நீதிக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
சி LanguageTool: typo fix
வரிசை 115:
''இந்து நேசன்'' இதழ் ”இப்போது இந்தப் புதிய அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியமென்ன?” என்று வினவியது. ஹோம் ரூல் இயக்கத்தின் ''நியூ ஏஜ்'' இதழ், இப்புதிய அமைப்பை நிராகரித்ததுடன் அது விரைவில் அழிந்து விடும் என்றும் யூகித்தது. பெப்ரவரி 1917ல் சிபா கூட்டுப்பங்கு நிறுவனம் தலா 100 ரூபாய் மதிப்புள்ள 640 பங்குகளை விற்று முதலீடு திரட்டியது. இப்பணத்தைக் கொண்டு ஒரு அச்சுக் கூடத்தை வாங்கி , ''ஜஸ்டிஸ்'' இதழை வெளியிட முயன்றது. முதலில் சி. கருணாகர மேனன் இதழாசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவருடனான பேச்சுவார்த்தைகள் முறிந்து நாயரே அவ்விதழின் கௌரவ ஆசிரியரானார். பி. என். ராமன் பிள்ளையும், [[மு. சி. பூரணலிங்கம் பிள்ளை]]யும் துணை ஆசிரியர்களாகப் பணியாற்றினர். இதன் முதல் பதிப்பு பெப்ரவரி 26, 1917 இல் வெளியானது. ஜூன் 1917 இல் பக்தவத்சலம் பிள்ளையை ஆசிரியராகக் கொண்ட ''திராவிடன்'' என்ற தமிழ் இதழையும் வெளியிடத் தொடங்கியது. பின்னர் ஏ. சி. பார்த்தசாரதி நாயுடு ஆசிரியராக இருந்த ''ஆந்திர பிரகாசிக்கா'' என்ற நாளிதழையும் நீதிக்கட்சி வாங்கியது. ஆனால் 1919 ம் ஆண்டு நிதிப்பற்றாக்குறையினால் இவ்விரு நாளிதழ்களும் வார இதழ்களாக மாற்றப்பட்டன.<ref name ="rajaraman2"/>
 
ஆகஸ்ட் 19, 1917 இல் கோயம்புத்தூரில் பனகல் அரசர் தலைமையில் முதல் பிராமணரல்லாதோர் மாநாடு நடைபெற்றது. அடுத்த சில மாதங்களில் இது போலப்இதுபோலப் பல மாநாடுகள் கூட்டப்பட்டன. அக்டோபர் 18 இல் டி. எம். நாயரால் எழுதப்பட்ட கட்சிக் குறிக்கோள்கள் ''தி இந்து'' நாளிதழில் வெளியாகின:
 
<blockquote>1) தென்னிந்தியாவில் பிராமணரல்லாத அனைத்து சாதியினர்களையும் கல்வி, சமூகம், பொருளாதாரம், அரசியல், பொருள் மற்றும் அற ரீதியாக முன்னேற்றுவது. 2) [பிராமணரல்லாத அனைத்து சமூகத்தினரின் நலனைப் பாதுகாக்க] தென்னிந்திய மக்களின் கோரிக்கைகளையும் கருத்துகளையும் தக்க வகையில் உரிய காலத்தில் அரசின் முன் வைப்பது; பொதுக் கேள்விகளை விவாதிப்பது. 3) பொதுக் கருத்து தொடர்புடைய தாராண்மிய கொள்கைகளைக் கருத்தரங்குகள், அறிக்கைகள், ஆவணங்கள் மற்றும் பிற வழிகள் மூலமாகப் பரப்புவது.<ref name="rajaraman4"/></blockquote>
வரிசை 336:
 
===பல்கலைக்கழகங்கள்===
நீதிக்கட்சியின் தமிழ் மற்றும் தெலுங்கு உறுப்பினர்களிடையே நிலவிய போட்டி இரு பல்கலைக்கழகங்கள் உருவாகக் காரணமாக அமைந்தது. கட்சி துவக்கப்பட்ட நாட்களிலிருந்து நிலவிய இப்போட்டி முதல் நீதிக்கட்சி அரசில் தெலுங்கு உறுப்பினர்கள் மட்டும் அமைச்சர்களானதால் மேலும் அதிகமானது. [[ஆந்திரப் பல்கலைக்கழகம்]] அமைக்க நீண்ட நாட்களாகத் தெலுங்கு தலைவர்கள் கொண்டா வெங்கடபய்யா மற்றும் [[பட்டாபி சீதாராமையா]] ஆகியோர் வேண்டி வந்தனர். 1921 இல் நீதிக்கட்சி அரசு இக்கோரிக்கையை நிறைவேற்ற ஒரு முன்மொழிவைத் தயார் செய்தது. சி. நடேச முதலியார் இதனை எதிர்த்தார். ஆந்திரம் / ஆந்திரப் பலகலைக்கழகம் ஆகியவற்றை வரையறுப்பது கடினம் எனத்கடினமெனத் தமிழ் உறுப்பினர் வாதிட்டனர். அதிருப்தி கொண்டிருந்த ஜே. என். ராமநாதன், ராமநாதபுர அரசர் ராஜேசுவர சேதுபதி ஆகியோரை திருப்திப்படுத்த தியாகராய செட்டி தமிழரான [[டி. என். சிவஞானம் பிள்ளை]]யை அமைச்சராக்கினார். இதற்குப் பிரதிபலனாக ஆந்திரப் பல்கலைக்கழக சட்டம் தமிழ் உறுப்பினர்களின் ஆதரவுடன் நவம்பர் 6, 1925 இல் நிறைவேற்றப்பட்டது. 1926 இல் ஆந்திரப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு சி. ஆர். ரெட்டி அதன் முதல் துணை வேந்தரானார். இதனால் தமிழர்களுக்காகத் தனியாக ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. [[சென்னைப் பல்கலைக்கழகம்]] பிராமணர் ஆதிக்கத்தில் இருப்பதால் பிராமணரல்லாதோருக்கு அங்கு வாய்ப்புகள் இல்லை என்று சொல்லப்பட்டது. புதிய பல்கலைக்கழகத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய மார்ச் 22, 1926 இல் சிவஞானம் பிள்ளையின் தலைமையில் தமிழ் பல்கலைக்கழகக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதன் பலனாக 1929 இல் [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்]] துவங்கப்பட்டது. புதிய பல்கலைக்கழகத்துக்குப் பெரிய தொகை ஒன்றை உதவித்தொகையாக வழங்கிய [[அண்ணாமலை செட்டியார்|அண்ணாமலை செட்டியாரின்]] பெயர் இடப்பட்டது.<ref name="Irschick8">{{Harvnb|Irschick|1969| pp=244–251}}</ref><ref name="Raj Kumar">{{cite book | title=Essays on Indian renaissance| edition=| author=Raj Kumar| year=2003| pages=265| publisher=| isbn=9788171416899}}</ref>
 
===கட்டமைப்பு===
{{double image|right|Madras 1921.jpg|150|Madras 1955 reduced.jpg|150|1921 இல் சென்னையின் நிலப்படம் (நெடுங்குளம் நிலமாக்கப்படவில்லை)|1955 இல் சென்னையின் நிலப்படம், [[தி. நகர்]] உருவான பின்}}
 
நீதிக்கட்சியின் இரண்டாவது முதல்வர் பனகல் அரசரின் ஆட்சி காலத்தில் சென்னை நகரின் கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டன. குறிப்பாககுறிப்பாகத் தற்போதைய [[தியாகராய நகர்]] பகுதி உருவாக்கப்பட்டது. பனகல் அரசரின் அரசு நகரின் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்குதொகைக்குப் போதிய குடியிருப்பு வசதிகள் செய்து தரதரச் செப்டம்பர் 7, 1920 அன்று சென்னை நகரத் திட்டச் சட்டத்தை நிறைவேற்றியது.<ref name="madrastownplanningact1920">{{Cite web|url=http://kilalibrary.googlepages.com/THEMADRASTOWNPLANNINGACT1920.htm|title=Madras Town Planning Act 1920|accessdate=2008-10-28|publisher=Kerala Institute of Local Administration}}</ref>
 
5 கிமீ நீளமும் 2 கிமீ அகலமும் உடைய நெடுங்குளம் என்ற நீர்நிலை அக்காலத்தில் நகரத்தின் மேற்கு எல்லையில் [[நுங்கம்பாக்கம்]] முதல் [[சைதாப்பேட்டை]] வரை நீண்டிருந்தது. 1923 இல் இந்நீர்நிலை நீரகற்றப்பட்டு மேடாக்கப்பட்டது.<ref name="tnagar">{{cite news | last=Varghese | first=Nina | title= T.Nagar: Shop till you drop, and then shop some more | date=29 August 2006 | url =http://www.thehindubusinessline.com/2006/08/29/stories/2006082903011900.htm | work =[[Business Line]]|publisher =[[The Hindu Group]] | accessdate = 4 March 2010}}</ref> 1911 இல் நெடுங்குளத்துக்கு மேற்கே பிரித்தானிய அரசு [[மாம்பலம்]] கிராமத்தில் ஒரு தொடருந்து நிலையத்தைக் கட்டியிருந்தது. பனகல் அரசர் 1923 இல் அதன் அருகே ஒரு குடியிருப்புப் பகுதியை உருவாக்கினார். அதற்குஅதற்குத் தியாகராய செட்டியின் நினைவாக “தியாகராய நகர்” (அல்லது தி. நகர்) என்று பெயரிட்டார்.<ref name="tnagar" /> [[பனகல் பூங்கா]] என்ற பூங்காவைச் சுற்றி தி. நகர் அமைக்கப்பட்டது.<ref name="tnagar" />
இப்புதிய பகுதியின் சாலைகளுக்கும் பிற பகுதிகளுக்கும் நீதிக்கட்சி பிரமுகர்களின் பெயர்கள் இடப்பட்டன. ([[முகமது உஸ்மான்]], [[முகமது ஹபிபுல்லா]], [[ஓ. தணிகாசலம் செட்டியார்]], [[நடேச முதலியார்]], [[டபிள்யூ. பி. ஏ. சௌந்திரபாண்டியன் நாடார்]] ஆகியோர் இதில் அடக்கம்).<ref name="tnagar" /><ref>{{cite web|url=http://www.hindu.com/2008/09/18/stories/2008091854650400.htm|title=DMK will not forsake rights of depressed classes, says Karunanidhi |date=18 September 2008|work=[[தி இந்து]]|publisher=[[The Hindu Group]]|accessdate=4 March 2010}}</ref><ref>{{cite web|url=http://www.hindu.com/mp/2008/12/22/stories/2008122250770500.htm|title= A street name unchanged |last=[[S. Muthiah]]|date=22 December 2008|work=[[தி இந்து]]|publisher=[[The Hindu Group]]|accessdate=4 March 2010}}</ref>
 
வரிசை 349:
 
===அரசியல் தாக்கம்===
நீதிக்கட்சி சென்னை மாகாணத்தின் முன்னணி பிராமணரல்லாதோர் அரசியல் அமைப்பாகஅமைப்பாகச் செயல்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதி முதலே பிராமணரல்லாதோர் இயக்கங்கள் செயல்பட்டு வந்தாலும் நீதிக்கட்சியே முதல் பிராமணரல்லாதோர் அரசியல் இயக்கமாகும். இரட்டை ஆட்சி முறையின் போதுமுறையின்போது அது நிருவாகத்தில் பங்கேற்றமை சென்னை மாகாணத்தின் படித்த மேட்டுக்குடி மக்களுக்கு அரசுடன் ஒத்துழைப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. நீதிக்கட்சியும் திராவிடர் கழகமும் 1967 முதல் தொடர்ச்சியாகத் தமிழ் நாட்டை ஆட்சி புரிந்து வரும் [[திராவிட முன்னேற்றக் கழகம்]], [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] போன்ற தற்கால திராவிட கட்சிகளின் அரசியல் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன.<ref name="rajaraman8">{{Harvnb|Rajaraman|1988| loc=ch. 8 (Conclusion)}}</ref><ref name="Irschick9">{{Harvnb|Irschick|1969| pp=351–357}}</ref><ref name="rajaraman5"/>
 
== சர்ச்சைகள்==
=== பிராமணர் குறித்தபிராமணர்குறித்த நிலைப்பாடு===
பிராமணரல்லாதோருக்கான அரசியல் அமைப்பாகவே நீதிக்கட்சி தொடங்கப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் அது பிராமணர்கள் உறுப்பினர்களாவதைத் தடை செய்திருந்தது. ஆனால் ஐரோப்பியர் போன்ற பிற வகுப்பினர்களைப் போலவே பிராமணர்களும் பார்வையாளர்களாகக் கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர்.<ref name="encyclopediapolitcalpartiesp465">{{Harvnb|Ralhan|2002| p=465}}</ref> 1926 தேர்தல் தோல்விக்குப் பின்னர் இக்கொள்கையைக் கைவிட்டு அனைத்து தரப்பினரையும் கட்சி அனுமதிக்க வேண்டும் என்றும் தேசியவாத நிலையை எடுக்க வேண்டுமென்றும் குரல்கள் எழுந்தன. ஆனால் இக்கோரிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு (குறிப்பாக ஈ. வே. ராமசாமியின் ஆதரவாளர்களிடமிருந்து) இருந்தது. 1929 இல் நடைபெற்ற ஒரு மும்முனைக் கூட்டத்தில் (நீதிக்கட்சி மற்றுமிரு காங்கிரசல்லாத குழுக்கள்) பிராமணர்கள் கட்சி உறுப்பினர்களாவதற்கு இருந்த தடையை நீக்க ஒரு தீர்மானம் இயற்றப்பட்டது. அக்டோபர் 1929 இல் நெல்லூரில் நடைபெற்ற கட்சியின் பதினோராவது வருடாந்திர மாநாட்டில் கட்சி செயற்குழு இதற்காக ஒரு தீர்மானத்தை முன்வைத்தது.<ref name="encyclopediapoliticalpartiesp166">{{Harvnb|Ralhan|2002| pp=164–166}}</ref> அதனை ஆதரித்து முனுசாமி நாயுடு பின்வருமாறு பேசினார்:
 
<blockquote>ஒரு குறிப்பிட்ட சாதியினரை நாம் தடை செய்யும் வரை, மாகாணத்தின் அனைத்து தரப்பு மக்களின் பிரதிநிதிகளாக நாம் நம்மைக் கருத முடியாது. நாம் எதிர்பார்ப்பது போல அரசியல் சீர்திருத்தங்கள் ஏற்பட்டு மாகாணங்களுக்குத் தன்னாட்சி வழங்கப்பட்டால், நாம் அனைத்து சாதிகளுக்காகப் பேசும் அமைப்பாக மாறும் நிலையில் இருக்க வேண்டும். நமது அமைப்பின் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் பிராமணரகளை உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ள என்ன தயக்கம்?. ஒரு வேளை நாம் தடையை நீக்கினாலும் கூடகூடப் பிராமணர்கள் நம் அமைப்பில் சேராது போகலாம். ஆனால் அதற்குபின் நாம் அவர்களைச் சேர விடாது செய்கிறோம் என்ற குற்றச்சாட்டு இராது.<ref name="encyclopediapoliticalpartiesp166"/></blockquote>
 
முன்னாள் கல்வி அமைச்சர் [[ஏ. பி. பாட்ரோ]] நாயுடுவின் கருத்தை ஆதரித்தார். ஆனால் இத்தீர்மானம் ஈ. வே. ராமசாமியாலும் [[ஆர். கே. சண்முகம் செட்டியார்|ஆர். கே. சண்முகம் செட்டியாராலும்]] கடுமையாக எதிர்க்கப்பட்டதால் தோல்வியடைந்தது. பிராமணர்களை உறுப்பினர்களாக அனுமதிப்பதை எதிர்த்துப் பேசிய ராமசாமி:
 
<blockquote>பிராமணர்களது செயல்பாட்டால் கோபம் கொண்ட பிராமணரல்லாதோர் அதிக அளவில் மெல்ல நீதிக்கட்சியின் பக்கம் திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் பிராமணர்களைபிராமணர்களைக் கட்சி உறுப்பினர்களாக அனுமதிப்பது முட்டாள்தனம்.<ref name="encyclopediapoliticalpartiesp166"/></blockquote>
 
என்றார். அக்டோபர் 1934 வரை நீதிக்கட்சியில் பிராமணர் உறுப்பினராக இருந்த தடை நீடித்தது.<ref name="Irschick22"/> நீதிக்கட்சியுடன் போட்டியிட வேண்டிய தேவையால் காங்கிரசு கட்சி தனது அதிகாரக் கட்டமைப்பில் பல பிராமணரல்லாதோருக்கு இடமளிக்க வேண்டியதாயிற்று. நீதிக்கட்சியின் செயல்பாடுகள் நடப்பில் இருந்த சமூக அடுக்கமைப்பைக் குலைத்ததுடன் பிராமணர் - பிராமணரல்லாதோர் இடையே நிலவிய வெறுப்பினை அதிகரித்தது.<ref name="Irschick9"/>
 
===தேசியவாதம்===
நீதிக்கட்சி [[பிரித்தானியப் பேரரசு]]க்கு விசுவாசமாக இருந்தது. தனது ஆரம்ப நாட்களில் ஹோம் ரூல் இயக்கத்தை எதிர்த்தது. இந்தியாவின் நடுவண் நாடாளுமன்றத்துக்கும் உறுப்பினர்களை அனுப்பவில்லை. 1916-20 காலகட்டத்தில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு பெற்று அரசியல் முறையில் பங்கேற்பதில் தனது கவனத்தை செலுத்தியது. ஒத்துழையாமை இயக்கத்தின் போதுஇயக்கத்தின்போது ''மெட்ராஸ் மெயில்'' போன்ற ஐரோப்பிய ஆதரவு இதழ்களுடன் இணைந்து காந்தியையும் தேசியவாதிகளையும் எதிர்த்தும் சாடியும் வந்தது.<ref name="Irschick2"/><ref name="Irschick10"/>
 
ஆனால 1920 களின் நடுப்பகுதியில் தேசியவாதக் கொள்கைகளைகொள்கைகளைத் தனதாக்கத் தொடங்கியது. [[காதி]] மற்றும் [[சுதேசி இயக்கம்|சுதேசி இயக்கங்களுக்கு]] முன் காட்டிய எதிர்ப்பைக் கைவிட்டு ஆதரவளிக்கத் தொடங்கியது. 1925 இல் கட்சி வருடாந்திர மாநாட்டில் உள்ளூர் தொழிற் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஒரு தீர்மானம் இயற்றியது. இந்த மாற்றம் சென்னை மாகாணத்தில் அதிகரித்து வந்த சுயாட்சி மற்றும் காங்கிரசு கட்சிகளின் செல்வாக்குடன் போட்டி போட நீதிக்கட்சிக்கு உதவியது.<ref name="Irschick11">{{Harvnb|Irschick|1969| pp=262–263}}</ref> ”சுயாட்சி” என்ற சொல் நீதிக்கட்சியின் சட்ட அமைப்பிலும் சேர்க்கப்பட்டது. கட்சியின் சென்னைப் பிரிவு சி. ஆர். ரெட்டியால் இம்மாற்றம் ஏற்பட்டது. நீதிக்கட்சியைப் பொறுத்தவரை சுயாட்சி என்பது முழு விடுதலை அல்ல; பிரித்தானிய மேற்பார்வையின் கீழ் பகுதி தன்னாட்சி உரிமை பெறுவதே. அதன் சட்ட அமைப்பில் “ அமைதியான சட்டத்துக்கு உட்பட்ட முறையில் முயன்று விரைவில் பிரித்தானியப் பேரரசின் ஒரு அங்கமாக இந்தியாவுக்கு தன்னாட்சி பெற [முயல வேண்டும்]” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 
[[ஜாலியன்வாலா பாக் படுகொலை]]யை நீதிக்கட்சி கண்டித்ததா என்பது பற்றிபற்றித் தெளிவான வரலாற்றுப் பதிவுகள் இல்லை. வரலாற்றாளர்களிடையே இது குறித்துஇதுகுறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.<ref name ="rajaraman4"/><ref name="Irschick4"/><ref name="encyclopediapoliticalpartiesp170">{{Harvnb|Ralhan|2002| p=170}}</ref> தேசியவாதக் கொள்கையை நோக்கி 1920 களில் தொடங்கிய கட்சியின் பயணம் 1930 களில் முனுசாமி நாயுடு மற்றும் பொபிலி அரசரின் தலைமையில் தடைபட்டது. [[உப்பு சத்தியாகிரகம்|சட்டமறுப்பு இயக்கத்தின்]] போது பிரித்தானிய அரசின் கடுமையான நடவடிக்கைகளை நீதிக்கட்சி அரசுகள் கண்டிக்கவில்லை.<ref name="Manikumar1"/> ஆனால் நாடெங்கும் தேசியவாத உணர்ச்சிகள் மிகுந்ததால் காங்கிரசு உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றிப் பெறுவதைக் கண்டபின்னால் 1934 இல் மீண்டும் நீதிக்கட்சி தேசியவாதக் கொள்கைகளைக் கையில் எடுத்தது. காங்கிரசின் செல்வாக்கை எதிர்கொள்ள ஈ. வே. ராமசாமி மற்றும் அவரது சுயமரியாதை இயக்கத்தின் உதவியை நாடியது. 1930களில் நீதிக்கட்சியிலிருந்து தூரச் சென்ற ராமசாமி, அக்கட்சி தனது சோசலிசக் கருத்துகள் நிறைந்த [[ஈரோடு திட்டம்|ஈரோட்டு செயல்திட்டத்தை]] ஏற்றுக் கொண்டவுடன் மீண்டும் அதனுடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். இப்புதிய திட்டத்தில் [[மதுவிலக்கு]] போன்ற காங்கிரசின் கொள்கைகளும் இடம் பெற்றிருந்தன.<ref name="Irschick23"/>
 
===தலித்துகள் மற்றும் முசுலிம்களின் ஆதரவிழப்பு ===
1920 இல் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி பிராமணரல்லாத அனைத்து பிரிவினரின் நலனிற்காகநலனிற்காகச் செயல்படுவதாகக் கூறினாலும் மெல்ல பல சமூகத்தினரின் ஆதரவை இழந்தது. தியாகராய செட்டி மற்றும் பனகல் அரசரின் தலைமையின் கீழ் பிராமணரல்லாத சில உயர் சாதியினரின் கட்சியாக மாறியது; தலித்துகள் மற்றும் முசுலிம்கள் கட்சியை விட்டு விலகினர். முதல் நீதிக்கட்சி அரசினை முசுலிம் சட்டமன்ற உறுப்பினர்கள் முதலில் ஆதரித்தனர் ஆனால் பதவி வழங்கல்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பின் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டனர்.<ref name="Irschick12"/> முசுலிம்களின் அதிருப்தி முசுலிம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் அலி கானின் பின்வரும் கூற்றால் (1923) விளங்கும்:
 
<blockquote> எனது அனுபவத்தில் பதவி வழங்கும் தருணங்களில் எல்லாம் அவர்கள் [நீதிக்கட்சியினர்] ஒரு முதலியார், நாயுடு, செட்டியார் அல்லது பிள்ளை சமூகத்தினரையே தெரிவு செய்கிறார்கள். ஒரு இசுலாமியரைத் தேர்வு செய்வதில்லை.<ref name="Irschick12">{{Harvnb|Irschick|1969| pp=258–260}}</ref></blockquote>
வரிசை 379:
தலித்துகளுடனான பிரிவும் இக்காலகட்டத்தில் தான் நடந்தது. டி. எம். நாயரின் மரணத்துக்குக் பின் தலித்துக்கள் நீதிக்கட்சியில் ஓரங்கட்டப்பட்டனர். புளியந்தோப்பு கலவரங்கள் (பி அன் சி தொழிற்சாலை வேலை நிறுத்தம்) பிராமணரல்லாத உயர் சாதிகளான வெள்ளாளர்கள், பெரி செட்டியார்கள், பலிஜா நாயுடுகள் கம்மா மற்றும் காப்புகள் ஆகியோருக்கும் தலித்துகளுக்கும் இடையேயான உறவு கசக்கக் காரணமாக அமைந்தன. மே 11, 1921 இல் கர்னாடிக் நெசவு ஆலையில் வேலை செய்து வந்த தலித்துகளும் உயர் சாதி இந்துகளும் வேலை நிறுத்ததைத் தொடங்கினர். ஜூன் 20 ம் தேதி பங்கிங்காம் ஆலை தொழிலாளர்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். ஆனால் நிருவாகம் தலித்து தொழிலாளர்களை விரைவில் சமாதானப் படுத்தியதால் அவர்கள் வேலைக்குத் திரும்பினர். உயர் சாதி இந்துக்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். இதனால் இரு பிரிவினர் இடையே பகை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உயர் சாதி இந்துக்களுக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டனர். நீதிக்கட்சித் தலைவர்கள் பிரித்தானிய அரசு தலித்துகளுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம் சாட்டினர்.<ref name="Irschick4"/> ''ஜஸ்டிஸ்'' இதழ் பின்வருமாறு எழுதியது:
 
<blockquote>இவ்வளவு மோசமான நிலை உருவாகக் காரணம் தொழில் துறை அரசு அலுவலர்கள் ஆதி திராவிடர் தலித்துகளுக்கு அளவுக்கு அதிகமாகஅதிகமாகச் செல்லம் கொடுத்ததும் சில காவல்துறை அதிகாரிகள் தங்களை அறியாமலே தலித்துகளை ஊக்குவிப்பதும் தான் எனஎனப் பொது மக்கள் கருதுகின்றனர்.<ref name="Irschick4"/></blockquote>
 
அக்டோபர் 12 இல் ஓ. தணிகாசல செட்டி இந்தப் பிரச்சனையைபிரச்சனையைச் சென்னை சட்டமன்றத்தில் எழுப்பினார். இதனைத் தொடர்ந்து நீதிக்கட்சி உறுப்பினர்களுக்கும் சென்னை ஆளுனரின் நிருவாகக் குழுவின் சட்டத் துறை உறுப்பினரான எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் என்ற பிராமணர் மற்றும் உள்துறை உறுப்பினரான லயனல் டேவிட்சன் என்ற ஆங்கிலேயருக்கும் இடையே ஒரு காரசாரமான விவாதம் நடந்தது. டேவிட்சன் இவ்விவகாரத்துக்கான மொத்த பொறுப்பும் தொழில் துறை அமைச்சகத்தையே சாரும் என்று குற்றம் சாட்டினார். “இது வேலை நிறுத்தம் செய்பவர்களுக்கும் செய்யாதவர்களுக்குமிடையே நடக்கும் ஒரு தொழிற் பிரச்சனை மட்டுமல்ல. இரு கோஷ்டிகளுக்கிடையே சாதிக் காழ்ப்புணர்வால் நடந்த மோதல்” என்று டேவிட்சன் கூறினார். சட்டமன்றத்தில் தலித்துகளின் பிரதிநிதியான [[எம். சி. ராஜா]] டேவிட்சனின் கூற்றை ஆமோதித்தார். ''மெட்ராஸ் மெயில்'' இதழில் ஒரு தலித் வாசகர் முன்பு டி. எம். நாயர் பிராமணர்களைக் கண்டித்த அதே பாணியில் நீதிக்கட்சியைக் கண்டித்தார். புளியந்தோப்பு சம்பவங்கள் நடந்து சில காலத்தில் ராஜாவும் தலித்துகளும் நீதிக்கட்சியை விட்டு விலகினர்.<ref name="Irschick4"/><ref>{{cite book|last=Mendelsohn|first=Oliver |coauthors= Marika Vicziany|title=The untouchables: subordination, poverty, and the state in modern India|publisher=[[கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|year=1998|series=Contemporary South Asia|volume=4|pages=94–95|isbn=9780521556712|url=http://books.google.com/books?id=FGbp9MjhvKAC&pg=PA94}}</ref>
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/நீதிக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது