தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Refimprove|date=சூலை 2014}}
'''தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை''' என்பது [[கணினி]] சார் தேவைகளுக்கு [[தமிழ்]] எழுத்துக்களை பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட, எட்டு பிட் அடிப்படையில் அமைந்த ஆங்கிலம்-தமிழ் என இரு மொழிகளை கையாளத்தக்க ஒரு [[எழுத்து குறிமுறை]] நியமமாகும். இக்குறிமுறையின் பெயர் ஆங்கிலத்தில் சுருக்கமாக '''TSCII''' (Tamil Standard Code for Information Interchange) என்றவாறு குறிப்பிடப்படுகிறது. தமிழில் ''திசுகி'' எனவும் ''தகுதரம்'' ('''த'''மிழ் '''கு'''றியீட்டுறியீட்டுத் '''தரம்''') எனவும் வழங்கப்படும் இதுவே முதன்முதல் தமிழில் உலகம் தழுவிய திறந்த இணைய உரையாடல் மூலம் தரப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட குறிமுறை நியமமாகும்.
 
[[ASCII]] குறிமுறையில் அமைந்த ஆங்கில எழுத்துக்களின் மேலாக, [[எழுத்துரு]] ஒன்றினை பயன்படுத்தி தமிழ் எழுத்துக்களை கணினியில் பயன்படுத்திவந்த காலத்தில், தமிழ் - ஆங்கிலம் என இரு மொழிகளையும் பயன்படுத்தி ஆவணமொன்றினை தொகுப்பது மிகக் கடினமான வேலையாக இருந்தது. [[தமிழ் எழுத்து குறிமுறை]] வரலாற்றில், இவ்வாறான சிக்கல்மிக்க ''ஒருமொழி'' ASCII குறிமுறையின் போதாமையை களைந்து உருவாகிய அடுத்தக்கட்ட படிமுறை வளர்ச்சியே ''தகுதரம்''. ASCII குறிமுறை அட்டவணையில் ஆங்கில எழுத்துக்கள், இன்றியமையாக் குறியீடுகள் தவிர்ந்த ஏனைய இட ஒருக்கீடுகளில் தமிழ் எழுத்துக்களை பிரதியீடு செய்தலே ''தகுதரம்'' குறிமுறையின் அடிப்படையாகும். தொடக்கத்தில் ஆங்கில எழுத்துக்களுக்கான ஒதுக்கீட்டிலேயே தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்த முறைமையைக் காட்டிலும் இது முன்னேற்றகரமானதாகவும், இருமொழி கையாட்சிக்கு எளிமையானதாகவும் இருந்தது.