பயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்
31,699
தொகுப்புகள்
அயனியாக்கும் ஆற்றலானது [[அயனி|அயனியின்]] உருவளவு அதிகரிப்பதைப் பொருத்து குறைகிறது. அணுவின் உருவளவு அதிகமாக உள்ளபோது அயனியாக்கும் ஆற்றல் குறைவாக இருக்கும். சிறிய அணுக்களில் எலக்ட்ரான்கள் மிக நெருங்கியும், பெரிய அணுக்களில் எலக்ட்ரான்கள் இடைவெளியுடன் அமைந்திருப்பதே இதற்குக் காரணமாகும். இடைவெளியுடன் விரவியிருக்கும் எலக்ட்ரான்களை நீக்குவதற்கு குறைந்த அளவு ஆற்றலே தேவைப்படுகிறது. இதன் காரணமாகவே பெரிய அணுக்கள் குறைந்த அயனியாக்கும் ஆற்றலையும் சிறிய அணுக்கள் அதிக அயனியாக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளன.
[[பெரிலியம் | பெரிலியத்தின்]] அயனியாக்கும் ஆற்றல் [[லித்தியம் | லித்தியத்தின்]] அயனியாக்கும் ஆற்றலை விட அதிகமாகும். பெரிலியத்தின் அணுக்கரு அளவு 112 pm.மற்றும் லித்தியத்தின் அணுக்கரு அளவு 152 pm ஆகும். தனிம வரிசை அட்டவணையில் தனிமங்களின் அணு எண் அதிகரிக்க அதிகரிக்க அணுக்கருவின் அளவு குறைகிறது. பெரிலியத்தின் அணுஎண் 4. லித்தியத்தின் அணு எண் 3. இதனால் பெரிலியத்தின் அணுக்கருவின் மின்சுமை லித்தியத்தின் அணுக்கருவின் மின்சுமையைவிட அதிகமாக இருக்கும். அணுக்கருவின் மின்சுமை அதிகமாக இருந்தால் அணுக்கரு மற்றும் வெளிக்கூட்டு எலக்ட்ரான் ஆகியவற்றிற்கு இடையேயான ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும். எனவே பெரிலியத்தின் அயனியாக்கும் ஆற்றல் லித்தியத்தின் அயனியாக்கும் ஆற்றலைவிட அதிகமாக இருக்கும்.
|