் ஊர் சுற்ற கிளம்பி விடுகிறார்கள். அங்கு வைத்து இருவரும் சிங்கம் பெருமாளிடம் இருந்து தப்பித்து விட திட்டமிடுகிறார்கள். இருவரும் வீடு திரும்பும்போது அங்கே காளையனை சித்திரவதை செய்து கொண்டு இருக்கிரார்கள் அதை கண்டு இருவரும் பயந்து விடுகிறார்கள். இருப்பினும் தப்பித்து போவதில் சப்பை உறுதியாக இருக்கிறான். தன் தந்தையை காணாமல் அழுது கொண்டு இருக்கும் கொடுக்கப்புளி தன்னிடம் உள்ள சீட்டிலிருக்கும் இரண்டாம் எண்ணிற்க்கு அழைக்கிறான். அதை பசுபதி எடுக்கிறான். பொருள் கொடுக்காப்புளியிடம் இருப்பதை அறிந்து கொண்டு அவனை தன்னிடம் வர சொல்கிறான். சரக்கு தன்னிடம் வந்ததும் தனக்கு தெரிந்த ஒரு போலீஸ் மூலமாக முள்ளுவை தன்னிடம் அழைக்க்கிறான். ஆனால் தன்னிடம் வரும் முள்ளுவிடம் எதையும் கூறாமல் திருப்பி அனுப்பி வைத்து விடுகிறான். அதை அறிந்து கொள்ளும் கஜேந்திரன் தன்னை சுற்றி ஏதோ சதி நடப்பதாக உணர்கிறான். அந்த கோபத்தில் முள்ளுவை கொன்ரும் விடுகிறான். அதற்க்குள் பசுபதி கஜேந்திரனையும் சிங்கம்பெருமாளின் ஆட்களையும் ஒரே இடத்திற்க்கு வர சொல்கிறான். அங்கே கூடும் கஜேந்திரனின் கண் முன்னே அவன் தம்பி கஜபதியை கொல்கிறான் பசுபதி. உடனே துரத்தல் தொடஙுகிறது. வேறொறு பக்கத்தில் நிற்க்கும் சிங்கம்பெருமாளின் ஆட்களிடம் அவர்களை அழைத்து செல்கிறான். தங்களை நோக்கி வரும் பசுபதியையும் கஜேந்திரனையும் அவன் ஆட்களையும் பார்க்கும் சிங்கம் பெருமாளின் ஆட்கள் குழம்புகிறார்கள். கஜேந்திரனும் ஆட்களும் எதிரில் சிங்கம்பெருமாளின் ஆட்களை பார்த்து இது சிங்கம் பெருமாளின் திட்டம் என்று தவறாக நினைக்கிறார்கள். எதையும் தெளிவாக யோசிக்கும் நேரத்திற்க்குள் சண்டை ஆரம்பமாகிறது. சண்டையின் முடிவில் பசுபதி தவிற மற்ற் அனைவரும் மரணமடைகிறார்கள். சிங்கம் பெருமாளின் வீட்டில் சித்திரவதையை முடித்து விட்டு படுக்கையறைக்கு வருகிறான் சிங்கம் பெருமாள். அங்கே சப்பையையும் சுப்புவையும் பார்த்து விட்டு குளிக்க செல்கிறான். குளிப்பதற்க்குள் பீரோவில் இருந்து ஐம்பது லஷம் பணத்தை எடுத்து சப்பையிடம் கொடுத்து அதை அருகிலிருக்கும் கடையில் கொடுக்க சொல்கிறாள் சுப்பு, கூடவே ஒரு துப்பாக்கியையும் கொடுக்கிறாள். குளித்து விட்டு வரும் சிங்கம் பெருமாள் பணத்தை காணாமல் கோபமடைகிறான். அங்கே நடக்கும் சண்டையில் சப்பை சிங்கம் பெருமாளை கொன்று விடுகிறான். தொடர்ச்சியாக சப்பையை கொன்று விடுகிறாள் சுப்பு. அதற்க்குள் அங்கே வரும் பசுபதி சுப்புவை கண்டு சிங்கம் பெருமாள் சப்பையை சுட்டதாகவும் அதற்க்காக சுப்பு சிங்கம் பெருமாளை சுட்டதாகவும் நினைத்து சுப்புவை அங்கிருந்து போய்விடுமாறு கூறுகிறான். பிறகு கஸ்தூரியை வைத்திருக்கும் அடியாட்களை போன் செய்து சிங்கம் பெருமாள், கஜேந்திரன், கஜபதி எல்லோரையும் கொன்று விட்டதாகவும், இனிமேல் எல்லாம் நான் தான் என்றும் சொல்கிறான். சிறிது நேரத்தில் கஸ்தூரியை அழைத்துக்கொண்டு அவர்கள் வருகிறார்கள். அடிபட்டு கிடக்கும் காளையனை மருத்துவ மனைக்கு அழைத்து செல்லுமாறு கூறி விட்டு கொடுக்காப்புளிக்கு பணம் கொடுக்கிறான் பசுபதி. ஆனால் அந்த் ஐம்பது லஷம் எங்கே போனதென்று யாருக்கும் தெரிய வில்லை. சுப்பு அருகிலிருக்கும் கடைக்கு சென்று பணத்தை எடுத்துக்கொண்டு தப்பித்து செல்லுவதோடு படம் முடிவடைகிறது. மொத்த கதையும் நான் லீனியர் முறையில் எழுதப்பட்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆரண்ய_காண்டம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது