ஜானகி ஆதி நாகப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
வரிசை 55:
 
===இந்திய நாட்டுப் பற்று===
சுபாஷ் சந்திரபோஸ் மலாயாவிற்கு வந்து பேருரைகள் ஆற்றிய போதுஆற்றியபோது தமிழர்கள் தங்கள் வீடுகளில் இருந்த நகைகளை எல்லாம் எடுத்துக் கொடுத்தனர். நகையும் தமிழரும் பிரிக்க முடியாதவையாக இருந்த கால கட்டத்தில், இருந்ததை எல்லாம் மலாயாத் தமிழர்கள் சுபாஸ் சந்திரபோசிடம் அள்ளிக் கொடுத்தனர். அப்போது மலாயாத் தமிழர்களுக்கு இந்திய நாட்டுப் பற்று மட்டுமே முதன்மையானதாக விளங்கியது.
 
1946 ஆகஸ்ட் மாதம் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது அது இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், இந்திய தேசிய இராணுவத்திற்காகவும், சிறைக்குச் சென்றவர்களை மீட்பதற்காகவும் தொடங்கி வைத்த கட்சியாகவே இருந்தது. மலேசிய இந்தியர்களை வழிநடத்த ஓர் அரசியல் அமைப்புத் தேவை என்று அப்போதைய சுதந்திரப் போராளிகள் முடிவு எடுத்தனர்.
 
===இந்திய தேசிய இராணுவத்தில் சேவை===
இந்தியத் தேசிய இராணுவத்தில் சேர்ந்து சேவையாற்றுவது என்றும் முடிவு செய்தார். அவருடைய குடும்பத்தில் இருந்துகுடும்பத்திலிருந்து பலமான எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, ஜானகி ஆதி நாகப்பனின் தந்தையாருக்கு இது பிடிக்கவில்லை. ஜானகி ஆதி நாகப்பன் பிடிவாதமாக இருந்து இறுதியில் பெற்றோர்களின் சம்மதத்தைப் பெற்றார்.
 
மலாயாவில் [[சப்பான்|சப்பானியர்]]கள் ஆட்சி செய்த போதுசெய்தபோது, இந்தியாவைப் பிரித்தானியர்கள் ஆட்சியிலிருந்து விடுவிக்க இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்பட்டது. இந்திய தேசிய இராணுவத்தில் முதன்முதலில் சேர்ந்த மலாயாப் பெண்களில் ஜானகி ஆதி நாகப்பனும் ஒருவராவார். அவர் வசதியான குடும்பத்தில் பிறந்து சொகுசான வாழ்க்கை வாழ்ந்தவர். முதல் நாள் படையிற் கொடுக்கப்பட்ட உணவைப் பார்த்து ஜானகி ஆதி நாகப்பன் அழுததாகவும் சொல்லப்படுகின்றது. ஜானகி ஆதி நாகப்பனாற் போர்ப்படையின் கடுமையான விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும், நெறி முறைகளுக்கும் ஈடு கொடுக்க முடியவில்லை. தொடக்க காலத்தில் மிகவும் அவதியுற்றார்.
 
காலப் போக்கில் இராணுவ வாழ்க்கை அவருக்குஅவருக்குப் பழகிப்போனது. படை அதிகாரிகளுக்கான தேர்வில் ஜானகி ஆதி நாகப்பன் முதல் நிலையில் தேர்ச்சிப் பெற்றார். பின்னர், இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சி ராணிப் படையில் துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். பின்னாளில் அவர் ஜான்சி ராணிப் படையைப் பற்றி ஒரு நூலையும் எழுதியுள்ளார்<ref>[http://fi-sha.blogspot.com/2010/09/one-courageous-woman-puan-sri-janaky.html One Courageous Woman - Puan Sri Janaky Davar Athi Nahappan.]</ref>.
 
===பத்மஸ்ரீ விருது===
ஆயுதம் ஏந்திய ஜான்சி ராணிப் படைக்குத் துணைத் தளபதியாகப் பதவி ஏற்ற ஜானகி ஆதி நாகப்பன், பர்மா-இந்தியா போர் முனையிற் போரில் ஈடுபட்டார்.<ref>[http://thestar.com.my/metro/story.asp?file=/2009/8/28/central/4570188&sec=central A tribute for former soldiers.]</ref> காயம் அடைந்து பரிகாரமும் பெற்றுள்ளார்.<ref>[http://blog.limkitsiang.com/2008/02/10/tribute-to-athi-nahappan-and-janaki/ In 1945 while retreating by foot from Mandalay to Bangkok the INA including the Rhani regiment was heavily bombed by the American Air Force.]</ref>
 
இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அவரின் அரிய சேவைகளைப் பாராட்டி இந்திய அரசாங்கம் [[பத்மஸ்ரீ]] விருதை வழங்கிவழங்கிக் கௌரவித்து இருக்கிறது. 1997ஆம் ஆண்டு தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருந்தளிப்பில், இந்தியக் குடியரசுத் தலைவர் [[கே. ஆர். நாராயணன்]], ஜானகி ஆதி நாகப்பனுக்கு அந்த விருதை வழங்கிச் சிறப்பித்தார்.
 
இந்தியாவின் பத்மஸ்ரீ விருதைப் பெறும் முதல் மலேசியர் எனும் பெருமையும் இவரையே சாரும். [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்கு]]ப் பின்னர் ஜானகி ஆதி நாகப்பன் சமூக பொதுச் சேவைகளிற் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். 1946ஆம் ஆண்டு, மலேசிய இந்திய காங்கிரசின் முதற் தலைவர் [[ஜான் திவி|ஜான் திவியுடன்]] இணைந்து மலேசிய இந்திய காங்கிரஸ் எனும் ம.இ.காவை உருவாக்கினார்.
வரிசை 79:
 
===டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் இலக்கிய விருது===
டான்ஸ்ரீ ஆதி நாகப்பனின் அரசியல் ஈடுபாட்டிற்கும் பொதுப் பணிகளுக்கும் தொடக்க காலத்தில் இருந்துகாலத்திலிருந்து பேருதவியாக இருந்து வந்தார். 85 வயதைத் தாண்டிவிட்ட இவர் இப்போது கோலாலம்பூரில் அமைதியாக வாழ்ந்து வருகிறார்.
 
இவருடைய கணவரின் பெயரில் ஆண்டுதோறும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ‘டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் இலக்கிய விருது’ வழங்கப்பட்டு வருகிறது. மலேசியாவில் மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு அந்த விருது வழங்கப் படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஜானகி_ஆதி_நாகப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது